ஜோக்ஸ்




‘‘தலைவருக்கு கம்ப்யூட்டர் அறிவே இல்லேன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘கம்ப்யூட்டர்ல இருக்கிற பைல்களை தூசி தட்டி வைக்கச் சொல்லி வேலைக்காரன் கிட்ட உத்தரவு போடறாரே!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘கட்சியின் வளர்ச்சிக்காக எதையும் செய்யத் தயார்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் தலைவரே?’’
‘‘ராஜினாமா பண்ணச் சொல்றாங்கய்யா..!’’
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘நிச்சயமா அவர் போலி டாக்டர்தான்னு எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றே..?’’
‘‘உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கணும்னா, உங்க ஏரியா கவுன்சிலரை கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்றாரே!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘தலைவருக்கு தண்ணி வாங்கித் தந்து போலீஸ்காரங்க உண்மையை கக்க வச்சுட்டாங்களாம்...’’
‘‘அடப்பாவி... குறுக்கு விசாரணை பண்றதா சொல்லி, சரக்கு விசாரணை பண்ணிட்டாங்களா?’’
- வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி.

‘‘எனக்கு ஸ்வீட்னா ரொம்பப் பிடிக்கும் டாக்டர்...’’
‘‘உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது. ஆபரேஷன் தியேட்டருக்குள்ள போகும்போது சொல்லுங்க, போதும்!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘தலைவர் பண்றது
கொஞ்சம் கூட சரியில்லே...’’
‘‘ஏன்... என்ன செய்தார்?’’
‘‘அவரோட உருவ பொம்மையைக் கொளுத்தினதுக்குப் போய், கட்சிக் கொடியை அரைக்கம்பத்துல பறக்க விடச் சொல்றாரே!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

இரும்புப்பெட்டியை இரும்புல செய்வாங்க; மரப்பெட்டியை மரத்துல செய்வாங்க. அப்ப தீப்பெட்டியை தீயிலயா செய்வாங்க?
- எந்தப் பக்கம் உரசுனாலும்
சொரணையின்றி திரிவோர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.