சகுனியின் தாயம்‘‘மாமா... ம்... ஆரம்பிக்கட்டும்...’’ என்று சொன்ன துரியோதனனை உற்றுப் பார்த்தார் சகுனி. அவரது உதடுகளில் புன்முறுவல் பூத்தது. ‘‘இது நல்ல நிமித்தம்தானே?’’ சந்தேகத்தைப் போக்க இன்னொரு முறை கேட்டார்.‘‘சகாதேவன் குறித்துக் கொடுத்த நேரம். நிச்சயம் தவறு செய்யாது. தாயத்தை உருட்டுங்கள்...’’

சொன்ன துரியோதனனைப் பார்த்து தலையசைத்துவிட்டு கண்களை மூடிய சகுனி, தன் கரங்களில் தாயத்தை பரபரவென தேய்த்தார். கருவிழிகள் அங்கும் இங்கும் சுழன்றது, மூடிய இமைகளைத்  தாண்டியும் தெரிந்தது. ஒரு முடிவுடன் கண்களை அவர் திறந்தபோது கருவிழிகள் நெருப்பாக தகதகத்தன. தாயத்தை ஆவேசத்துடன் தரையில் உருட்டினார்...
‘‘என்னோட மதிப்பு மூன்று கோடி ரூபாய்...’’  நிதானமாகச் சொன்ன ஸ்டீபனைப் பார்த்து அந்த அறையில் இருந்த ஏழு பேரும் திகைத்தார்கள்.

அதற்குக் காரணம் இருக்கிறது. ஸ்டீபன் அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவர். ‘மெடிகோ’ கம் பெனியின் உரிமையாளர். இவரது நிறுவனத்தின் மருந்துகள்தான் மூன்றாம் உலக நாடுகளில் புழக்கத்தில் இருக்கின்றன. ஆண்டு வருமானமே பல்லாயிரம் கோடி டாலர்களை தாண்டும். அப்படி யிருக்க வெறும் மூன்று கோடி ரூபாய்தான் தன் மதிப்பு என்று அவர் சொன்னால் திகைப்புதானே ஏற்படும்?

‘‘இதுல என் பாங்க் பேலன்ஸ், அசையும்  அசையா சொத்துக்களோட மதிப்பை சேர்க்கலை...’’ தன் முன் இருந்தவர்களின் குழப்பத்தை அளவிட்டபடியே தொடர்ந்தார் ஸ்டீபன்.
‘‘அப்படீன்னா?’’ மோனிகா கேள்வியுடன் அவரை நோக்கினாள்.
‘‘என்னோட உடல் உறுப்புகளோட மதிப்பைச் சொன்னேன்...’’

அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். சுழல் நாற்காலியிலிருந்து எழுந்த ஸ்டீபன், தன் கோட்டை சரி செய்தபடியே பேச ஆரம்பித்தார்.
‘‘நான் ஆரோக்கியமா இருக்கேன். மெடிக்கல் ரிப்போர்ட் அப்படித்தான் சொல்லுது. ஸோ, என்னோட கிட்னி, ரத்தம், கல்லீரல், கணையம், மூளை, எலும்புகள், தலைமுடி, கண்கள்... இதையெல்லாம்  உலக மார்க்கெட்ல தனித்தனியா விற்றா எனக்கு மூணு கோடி ரூபாய் கிடைக்கும்...’’

ஸ்டீபன் எதற்கு அடிபோடுகிறார் என்பது அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது. ஆனாலும் அவர் வாயிலிருந்தே வரட்டும் என்று அமைதியாக இருந்தார்கள்.
‘‘இது தனிப்பட்ட என் ரேட் மட்டுமில்ல. ஆரோக்கியமா இருக்கிற ஒவ்வொரு மனிதனோட ஆர்கன்களுக்கும் இதுதான் விலை. இன்றைய தேதில இந்த மனித உறுப்புகளோட சந்தைக்குத்தான் மதிப்பு  அதிகம்...’’

‘‘யூ மீன் ரெட் மார்க்கெட்?’’ ஸ்காட் வில்லியம்ஸ் இடையில் புகுந்தான்.
‘‘யெஸ்... உலக அளவுல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இப்ப வெற்றிகரமா நடந்துக்கிட்டிருக்கு. ஒவ்வொரு நாடும் இதை உன்னதமா கருதி சட்டங்கள் இயற்றியிருக்கு. ஆனா..’’
‘‘ஆனா..?’’ மோனிகா புருவத்தை உயர்த்தினாள்.

