குட்டிச் சுவர் ராசி பலன்கள்



இந்தப் புத்தாண்டு, பொங்கல் ராசி பலன்கள் யாவும் ரசிக்கவும் சிரிக்கவும் மட்டுமே. நல்லா இருப்போம். எல்லோரும் நல்லா இருப்போம். குட்டிச்சுவரின் இனிய பொங்கல் திருநாள்
வாழ்த்துகள்.

சிம்மம்: பிறருக்கு இனிமையான இம்சைகள் தரும் சிம்ம ராசி வாசகர்களே! குரு பகவான், சுக்கிர பகவான் எல்லாம் ஆறாம் ஏழாம் கட்டத்துல இருந்து விட்டத்தப் பார்த்து போயிட்டதால, சனி பகவ £னின் கொட்டத்தை நீங்க பார்க்கப் போறீங்க. புன்னகை அரசிகளோட ஃபுல் மஜாவா இருந்த நீங்க,  புழுங்கல் அரிசி கூட வாங்க முடியாத நிலைமைக்கு ஆளாவீங்க. ‘பில்லா’ படத்த பால்கனில  உட்கார்ந்து பார்த்த நீங்க, ‘ஜில்லா’ படத்த தரை டிக்கெட்டா பார்க்கப் போறீங்க. முதல் ஆறு மாசம் சுமார் மூஞ்சி குமாராகவும், வருஷத்தின் கடைசி ஆறு மாசம் ரொம்ப சுமார் மூஞ்சி குமாராகவும் இருக்கப் போறீங்க. பரிகாரம்: காலையில செவுத்துலயும், மாலையில் கதவுலயும் தினம் 30 தடவை முட்டிக்கலாம்.

மேஷம்: வேஷம் போட்டு நடிக்காத, ரோஷம் அதிகம் கொண்ட மேஷ ராசி வாசகர்களே! ஏழாம் வீட்டில் இருந்த சனி பகவான், எட்டாம் வீட்டுக்கு எதிர் வீட்டுக்குச் சென்று, கதவை உள் தாழ்ப்பாள்  போட்டு பூட்டிக்கொண்டது சரியல்ல. என்னதான் குரு பகவான் சனி வீட்டு காலிங்பெல்லை அடித்தாலும், கதவு திறக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த ஏரியாவில் கரன்ட் கட்டு. நீங்கள் நீண்ட ந £ளாக எதிர்பார்க்கும் வராத கடன்கள் இந்த வருடமும் வராது. நீங்கள் செய்யும் காரியங்களில் தடையும், மழை மாதங்களில் குடையும் வந்து போகும். முதல் ஆறு மாதங்கள் கடினமாக இருக்கும்.  அடுத்த ஆறு மாதங்களில் அது பழகிவிடும்.

ராசியான பூ: குங்பூ ராசியான எண்: இரண்டே முக்கா, மூணே முக்கா. ரிஷபம்: இதற்குத்தானா வாழ்கிறோம் என பல சமயம் மண்டையைக் குழப்பிக்கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! பிறந்த புத்தாண்டு உங்கள் மண்டையையும் அதில் இருக்கும் கொண்டையையும்  ஆட்டிப் பார்க்கப் போகிறது. ‘மெட்ராஸ் ஜெயில நான் பார்த்ததே இல்லை சித்தப்பு’ என போன வருடம் நீங்கள் புலம்பியது, இந்த வருடம் நிறைவேறும். நாலாம் இடத்தில் இருந்த சுக்கிர பகவான்,  புத்தாண்டு அன்று அதிகாலை ஆட்டோ பிடிச்சு போனதுதான். எங்க போனார் எப்ப வருவார் என்று ஒரு ஐடியா கூட இல்லை. ஆனி போயி ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா வருவீங்களோ  இல்லையோ, ஆப்பு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ராசியான நாள்: காலண்டர்லயே இல்லை. ராசியான கல்: செங்கல் மிதுனம்: கடினமான பொய்யைக்கூட இனிமையாகப் பேசும் மிதுன ராசி வாசகர்களே, இந்த வருடம் புதுசா நாலு லுங்கி வாங்கக் கூட சிங்கியடிக்க வேண்டிய நிலைமை. இந்தப் புத்தாண்டு குடும் பத்தில் உள்ள சிக்கல்களை நீக்கி, குடும்பத்தையே சிக்கலாக்கப் போகிறது. இதுவரை பொறுப்பில்லாமல் திரிந்த நீங்கள், இனி செருப்பில்லாமலும் திரியப் போகிறீர்கள். இதுவரை தீர்ந்துபோன  பேஸ்ட்டை நசுக்கிக் கொண்டிருந்த உங்களையே, வாழ்க்கை இனி பேஸ்ட்டாக்கி நசுக்கப் போகிறது. இதுவரை உக்கிரப் பார்வை மட்டுமே பார்த்து வந்த சுக்கிர பகவான், இனி வக்கிரப் பார்வையும்  பார்ப்பதால், எப்பவும் முகம் கழுவி பவுடர் அடித்து ஃபுல் மேக்கப்பில் இருப்பது நல்லது. அடகு வைத்த நகைகளை மீட்டு விற்க வேண்டிய நிலைக்கு முன்னேறுவீர்கள்.

