அல்பம் அலமேலு





‘‘நாலு நாளா ஆபீஸ் போகாம வீட்ல இருந்தே ஒர்க் பண்றீங்க இல்ல... அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க. நீங்க காஷ்மீர் டூர் போயிருக்கறதா பக்கத்து வீட்டு மாமாகிட்ட சொல்லியிருக்கேன்!’’

‘‘பிளஸ் 2 பசங்களுக்குத்தான் கட் ஆஃப் மார்க்குன்னு சொன்னா, இவ பையனுக்கு யூ.கே.ஜி.யிலயும் நல்ல கட் ஆஃப் இருக்குன்னு அலமேலு சாதிக்கறாடி!’’

‘‘ஆனாலும் இந்த அல்பத்தோட அலப்பரை தாங்கலடி! பையன் ஸ்கூல்ல தடுக்கி விழுந்ததைப் போயி, தீம் பார்க் ரோலர்கோஸ்டர்ல விழுந்துட்டதா சொல்லிக்கிட்டு திரியறா...’’

‘‘சத்தம் போட்டு மானத்தை வாங்காதீங்க... சும்மா வாங்கற மாதிரிதான் விசாரிக்கணும்! இல்லன்னா எப்ப நாம இந்த மாதிரி நியூ மாடல் ஃபாரீன் கார்ல ஜம்முன்னு ஏசியில்
உக்காந்து பாக்கறது?’’

‘‘கார் பார்க்கிங்ல உங்க காரோட ரியர் மிர்ரர் எங்க ஸ்பேஸ்ல நீட்டிக்கிட்டு இருக்கு... பேசாம அதுக்கு மாசம் நூறு ரூபா ரென்ட் குடுத்துடுங்களேன் சார்!’’

‘‘நம்ம வீட்ல கேபிள் வரலைன்னு பொய் சொல்லிட்டு, பக்கத்து வீட்ல ரெண்டு சீரியல் பார்த்துட்டு வந்துடறேன்... கரன்ட் செலவு மிச்சம் பாருங்க!’’