‘‘பணக்காரங்களோட பழுதடைந்த உறுப்புகளை மாற்ற தேவையான ஆர்கன்ஸ் கிடைக்கலை. ஒரு தட்டுப்பாடு நிலவிட்டிருக்கு. இதை நாம பயன்படுத்திக்கிட்டா நல்ல லாபம் கிடைக்கும்...’’
‘‘ஐடியா ஓகே. பட், அதை நாம எப்படி பண்ணப் போறோம்..?’’  குஷன் நாற்காலியில் சாய்ந்தபடி ஸ்காட் வில்லியம்ஸ் கேட்டான்.
‘‘ரொம்ப ஈசியா...’’

‘‘புரியலை...’’
‘‘விளக்கமா சொல்லணுமா... இல்ல அனுபவபூர்வமா உணர்த்தணுமா..?’’
‘‘சொல்றதை விட காண்பிக்கறது பெட்டர்...’’
‘‘குட். அப்ப உடனே புறப்படு...’’
‘‘எங்க?’’

‘‘ரெட் மார்க்கெட்டோட தலைநகரத்துக்கு...’’
‘‘வாட்..?’’
‘‘யெஸ் மேன்... போய் நம்ம புது பிசினஸை அங்க ஆரம்பி...’’
‘‘இதுபத்தி எனக்கு எதுவும் தெரியாது...’’

‘‘அவசியமே இல்ல... பிசினஸை தொடங்கிடு. பிரச்னையே இல்லாம அது பாட்டுக்கு நடக்கும்...’’
‘‘ஸ்டீபன்...’’
‘‘தயங்காத வில்லியம்ஸ். இருக்கறதுலயே ரொம்ப சுலபமான வேலை இது. போ...’’
‘‘ரைட். எங்க போகணும்?’’

‘‘இந்தியா...’’
‘‘இந்தியா?’’
‘‘ம்... அங்க தமிழ்நாட்டுக்கு போ. அதுதான் ரெட் மார்க்கெட்டோட கேபிட்டல்!’’
ஆற்றின் கரையில் எதுவும் செய்யாமல் வெறுமனே அமர்ந்திருப்பது பன்னிரெண்டு வயது மகேஷுக்கு சோர்வைத் தந்தது.
பேசாமல் உதிர்ந்த பவழமல்லியைப் பொறுக்கலாம் என்று அவன் எழுந்தபோது சாம்பல் நிற கோட் அணிந்த வெள்ளை முயல் ஒன்று தன் கபில நிறக் கண்களை உருட்டியபடி அவனருகே ஓடியது.  அதை அவன் ஆச்சர்யத்துடன் பார்த்தபோது ‘‘ஓ டியர்! ஓ டியர்! நேரமாகிவிட்டதே...’’ என்று உரக்க சப்தமிட்டது. முயல் பேசுமா... என்று அவன் கண்கள் விரிய யோசிப்பதற்குள் அடுத்த அதிசயம்  நிகழ்ந்தது.

தன் கோட் பாக்கெட்டில் இருந்து கடிகாரத்தை எடுத்து பார்த்துவிட்டு விரைந்தது.
இதற்கு முன் இப்படி கோட் அணிந்த ரேபிட்டையோ அல்லது கடிகாரத்தை எடுத்து மணி பார்க்கும் முயலையோ அவன் கண்டதில்லை. எனவே ஆர்வம் பெருக முயலைப் பின்தொடர்ந்து ஓடினான்.  அதற்குள் அது பெரிய குழி போன்ற வளையினுள் புகுந்து கொண்டது.

துரத்தி வந்த மகேஷும் சற்றும் யோசிக்காமல் அந்த வளைக்குள் நுழைந்தான். அதன் பிறகுதான், தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று புரிந்தது. காரணம், அந்த முயல்வளை  மிகப்பெரிய சுரங்க வழிபோல் இருந்தது. கீழே... கீழே... சென்று கொண்டிருந்தான்.

ஒருவழியாக மெத் மெத்தென்று இருக்கும் மெத்தை மீது விழுந்தான். ஆனால், அது இலவம் பஞ்சினால் ஆன மெத்தை அல்ல. பதிலாக பட்டாம்பூச்சிகளால் நிரம்பிய படுக்கை. அவனுக்காகவே காத் திருந்தது போல் தங்கள் மீது அவன் விழுந்ததும் வண்ணத்துப்பூச்சிகள் அவனை அணைத்தன. முத்தமிட்டன. இவ்வளவு பட்டாம்பூச்சி களை, அதுவும் விதவிதமான வண்ணங்களில் இதற்கு முன்  அவன் பார்த்ததேயில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. இது என்ன இடம் என்று தெரிந்து கொள்ள விரும்பி சுற்றிலும் பார்த்தான். யாருமே இல்லை.

