குட்டிச்சுவர் சிந்தனைகள்





முக்காவாசி பேரு நடக்க முடியாத பெருசுகளா இருந்தா நாடாளுமன்றம் முடக்கம்தான் ஆகும். நல்லவேளை, கசாப்பு கடைசி ஆசையா, ‘நாடாளுமன்றம் முடக்கப்படாம நடக்கிறதைப் பார்க்கணும்’னு கேட்கலை. நாடாளுமன்றம் நடக்காததால் தினம் நிகழும் கோடிக்கணக்கான நஷ்டத்தை ஈடுகட்ட முத்தான மூன்று யோசனைகள்...

1) சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் எடுக்க சினிமாக்காரங்களுக்கு தின வாடகைக்கு விடலாம், டி.விகாரங்க நடன நிகழ்ச்சி நடத்த விடலாம்.
2) உள்ளே இருக்கும் மேஜை நாற்காலிகளை எடுத்துட்டு, மழை சீசனில் இன்டோர் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம்.
3) மற்ற நாட்களில் துணி காயப் போட, கார் பார்க்கிங் செய்ய அனுமதிக்கலாம்.

அன்புள்ள மாப்ள ‘மலேரியா’ வாசுதேவனுக்கு,தமிழ்நாட்டில் இருந்து ‘டெங்கு’நாதன் எழுதுவது. நலம். நலம் உ(அ)றிய ஆவல். சென்ற வாரம் நீ எழுதிய கடிதம் கிடைத்தது. டெல்லியில் சத்தான ரத்தம் கிடைக்காமல் நீ வறுமையில் வாடுவதைப் படித்தபோது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கெட்டும் பட்டணம் போவதெல்லாம் வீணாப் போன மனுஷங்களுக்குத்தான், நமக்கில்ல. நீ என்னா பண்ற... உடனே எதாவது சரக்கு லாரி தார்பாய புடிச்சு, தமிழ்நாடு வந்து சேரு. தமிழ்நாட்டுல எங்க வேணா நீ கடிச்சு ரத்தம் உறியலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் வேலை செய்யாத 16 மணி நேரமும் நமக்கு வேலை நேரம்தான். கொசு பேட் முதல் கொசுவர்த்தி வரை எப்படி தப்பிக்கிறதுங்கிற 15 நாள் ட்ரெயினிங் முடிச்ச உடனே டியூட்டில ஜாயின் பண்ணிக்கலாம். உடனே கிளம்பி வரவும். வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்கள் உன்னை வரவேற்க கரன்ட் கட்டுடனும், திடகாத்திர உடல் கட்டுடனும் காத்திருக்கிறார்கள்.
மற்றவை நேரில்.
அன்புடன்,
மச்சான் ‘டெங்கு’நாதன்

ஆல்தோட்ட பூபதி

காதலிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னால பேங்க்ல கூட பெரியளவுல பேலன்ஸ் வச்சிருந்தேன்; ஆனா இப்ப மொபைல்ல கூட போதிய பேலன்ஸ் இல்ல. காதலிக்கிறதுக்கு முன்னால, யாராவது மொக்க போட ஆரம்பிச்சா எஸ்கேப் ஆகிடுவேன்; இப்ப எவன் எஸ்கேப் ஆக நினைச்சாலும், விடாம புடிச்சு நானே மொக்க போடுறேன். காதலி வர்றதுக்கு முன்னால பார்த்துப் பார்த்து செலவு செய்வேன்; காதலி வந்ததுக்கப்புறம் அவ பாக்குறதுக்கெல்லாம் செலவு செய்யறேன். முந்தியெல்லாம் எதிலும் யோசிச்சு முடிவெடுப்பேன்; இப்போஅவ என்னா/ எப்போ முடிவெடுப்பாள்னு யோசிக்கிறேன். மொத்தத்துல கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கிறதுக்கு முன்னாடி எப்பவுமே சந்தோஷமா இருந்தேன். இப்போ எப்பவாவதுதான் சந்தோஷமா இருக்கேன்.

சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் நடந்த கால கட்டங்களில், நிலாவையே அணுகுண்டு வைத்துத் தகர்க்க அமெரிக்கா ‘புராஜெக்ட் ஏ 119’ என்ற திட்டத்தை உருவாக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அப்பப்பா... கொஞ்சம் ஏமாந்திருந்தா அமெரிக்காகாரனுங்க ரஷ்யா மேல இருக்கிற கடுப்புல சூரியன்லயே சுடுதண்ணி ஊத்தி சூட்ட அணைக்க முயற்சி செஞ்சிருப்பாங்க. கடல் தண்ணிய புடுங்கி விட்டு கடலை காலி பண்ணியிருப்பாங்க. இமயமலைக்கு பெரிய கம்பளிப் போர்வைய போர்த்தி விட்டிருப்பாங்க. மழைய நிறுத்தணும்னு ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் குடை புடிச்சிருப்பாங்க. கோழி முட்டையில சத்து அதிகமா இருக்கணும்னு கோழிக்கு ஊசி போட்டு லாரி சைஸ் ஆக்கியிருப்பாங்க. சீக்கிரமா போயி வரணும்னு அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில பெருங்கடல் மேல பெரிய ரோடே போட்டிருப்பாங்க. நல்லவேளை... சோவியத் யூனியன் உடைஞ்சுது; உலகம் தப்பிச்சுது.

தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குலச் சிங்கமா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்! அப்பா-அம்மாவோ, வாத்தியாரோ, யாராவது ‘அறிவுகெட்டவனே’ என்று திட்டினால், டென்ஷன் ஆகாதீர்கள். ‘அறிவு கெட்டவனை’ பிரித்து பாருங்கள். அறிவு+நிமீt+வனே. ஆக, அதை ‘அறிவு பெற்றவனே’ என பொருள் கொள்ள வேண்டும். நம்மை அதிகம் திட்டப் பயன்படும் இன்னொரு வார்த்தை, ‘விளங்காதவனே’. அதையும் பிரியுங்கள். விளங்கு+ஆதவனே. ஆதவன் என்றால் சூரியன். அதாவது விளங்குவதில் சூரியனே என்று அர்த்தம். இப்படி தண்டச்சோறையும் பிரிப்போம். தண்டம்+சோறு. தண்டம் என்றால் ஆங்கிலத்தில் Fine   என்று அர்த்தம். திவீஸீமீ என்பதற்கு ‘நல்லது’ என்ற அர்த்தமும் உண்டு. ஆக, தண்டச்சோறு என்றால் நல்ல சோறு என்று அர்த்தப்படும். எதையும் ரிவர்ஸாக பார்ப்போம்; ரிலாக்ஸாக இருப்போம்.

பொண்டாட்டியை பொறந்த வீடு
அனுப்புவது எப்படி?
மிஷன் ஸ்டார்ட்ஸ்!

1) மனைவியை அன்பாக அரவணைத்த படி தூங்கும்போது, மின்விசிறி போல ஆரம்பித்து, கிரைண்டர் போல நகர்த்தி, மிக்சி அரைப்பது போல குறட்டை விட வேண்டும். ஆரம்பத்தில் திட்டுகளும், சில பல உதைகளும் கிடைக்கலாம். முயற்சியைக் கை விட வேண்டாம். மீதியை குறட்டை சத்தம் பார்த்துக்கும்.

2) நம்ம ஊரிலிருந்து நம்ம சொந்த பந்தங்கள் பத்து பதினைந்து பேரு, பத்து நாளைக்கு நம்ம வீட்டுல தங்க வர்றதா நாமளே நம்ம வீட்டுக்கு மொட்ட கடுதாசி போடணும். பிரிச்சுப் படிக்கிற மனைவி, ‘மாமியாருக்கு உடம்பு சரியில்ல’ன்னு கிளம்பிடுவாங்க.

3) வீட்டுல சின்ன வயது வேலைக்காரப் பொண்ணு இருந்தா, மனைவி பார்க்கும் தூரத்தில், ‘‘தங்கச்சி, இந்த புடவைய வச்சுக்கம்மா’’ன்னு புதுசா ரெண்டு புடவை வாங்கித் தரணும். இதுல தொழில் ரகசியம் என்னன்னா, ‘தங்கச்சி’ங்கிற வார்த்தை அந்தப் பொண்ணுக்கு மட்டும்தான் கேட்கணும்; மீதியெல்லாம் மனைவிக்குக் கேட்கணும்.

மேற்படி மூணு ஐடியாவ செயல்படுத்துங்க... மனைவி மொத்தமாகவோ, சில்லறையாகவோ பொறந்த வீடு போக சான்ஸ் இருக்கு!