குழம்பில் இருந்து குதித்த மீன!



‘விஜய், அஜித் இருவரில் உங்க ஃபேவரிட் யார்?’ என்ற வம்பு கேள்விக்கு தமன்னாவின் பதில் கிரேட் எஸ்கேப்! மீனு கழுவும் போதுதான் நழுவும்... குழம்பில் இருந்தே குதிச்சு ஓடுதேப்பா!
 எல்.சண்முகவடிவு, புதுச்சேரி.

ஒரே வதந்தியால் பஞ்சு பஞ்சாகப் பிரிந்து பஞ்சர் ஆகிப் போன ‘பஞ்சல்’ கிராமம் பதற வைத்தது. செவ்வாய்க் கிரகத்திலேயே வீடு கட்ட எத்தனிக்கும் இந்தக் காலத்தில் இங்கே வீடு கட்டினால் தீ  பிடிக்கும் என்ற வதந்தி, வேதனை கலந்த வேடிக்கை!
 எம்.பர்வீன் பாத்திமா, சென்னை91.

நம்பிக்கைகளை விதைத்த பெரு விவசாயி நம்மாழ்வார் மறைந்தால் என்ன... அவர் உருவாக்கிய எழுச்சியும் அவர் மீட்டுத் தந்திருக்கிற பாரம்பரியமும் எந்நாளும் நிலைக்கும் என்பது உண்மை!
 அ.குணசேகரன், புவனகிரி.

‘எதிர்நீச்சல்’ பட யூனிட்டில் அடுத்த படத்தில் ப்ரியா ஆனந்தையே பிரித்துவிட்டு தான் இடம்பெற்றதால்தான் அமலா பால் கொடுத்திருக்கும் போஸில் அத்தனை தெனாவட்டோ!
 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘சொல்றேண்ணே சொல்றேன்!’ தொடரை கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் முடித்திருக்கிறார் இமான் அண்ணாச்சி. பல்லைக் காட்டி சிரிக்க வைத்த
படியே நெல்லை மொழிநடையை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த நல்ல தொடர் அது!
 எம்.குணசேகரன்,
வேலாயுதம்பாளையம்.

சேலம் மாவட்ட தச்சுத் தொழிலாளர்கள் செய்து வரும் ‘உழைப்பு தானம்’, உலகமே இது வரை காணாத புத்தம் புதுசு. இது போன்ற நல்ல உள்ளங்கள் உள்ளவரை நம்நாடு நலமுடனே இருக் கும். மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை18.

‘ஆஸ்கர் விருது இடத்தில் ‘ஜில்லா’ விஜய்’ என்றதும் எங்கள் ஹார்ட் பீட் ஏகமாய் எகிறியது. கடைசியில், ஆஸ்கர் விருது பெற்ற படம் எடுக்கப்பட்ட ஜப்பானில் இதையும் படமாக்குவதாகச் சொல்லி  ஏமாற்றி விட்டீர்கள்! போங்க தலைவா... உங்க கூட கா!
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

வெளியூர் கிளம்பறப்ப கடவுள் தன் வீட்டு பிரிட்ஜைத் தொறந்து போட்டுட்டுப் போனதுதான் இந்த வருட கடுங்குளிருக்குக் காரணம் எனக் கண்டு
பிடித்துச் சொன்ன ஆல்தோட்ட பூபதியைப் பார்த்து விஞ்ஞான உலகமே விக்கித்து நிற்கிறது போங்கள்!
 மா.மாரிமுத்து, ஈரோடு.

பாரம்பரிய கொண்டாட்டங்களை மறந்து, சாராயம் ஒன்றே கேளிக்கை என்றாகிவிட்ட தமிழகத்தின் மனப்பாங்கை மனுஷ்யபுத்திரன் கோடிட்டுக் காட்டி இருந்தது சிறப்பு.
 என்.அத்விக், சென்னை83.