மெல்ல எழுந்தான். அது ஓர் அறை. வண்ணத்துப்பூச்சிகளைத் தவிர வேறு எதுவும் அங்கில்லை. வலது பக்க மூலையில் கதவு ஒன்று உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. தாழ்ப்பாளை விலக்கி  இழுத்தான். திறக்கவில்லை. அழுத்தினான். லேசாக அசைந்தது. மூச்சை இறுகப் பிடித்து இழுத்தான். கரகர ஓசையுடன் திறந்தது.
எட்டிப் பார்த்தான்.

தொப்பி அணிந்த தாத்தா ஒருவர் அவனை வரவேற்றார். அவருக்கு நீளமான தாடி வளர்ந்திருந்தது. ஆனால், தாடியில் முடிகளுக்கு பதிலாக ஆலமரத்தின் விழுதுகள் வளர்ந்திருந்தன. கண்கள் விரிய  அதைப் பார்த்தான். ‘கீச்... கீச்...’ என்று சப்தமிட்டபடியே குருவிகள் அந்த தாடியிலிருந்து... தப்புத் தப்பு... விழுதுகளிலிருந்து பறந்தன. ஐந்தடி உயரத்தில் இருந்த அந்த தாத்தா, கழுத்து முதல் உள்ளங்கால் வரை நீல நிறத்தில் அங்கி அணிந்திருந்தார்.

‘‘வா மகேஷ்... வா! உனக்காகத்தான் காத்திருக்கேன். நம்ம ராஜகுமாரியை மந்திரவாதி கடத்திட்டு போய் ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கிற தங்கக் கூண்டுக்குள்ள அடைச்சிருக்கான். அவளை  உன்னாலதான் காப்பாத்த முடியும்...’’
‘‘என்னாலயா?’’

‘‘ஆமாம் மகேஷ்... அந்த மந்திர வாதியோட உயிர் ஒரு கிளியோட உடம்புக்குள்ள இருக்கு. ஆனா, அது எந்தக் கிளி, அது எங்க இருக்குனு தெரியலை. அதையும் நீதான் கண்டுபிடிக்கணும்...’’
சொன்ன தாத்தாவை வியப்புடன் பார்த்தான் மகேஷ். கவி உருத்திரங்கண்ணனார் அனுபவித்துத்தான் பாடியிருக்க வேண்டும். ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்’ என்று அவர் சொன்னதற்கு ஏற்பவே அன்று காவிரிப்பூம்பட்டினம் காட்சியளித்தது.

கறுப்புத்  திரையிட்டுக் கிடந்த வானவெளி, வருஷ ருது உட்புகுந்துவிட்ட ஆவணி மாதத்தின் அந்த ஆரம்ப நாளில் கூடத் தன்னிடம் மேகக் கூட்டங்களை சிறிதளவும் சேர்க்காமலும், ஓரிரு நீர்த்திவலைகளைக்  கூட மேலிருந்து உதிர்க்காமலும் நட்சத்திரக் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி நகைத்துக் கொண்டிருந்தது. இதனால் இரவு ஏறி நாழிகைகள் பத்து ஓடிவிட்ட பிறகும், புகார் நகரத்தின் கடற்கரையில் மக்கள் நடமாட்டத்துக்கும், கேளிக்கை கூச்சல்களுக்கும் குறைவில்லை.

வானுக்கு தான் சளைக்கக் கூடாது  என்ற நினைப்பில், குடகு மலையிலிருந்து புறப்பட்டு வெள்ளத்தை அள்ளி வந்த ‘மலைத்தலைய’ காவிரியும் புகாரின் கடலில் கலந்து புனல் பரந்து நின்றது. அதன் நீர்ப்பரப்பில் ஊர்ந்து சென்ற  பெரும் படகுகள் தொலை தூரத்தே கடலில் ஆடிக்கொண்டிருந்த மரக்
கலங்களிலிருந்து இறக்குமதி சரக்குகளை உள்நாட்டுக்குக் கொண்டு சென்றன.