அணிய வேண்டியது: அங்கவஸ்திரம், பார்க்க வேண்டியது: நாதஸ்வரம், போக வேண்டியது: திருநாகேஸ்வரம் கடகம்: கொடுத்த கடனைவிட வாங்கிய கடன் அதிகம் கொண்ட கடக ராசி வாசகர்களே! இந்தப் புத்தாண்டு முதல் நீங்கள் கூப்பாடு போட்டாலும் சாப்பாடு கிடைக்காது. மிச்ச ஒரு ரூபாய்க்கு இதுவரை  சாக்லெட் வாங்கிய நீங்கள், இனி மிச்ச பத்து ரூபாய்க்கும் பிஸ்கெட் வாங்கப் போகிறீர்கள். பெருங்காயம் வாங்க முடியாமல் மனதில் பெருங்காயம் அடைத்திருந்த நீங்கள், இனி வெங்காயமும் வாங்க  முடியாமல் சங்காகிப் போவீர்கள். இதுவரை உங்கள் பரட்டைத் தலையை பார்த்து கேலி செய்த சமூகம், குரு பகவான் ஆறாம் வீட்டிலிருந்து ஹேராம் வீட்டுக்கு போவதால், இனி உங்கள் கொறட் டைக்கும் கேலி செய்யும்.

கும்பிட வேண்டியது: சுடு சோறு, கிடைக்கப் போவது: பழைய சோறு. கன்னி: பன்னீர் சோடா குடித்து புரையேறிய கன்னி ராசி வாசகர்களே! இந்த வருஷம் நீங்க வெந்நீர் வெந்நீரா கண்ணீர் விடப்போறது நிச்சயம். கள்ளச்சாராயம், கள்ளக்கடத்தல், கள்ளக்காதல்னு பல  வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் அவசரம் வேண்டாம். ஒன்பதாம் வீட்டை ராகு காலி பண்ண, பத்தாம் வீட்டுல கேது ஜாலி பண்ண, மொத்தத்துல உங்களுக்கு கட்டம் சரியில்ல.

தேவையில்லாத  வேலைகள்ல தலையக் கொடுத்தா, இதுவரை சன் நியூஸ் பார்த்த உங்களை, மத்தவங்க எல்லோரும் சன் நியூஸ்ல பார்த்திடுவாங்க. இந்த வருஷம் நீங்க ரயிலுக்கு போகாட்டியும் ஜெயிலுக்கு போற  சான்ஸ் அதிகமிருப்பதால் அடக்கி ஒடுக்கி வாசிப்பதும் வசிப்பதும் நல்லது.ராசியான நாள்: அந்த நாள், மோசமான நாள்: இந்த நாள்.

துலாம்: எல்லோருக்கும் சலாம் போட்டே காலத்தை ஓட்டும் துலாம் ராசி வாசகர்களே, இந்த வருஷம் உங்களுக்கு பழைய ஈயம் பித்தளை முலாம் பூச போகுது. இதுவரை பல அயல்நாடுகள் பே £ன நீங்க, இனிமேல் தமிழ்நாட தாண்ட மாட்டீங்க. பிள்ளைகள் எல்லாம் இம்சை பிடிச்ச தொல்லைங்களா மாறி சந்தோஷப்படுத்துவாங்க. ‘வாடா மாப்ளை’ என்று உங்களை அழைக்கிறார் கேது.  ‘வந்தீன்னா கால வெட்டுவேன்’ என்கிறார் ராகு. ஆக, இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்ல காலம் வரும்... ஆனா வராது!

செய்ய வேண்டியது: எதுவும் செய்யாதிருப்பது, செய்யக்கூடாதது: ஏதாவது செய்வது. விருச்சிகம்: பெருச்சாளிகள் போலில்லாமல் புத்திசாலித்தன அறிவுகொண்ட விருச்சிக ராசி வாசகர்களே, இனி நீங்க சரக்கடிச்சா கூட கடிச்சுக்க ஒரு கடலை மிட்டாய் கிடைக்காத காலம் வரப் போகுது.  இதுவரை நீங்க செய்த தொழில்ல இருந்தது லாபம், இனிமேல் அதுல கிடைக்கப் போவது பாவம். இதுவரை நீங்கள் மனைவிக்கும் பயந்து வந்தீர்கள். இப்போது குரு நாலாம் வீட்டிலிருந்து காலி  பண்றேன்னு சொல்லிட்டு பண்ணாமல் இருப்பதால், இனி பயமெல்லாம் மனைவிக்காகவே இருக்கும். நடந்து போகும்போது கூட டிரங்க் அண்டு டிரைவில் மாட்டும் வாய்ப்பு அதிகம்!

