தத்துவம் மச்சி தத்துவம்



உடம்புல ஃபிராக்சர்னா மாவுக்கட்டைப் போட்டு எலும்பை சேர்க்கலாம்; ஜல்லிக்கட்டைப் போட்டு சேர்க்க முடியுமா?
 மாட்டுக்கு மட்டுமின்றி மனுஷனுக்கும் கொம்பு சீவுவோர் சங்கம்

மாட்டுப் பொங்கலுக்கு மாட்டைக் கொண்டாடற நாம, வீட்டுப் பொங்கலுக்கு வீட்டை ஏன் கொண்டாடறதில்லை?
 சின்ன வீட்டிலும் சிந்திப்போர் சங்கம்

‘‘ஆனாலும் தலைவர் சம்சாரம் இவ்வளவு மோசமா இருக்கக் கூடாது...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘பொங்கலுக்கு சேலை எடுக்கக்கூட நாலு பேர் கொண்ட கமிட்டி அமைச்சிருக்காங்களே..!’’

‘தலைவரோட பல் எப்படி உடைஞ்சுது..?’’
‘‘குடிபோதையில கரும்புன்னு நினைச்சு இரும்பு பைப்பை கடிச்சிருக்கார்..!’’

‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘அவருக்கு ‘அரசியல் அடிமாடே’ன்னு எவனோ பேனர் வச்சுட்டானாம்...’’

‘‘உங்க மனைவி செஞ்ச பொங்கலை ஏன் பேஷன்ட்டுக்கு கொடுக்கறீங்க டாக்டர்..?’’
‘‘அவசரத்துக்கு வேற மயக்க மருந்து கிடைக்கலை. அதான்...’’

‘‘ரெய்டுக்கு வந்தவங்களுக்கு என் பொண்டாட்டி செஞ்ச பொங்கல் கொடுத்து உபசரிச்சது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன் தலைவரே?’’
‘‘கொலை முயற்சின்னு கேஸ் போட்டுட்டாங்களே..!’’

‘‘தலைவருக்கு பித்தம் தலைக்கு ஏறிடுச்சின்னு எப்படிச் சொல்ற?’’
‘‘சமத்துவப் பொங்கலுக்கு லட்சுமி மேனன், எமி ஜாக்சன், நஸ்ரியா மூணு பேரும் வரணும்ங்கிறாரே!’’

‘‘என்ன சொல்ற... உன் மனைவி செஞ்ச பொங்கல்ல முந்திரி போட்டு கலக்கியதும் கரண்டி மந்திரி போல ஆயிடுச்சா..?’’
‘‘ஆமாம்! செமையா வளைஞ்சிடுச்சி...’’

‘‘ஜெயில்ல இருக்கும் நம்ம தலைவர், என் மனைவி செய்யும் பொங்கலைக் கிண்டும் கரண்டி மாதிரி...’’
‘‘எப்படிச் சொல்ற..?’’
‘‘எவ்ளோ முயற்சி செஞ்சாலும், வெளியே எடுக்க முடியலையே!’’

‘‘ஊருல உன்னைப் போல பொங்கல் வைக்கிறவங்க ஏகப்பட்ட பேர் இருப்பாங்க போலிருக்கே கமலா...’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘அந்த டாக்டர் போர்டுல ‘பொங்கல் ஸ்பெஷலிஸ்ட்’னு போட்டிருக்காரே!’’

‘‘தலைவர் ஏன் கடுப்பா போறார்..?’’
‘‘தலைவர் பொங்கல் சாப்பிடறதை பாத்துட்டு எவனோ, ‘பொங்கல் ஒரு பானையிலிருந்து மறு பானைக்கு மாறிட்டிருக்கு’ன்னு கமென்ட் அடிச்சிட்டானாம்..!’’

‘‘கபாலி, பொங்கல் வைக்க தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு எதுக்காக ஏட்டு வீட்டுக்குப் போற?’’
‘‘உழவர்களுக்கு உதவுற மாட்டுக்கு மாட்டுப் பொங்கல் கொண்டாடற மாதிரி, எனக்கு உதவுற ஏட்டுக்கு ‘ஏட்டுப் பொங்கல்’ கொண்டாடப் போறேன்!’’

வீ.விஷ்ணுகுமார்