இதன் காரணமாக சங்கமத்துறையில் அந்த இரவிலும் அமைதி ஏதுமின்றி, கடலோடிகளின் கூச்சலே நிரம்பி வழிந்தது. இப்படி ஊர்ந்து சென்ற இறக்குமதிச் சரக்குகள் கொண்ட நாவாய்கள் மட்டுமல்ல... அக்கம்பக்கத்து உப்பளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை உப்பை உள்நாட்டுக்கு எடுத்துச் சென்று, அதற் குப் பதிலாக நெல்லை ஏற்றி வந்த படகுகளின் ஓட்டமும், காவிரியில் இருந்து கிளை பிரித்து ஓடிய உப்பங்கழிகளின் தளைகளில் ஆங்காங்கு பிடித்துப் பிணைத்துக் கொண்டிருந்த பரதவரின் அதட்ட லான குரல்களும் வெகுதூரம் வரை கேட்டுக் கொண்டிருந்தன.
இவை தவிர ஆங்காங்கு அப்போதும் அலுவல் புரிந்து கொண்டிருந்த சுங்கக் காவலரின் கட்டளைக் கூச்சல்களும் சேர்ந்து பூம்புகார் எனப் புகழ் எய்திய அந்தக் காவிரிப்பூம்பட்டினத்தை அமைதியற்ற  நகரமாக அடித்துக் கொண்டிருந்தது.

கலங்கு பகை இல்லாவிட்டாலும் காவலைத் தவிர்க்க விரும்பாத யவன வீரர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு அணிவகுத்து நான்கு நான்கு பேர்களாகக் கடற்கரையோரமாகப் பல இடங்களில் நடந்து கொண்டிருந்ததன் விளைவாக அவர்கள் பாதங்களில் தரித்துச் சென்ற  தோற் செருப்புகளின் ‘சரக் சரக்’ என்ற ஒலியும், மார்புகளில் அவர்கள் அணிந்திருந்த கவசங்களில் உராய்ந்த வீரப் பதக்கங்களின் சப்தங்களும் சேர்ந்ததால், புகாரின் கடற்கரைப்பகுதி, எதிரிகளை  நோக்கி வீரகர்ஜனை செய்து கொண்டிருந்தது.

வெளிநாட்டு மரக்கலங்களுக்கு வழிகாட்டுவதற்காகப் புகார் நகரின் கடற்கரையில் அமைக்கப்பட்டு வானைப் பிளந்து நின்ற கலங்கரை விளக்கத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த பெரும் தீப்பந்தங்களுக்கு  அவ்வப்போது எண்ணெய் விட்டுக் கொண்டிருந்த காவலாளிகள் தங்கள் பங்குக்கு அப்படியே எண்ணெய் கேட்டு கீழே சத்தமாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படி எங்கும் நிலவிய அமைதியின்மை அடங்க காலம் வந்துவிட்டது என்பதை அறிவுறுத்துவது போல் புகாரின் மேற்குப்பகுதியான பட்டினப்பாக்கத்தில் இருந்த மணிவண்ணன் கோயிலின் இரண்ட £ம் ஜாம மணி ஒலித்தது. இதை லட்சியம் செய்யாமல் புகாரின் கடற்கரைப் பகுதியான மரூவூர்ப்பாக்கத்துக்கும், மேற்குப் பகுதியான பட்டினப்பாக்கத்துக்கும் இடையேயிருந்த வர்த்தகச் சாலையில்  எகிப்தியர், சீனர், கடாரத்தார், ரோமர், கிரேக்கர் ஆகிய பல நாட்டு வணிகர்களின் கூச்சல்கள் பெரிதாகவே கேட்டன. நடுநிசி நெருங்கிக் கொண்டிருந்ததற்கு அடையாளமாகப் புகாரின் புத்த விஹாரங் களில் பவுத்த துறவிகள் கோஷித்த அமைதி வேதம் கூட, அமைதிக்கும் வாழ்க்கைக்கும் அதிக சம்பந்தமில்லை என நிரூபித்துக் கொண்டிருந்தன.

இதை ஒப்புக் கொண்டவன் போல் கடற்கரையோரமாக நடந்து சென்ற இளமாறன், எதிரே தெரிந்த புகார் நகரத்தின் பெரும் விளக்குகளையும், ஜனக் கூட்டத்தையும், தங்கத்தாலும் வஜ்ர வைடூரியங் களாலும் ஜொலித்த சோழர்களின் புலிக்குறி பொறிக்கப்பட்ட பிரமாண்டமான கோட்டைக் கதவுகளையும் ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்து பெருமூச்சு விட்டான்.
சுமார் இருபத்தியோரு வயதுக்கு மேல் மதிக்க முடியாத அந்தப் பாண்டிய நாட்டு வாலிபனின் முகத்தில் துக்கச் சாயை படர்ந்திருந்தது. காரணம், பாண்டிய மன்னர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்ற  செய்திதான். இது பொய்யாக இருக்க வேண்டும்... பாண்டிய மன்னர் பூரண நலத்துடன் நல்லாட்சி புரிய வேண்டும் என திரும்பத் திரும்ப தன்னுள் சொன்னபடியும், காலாற நடந்தால் கொஞ்சம் து க்கம் கலையலாம் என்ற நப்பாசையாலும்தான் அவன் கடற்கரைக்கு வந்திருந்தான்.

