நியூஸ் வே



‘மான் கராத்தே’விற்காக சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் தைவான் போயிருக்கிறார்கள். அங்கே நடந்த டூயட்டில் சிவகார்த்திகேயன் அநியாயத்திற்கு கூச்சப்பட்டாரம். ஹன்சிகாவின் தைரியத்தில்தான்  நடித்தாராம். கூச்சப்பட்டாரா, சிம்புவை நினைத்துப் பயந்தாரா!

‘அக்னி நட்சத்திரம்’ படத்தை ரீமேக் செய்யலாமா என யோசித்தார்கள். முதலில் விக்ரம் பிரபுகௌதம் கார்த்திக்கை முடிவு செய்தார்கள். இதில் முதலில் சரி சொன்ன கௌதம், இப்போது பின்வாங்கி  விட்டார். இப்போது ஆர்யாவிஜய் சேதுபதியை போட்டு ஆரம்பிக்கலாமா என இருவரிடமும் கேட்டு இருக்கிறார்கள். ‘‘கால்ஷீட் பார்த்து சொல்கிறோம்’’ என இருவருமே சொல்லியிருக்கிறார்கள்.

எங்கே பார்த்தாலும் தனுஷ், அனிருத், சிவகார்த்திகேயன் மூவரும்தான் ஷாப்பிங் முதற்கொண்டு போகிறார்கள். தனுஷ் எங்கே போனாலும்ஷ் இந்த இரண்டு நண்பர்களுக்கு நிறைய கிஃப்ட் வாங்கி  வருகிறார். இப்போது இதில் காமெடி நடிகர் சதீஷ் சேர்ந்திருக்கிறார். மேற்படி மூன்று பேரும் கலாய்ப்பதற்குத்தான் இந்த சதீஷ்.

இப்போது படங்களைக் குறைத்துக் கொண்டு விட்டார் சந்தானம். சமீபகாலமாய் சில படங்களுக்கு கால்ஷீட்டில் பிரச்னை ஏற்பட்டதால் இந்த முடிவு! ‘வீரம்’ படத்தின்போது அஜித் கொடுத்த அட் வைஸை ஏற்றதால், இப்போது டைமிங் சரியாக இருக்கிறது என்கிறார்கள்.

விஜய்யின் அடுத்த பட ஜோடி பிரியங்கா சோப்ரா தான். நயன்தாராவிற்கே ஒரு கோடி கொடுக்கும்போது, அவருக்கு இன்னும் ஒரு கோடி சேர்த்துக் கொடுத்து கால்ஷீட் வாங்கிவிடலாம் என ஓகே செ £ல்லிவிட்டாராம். இதற்காக தன் சம்பளத்திலிருந்து கொஞ்சம் குறைக்கவும் ரெடியாம்.

இனிமேல் விஷால், ஜீவா, ஜெயம் ரவி மூவரும் சேர்ந்து கொஞ்சம் நடிகர் சங்கப் பணிகளையும் பார்க்க முடிவு செய்திருக்கிறார்கள். ‘இளைய நடிகர்களும் பங்கு பெற வேண்டும்’ என்ற தலைவரின்  விருப்பத்தின் பேரில்தான் இந்த முடிவாம்.

‘‘ஷூட்டிங் இல்லாத நேரங்களில் என்ன பண்ணுவீங்க’’ என்ற கேள்வியை நடிகைகளிடம் கேட்டால் ‘‘நல்லா தூங்குவேன்’’ என்ற பதில் வரும். இதில் கார்த்திகா கொஞ்சம் வித்தியாச டைப்! கொட் டக் கொட்ட விழித்து ஒரு நாளைக்கு மூன்று, நான்கு படங்கள் பார்ப்பாராம். ‘டீல்’ ஷூட்டிங் முடிந்த கையோடு ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் இப்போது கார்த்து பிஸி!

‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுக்கு டாப்ஸிதான் நாயகி. ‘ஆரம்பம்’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவுடன் மீண்டும் இணைகிறார். எங்கேயோ இடிக்குதே...

கரகாட்டத்தை மையமாக வைத்து பாலா இயக்கப் போகும் படத்தில் இளையராஜா இசையமைப்பது உறுதியாகிவிட்டது. சில தினங்களுக்கு முன் ராஜாவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிய பாலா,  கம்போஸிங் தேதியை முடிவு செய்துவிட்டு வந்துள்ளார்.

வரிசையாக ஹிட் படத்தில் நடித்த அதிர்ஷ்ட தேவதை லட்சுமி மேனன், முதல் படத்திலிருந்து போட்டோ ஷூட் செய்ததில்லை. பத்திரிகை பேட்டிகளுக்காக முதல்முறையாக போட்டோ ஷூட் எடுத்து  இருக்கிறார். ஒரு போட்டோவில்கூட கிளாமர் எட்டிப் பார்க்காமல் எச்சரிக்கையாக எடுத்திருக்கிறார்!

விஜய்ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில் தான் இல்லாதது குறித்து மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். திடீரென்று முருகதாஸ் முகாம் மாறிவிட்டதில், அதற்காக சிறப்பாக போட்டு  வைத்திருந்த டியூன்களை ராம்சரண் தேஜா படத்திற்குக் கொடுத்துவிட்டார்.

அஜித் ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. கௌதம் மேனன் இதற்காக ஐதராபாத் போயிருக்கிறார். அதற்குள் ராஜமௌலி படம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.  அவர் வருவதற்குள்ளாக மற்ற பகுதிகளை ரெடி பண்ணி விடலாம் என்பதுதான் ஐடியா. நல்லாத்தான் இருக்கும்!

விஜய்சேதுபதி தயாரிப்பதாக இருந்த ‘சங்குதேவன்’ கைவிடப்பட்ட நிலையில் வேறொரு படத்துக்கு முதல் போட ரெடியாகி விட்டார். படத்தின் தலைப்பு... ‘ஆரஞ்சு மிட்டாய்’.

சைலன்ஸ்

நம்பர் நடிகையின் அறிவுரையில் கடவுள் நடிகர் இப்போது பார்ட்டிகளுக்குப் போவதையும், வாட்டர் அளவையும் குறைத்து விட்டார். இந்தத் தடவை புது வருஷத்திற்கு எங்கேயும் போகாமல், வீட் டிலேயே குடும்பத்தினரோடு கலகலப்பாக கொண்டாடினாராம். பழைய இயக்குநர்களை வீட்டிற்கு வரவழைத்து விருந்தாம். நம்பலாமா!

‘ஜூனியர் மம்பட்டியான்’ அதிகமாக உடம்பு வெயிட் போட்டு விட்டதால் வெளியில் வருவதை அநியாயத்திற்கு குறைத்து விட்டார். சொந்தமாக பெரிய டைரக்டரைப் போட்டு படம் இயக்கி, வெளியிட்டு  மீண்டும் வர திட்டமிட்டு விட்டார். அதற்காக டிஸ்கஷன் ‘ஜிம்’மில் உழைப்பு என அநியாயத்திற்கு உழைக்கிறார். முடியுமா!