ஜோக்ஸ்

‘‘என்ன கபாலி... திடீர்னு உங்க வீட்ல செஞ்ச பொங்கலைக் கொண்டு வந்து தர்றே?’’

‘‘நீங்கதானே ஏட்டய்யா பொங்கல் இனாம் கேட்டீங்க..?’’

‘‘சி.பி.ஐ.காரங்களால, மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் தலைவருக்கு மட்டும்...’’
‘‘என்ன ஆச்சு..?’’
‘‘குற்றப் பத்திரிகையை ‘காணும் பொங்கல்’ ஆகிடுச்சு...’’

‘‘தீபாவளிக்கு பட்டாசு மாதிரி, பொங்கலுக்கு என் மனைவி செய்யற பொங்கல்...’’
‘‘என்ன
சொல்றீங்க..?’’
‘‘ஆபத்து நிறைஞ்சதுன்னு சொல்றேன்...’’

‘‘காணும் பொங்கலப்ப கடற்கரையில் கூட்ட நெரிசலைக் குறைக்க போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க..?’’
‘‘தலைவரை பேச வைக்கப் போறாங்களாம்!’’

‘‘சி.பி.ஐ.காரங்களால, மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் தலைவருக்கு மட்டும்...’’
‘‘என்ன ஆச்சு..?’’
‘‘குற்றப் பத்திரிகையை ‘காணும் பொங்கல்’ ஆகிடுச்சு...’’

‘‘பொங்கல் அன்று  தங்களை புகழ்ந்து பாடிய இந்தப் புலவருக்கு எதற்கு மகாராணி செய்த பொங்கலை சாப்பிட தரச் சொல்கிறீர்கள் மன்னா..?’’
‘‘நம்மைக் கொடுமைப்படுத்திய அவரை, பதிலுக்கு நாமும் கொடுமைப்படுத்த வேண்டாமா அமைச்சரே..?’’

‘‘சி.பி.ஐ.காரங்களால, மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் தலைவருக்கு மட்டும்...’’
‘‘என்ன ஆச்சு..?’’
‘‘குற்றப் பத்திரிகையை ‘காணும் பொங்கல்’ ஆகிடுச்சு...’’

‘‘காணும் பொங்கலப்ப கடற்கரையில் கூட்ட நெரிசலைக் குறைக்க போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க..?’’
‘‘தலைவரை பேச வைக்கப் போறாங்களாம்!’’

‘‘ஏதாவது குற்றம் பண்ணிட்டு ஜாமீன் கேட்காம இருக்கணுமா... என்ன சொல்றே நீ?’’
‘‘நீங்கதானே தலைவரே, இந்த வருஷம் பொங்கலை ஜெயில்ல கைதிகளோட கொண்டாடணும்னு சொன்னீங்க..!’’

‘‘மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நம்ம மாட்டுக்கு என் கையால நானே பொங்கல் பண்ணி ஊட்டி விடணும்ங்க...’’
‘‘நமக்கு நல்லது செய்யற வாயில்லா ஜீவனுக்கு நீ செய்யற பதில் நன்றி இதுதானா விமலா..?’’