பொங்கல் வாழ்த்து ஞாபகங்கள் எழுத்தாளர் அசோகமித்திரன்



‘‘வாழ்க்கைத்தரம் மாறியிருக்கு. கணினி இல்லாம மனிதர்கள் வாழவே முடியாதுங்கிற நிலை வந்திடுச்சு. எல்லாப் பிள்ளைகளும் அதிவேகத்துல ஓடிக்கிட்டே இருக்காங்க. தேவைகள் அதிகமாயிடுச்சு.  நாம வாழ்ந்த வாழ்க்கை வேற...

பிள்ளைகள் வாழுற வாழ்க்கை வேற... அவங்களுக்கு வேறு மாதிரி வசதிகள் தேவையாயிருக்கு. நம்மள மாதிரி நின்னு நிதானிச்சு அவங்களால எதையும் அனுபவிக்க முடியலே. அதுல அவங்களுக்கு இழப்பும் இருக்குதான். ஆனா, இழப்பையும், பலனையும் ஒப்பிட்டுப் பார்த்தா பலன் அதிகமாத்  தெரியுது. வழக்கமா எனக்கு வாரத்துக்கு 15 கடிதமாவது வரும். இந்த வாரம் ஒரு கடிதம் கூட வரலே. என் மகன் வாரம் ஒரு கடிதம் எழுதுவான். இப்போ அவனும் எழுதுறதில்லை. ஆனா அதுக் காக நான் தனிமைப்பட்ட மாதிரி நினைக்கலே.

கடிதத்தை விட மொபைல்ல கேக்குற அவன் குரல் நெருக்கமான அனுபவத்தைக் கொடுக்குது. கடந்த பல வருஷங்களா நியூயார்க்ல இருந்து என் நண்பர் சார்லி ரயர்ஸன் பொங்கலுக்கு வாழ்த்து  அட்டை அனுப்பிக்கிட்டிருந்தார். போன வருஷத்தில இருந்து அவரும் அனுப்புறதில்லை. மொபைல்ல வாழ்த்து சொல்லிடுறார். பொங்கல் வாழ்த்து எங்கே யும் போகலே. காலம் கொஞ்சம் வேகமாப்  போகுது.’’