ராசியான கலர்: கறுப்பு, ராசியான பூ: கடுப்பு. தனுசு: பவுசு காட்டி ரவுசு செய்து தினுசாய் அலையும் தனுசு ராசி நேயர்களே! உங்கள் சொகுசு வாழ்வு டர்ரியலாகும் பொன்னான காலம் இது. இதுவரை தங்க நகைகள வீட்டுல வச்ச நீங்க, இனி  சேட்டுக்கிட்ட வைக்கிற நேரம் வந்தாச்சு. இதுவரை நீங்கதான் யாருக்கும் மரியாதை கொடுக்காம இருந்தீங்க. இனி உங்களுக்கும் யாரும் மரியாதை கொடுக்கப் போறதில்ல. இதுவரை தொழிலில் ல £பக்கொடியப் பறக்கவிட்ட நீங்க, இந்த வருஷம் முழுக்க அரணாக்கொடியக் காப்பாத்திக்கப் போராடப் போறீங்க. காஸ்ட்லி பாருக்குப் போன நீங்க, இனி சாம்பாருக்கே கஷ்டப்படப் போறீங்க.

பரிகாரம்: சட்டை பாக்கெட்டுல 2 பூசணிக்காய வச்சுக்கிட்டு இருந்தா வாழ்க்கை சிறக்கும். மகரம்: சிகரத்திலிருக்கும் மகர ராசி வாசகர்களே, நீங்கள் தகர டப்பாவை கையில் பிடிக்கும் நேரம் வந்துவிட்டது. ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ரேஷன் கார்டு என வாழ்ந்த நீங்கள்,  பத்தாம் இடத்திலிருக்கும் லோகு, சாரி ராகு... எட்டாம் இடம் வருவதால், பால் கார்டுக்குக்கூட பணம் கட்ட முடியாமல் போகும். இதுவரை தண்ணிக்காகக் கூட பணம் செலவு செய்யாத உங்களுக்கு,  இனி பணம் தண்ணியாய் செலவாகும். சினிமா படம் அல்ல, சினிமா போஸ்டர் பார்த்ததற்கு கூட இனி பணம் கேட்பார்கள்.

பரிகாரம்: புலிக்கு பல் விளக்கிவிட்டு பூனைக்கு நகம் வெட்டிவிட்டால் வாழ்வில் ஒளியேறும். கும்பம்: கம்பு எடுத்து அடித்தாலும் கம்முன்னு போகும் கும்ப ராசி வாசகர்களே! நீங்க தும்மினால் கூட வம்பு வரும் காலம் கனிந்துவிட்டது. இதுவரை கரன்ட் இல்லாமல் போனை சார்ஜ் செய்ய  முடியாமல் இருந்த நீங்கள், இனி பேசுவதற்கு பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் கூட செய்ய முடியாமல் போவீர்கள். வீட்டு மொட்டை மாடியில் கூட செடி வளர்த்த நீங்கள், இனி பொண்டாட்டிக்கு புடவை யைக்கூட பக்கத்து வீட்டு கொடியில் காய போடும் நிலைமைக்கு வர நேரும். 12 கட்டத்துலயும் இருந்த ராசி அதிபதிகள் பொட்டிய கட்டிக்கிட்டு ஊருக்கு போனதால் உங்கள் ஜாதகம் படு சுத்தம்!

ராசியான இடம்: ஜெயில், ராசியான பெயர்: கெயில், ராசியான வாகனம்: ரயில். மீனம்: மீனாவையும் சோனாவையும் பார்த்துப் பார்த்தே வீணாப் போன மீன ராசி வாசகர்களே, பட்டிதொட்டி எங்கும் புகழப்பட்ட உங்கள் வாழ்க்கை, பட்டி தட்டப்பட்டு இனி வட்டிக்கு வாங்கி வ £ழ்க்கை நடத்தும் காலம் வந்திடுச்சு. துணிமணிகளை விதவிதமாக பர்ச்சேஸ் செய்யும் நீங்கள், மூன்றாம் வீட்டில் இருந்து புதன், போன செவ்வாய்க்கிழமையே ப்ளைட் ஏறி போய்விட்டதால், இனி  துணி வாங்க மணிக்கே கஷ்டப்படுவீர்கள். விதவிதமாக பொங்கல்களை பார்த்த உங்கள் தட்டு, இனி பழைய செங்கல்களைக் கூட பார்க்காது. சரித்திரமாய் திகழ்ந்த உங்கள் வாழ்க்கை இனி தரித்தி ரமாயும் மாறலாம் என கட்டம் சொல்கிறது.