ஆனால், விதி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவனது துக்கத்தை அதிகரிக்கும் விதமாகவே கடற்கரையில் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்தன. அதற்கு கட்டியங்கூறுவது போல் படகு ஒன்று மெல்ல  ஊர்ந்து வந்தது. எதற்காக இப்படி துடுப்பில்லாமல் அலைகளின் ஓட்டத்தில் அந்தப் படகு வருகிறது என்ற கேள்வி இளமாறனின் மனதில் உதித்தது. இதென்ன அர்த்தமற்ற வினா என்று அவன் ஒது க்குவதற்குள் படகு கரையைத் தட்டியது.

அதிலிருந்து முதலில் குதித்தவன், புகாரை காவல் காக்கும் தளபதி. விறுவிறுவென்று கோட்டையை நோக்கி நடக்க வேண்டியவன், நான்கு புறமும் தன் பார்வையைச் சுழல விட்டான். இந்த நடவடி க்கை சந்தேகத்தைக் கிளப்பவே கொத்தாக பரதவர்கள் குவித்திருந்த வலைகளுக்குப் பின்னால் இளமாறன் மறைந்து கொண் டான்.
தன் பார்வையால் சுற்றுப்புறங்களை ஆராய்ந்த புகாரின் தளபதி, எந்தப் பிரச்னையும் இல்லை என்பதற்கு அறிகுறியாக தன் தலையை அசைத்துக் கொண்டான். பிறகு படகின் உட்புறம் நோக்கி மெல்ல குரல் கொடுத்தான்.

உடனே இளம் பெண்ணொருத்தி வெளிப்பட்டாள். இருளிலும் ஒளிர்ந்த அவளைப் பார்த்ததுமே இளமாறனின் இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. காரணம், அந்தப் பெண், தமிழகத்தைச்  சேர்ந்தவள் அல்ல. யவன மங்கை. மட்டுமல்ல, அவளது மஞ்சள் நிற உடலும், அங்கங்களை மறைத்த உடையும், அணிந்திருந்த ஆபரணங்களும் நிச்சயம் அவள் சாதாரணப் பெண் அல்ல  என்றே பறைசாற்றின.

அதற்கு ஏற்பவே புகாரின் தளபதியும் அவளை மரியாதையாகவே, ‘‘தமிழகத்துக்கு யவன ராணியை வருக வருக என்று வரவேற்கிறேன்...’’ என்று அழைத்தான். புன்னகையுடன் யவன ராணியும்  படகிலிருந்து தன் வலது காலை எடுத்து புகாரின் கரையில் வைத்தாள்.

அவளது வருகை வேளிர்களை அழித்து பாண்டிய நாட்டின் விரிவாக்கத்துக்கு அடிகோலப் போகிறது என்பதையும், தலையாலங்கானத்தில் நடக்கப் போகும் சரித்திரப் புகழ்பெற்ற போருக்கு அவளே க £ரணமாக இருக்கப் போகிறாள் என்பதையும் அப்போது புகாரின் தளபதி மட்டுமல்ல, இளமாறனும் அறியவில்லை.
(தொடரும்)

தலைவர்
இன்னைக்கு எதுக்கு மகளிரணிக்
கூட்டத்தைக் கூட்டியிருக்கார்..?’’
‘‘இன்னைக்கு ‘காணும்’ பொங்கலாம்..!’’

கையில
காசே இல்லைன்னு சொன்ன தலைவர், இப்ப எப்படி பொங்கல் இனாம் கொடுக்கறார்..?’’
‘‘குற்றப் பத்திரிகையை எல்லாம் எடைக்குப் போட்டுத்தான்!’’

தலைவரோட

அட்டூழியம் தாங்க முடியல...’’
‘‘என்ன செய்தார்?’’
‘‘இந்நேரம் அனுஷ்கா பொங்கல் சாப்பிட்டு இருப்பாங்களான்னு கேக்கறார்!’’
 பா.விஜயராமன், திட்டச்சேரி.