தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ஒரு பாம்புப் பண்ணையில கண்ணாடி விரியன் பாம்பு இருந்தாலும், அதிலே முகம் பார்த்து தலையை எல்லாம் சீவிக்க முடியாது. - கண்ணாடி முன்னாடி நின்று தத்துவம் யோசிப்போர் சங்கம் - மு.மதிவாணன், அரூர்.
‘‘அந்த டாக்டரை எதுக்கு அரெஸ்ட் பண்றாங்க..?’’ ‘‘வருமானத்துக்கு அதிகமா கிட்னிகளை சேர்த்துட்டாராம்...’’ - பர்வீன் யூனுஸ், சென்னை-44.
என்னதான் ஒருத்தர் வீணா நம்மகிட்ட வம்பளந்தாலும,¢ அவர் அளந்தது எத்தனை கிலோமீட்டர்னு யாராலும் கணக்கு சொல்ல முடியாது! - வாயாடி மனைவியிடம் போராடி வாழ்ந்து கொண்டிருப்போர் சங்கம் - பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்கார்..?’’ ‘‘தலைவருக்கு மிகவும் பிடித்தது திஹார் ஜெயிலா, புழல் ஜெயிலான்னு கட்சித் தொண்டர்கள் பட்டிமன்றம் நடத்தறாங்களாம்...’’ - பெ.பாண்டியன், காரைக்குடி.
என்னதான் ஒருத்தர் பெரிய மேஸ்திரியா இருந்தாலும், அவரால மண்டை ஓட்டை வச்சு கூரை வேய முடியுமா? - டெர்ரராக தத்துவம் சொல்லி டர்ரியல் கிளப்புவோர் சங்கம் - எஸ்.கோபிநாத், சேலம்.
‘‘ராத்திரி உங்க வீட்ல சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சே..?’’ ‘‘ஹி... ஹி... என் பொண்டாட்டிக்கு நடுராத்திரியில என்னை எழுப்பித் திட்டற வியாதி இருக்கு!’’ - எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
‘‘தலைவர் மேடைல பேசறதுக்கு முந்தி பொதுமக்களுக்கு ஒரு லிஸ்ட் குடுக்கறாங்களே... எதுக்கு?’’ ‘‘தலைவருக்கு ஒருசில பொருட்கள் அலர்ஜி இருக்கறதால, அவர் மேல எதை வீசலாம்னு லிஸ்ட் குடுக்கறாங்க..!’’ - அம்பை தேவா, சேரன்மகாதேவி.
|