விமலுக்கும் எனக்கும் என்ன பிரச்னை? அலறும் ஓவியா



கொஞ்சம் ஹோம்லி... மிஞ்சும் கிளாமர்... அரிதான மிக்ஸிங்கில் இளசுகளின் மனசைக் கவர்ந்திழுக்கிறார் ஓவியா. ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் ‘புலிவால்’ ரிலீசுக்காக காத்திருப்பவரிடம் ‘புலி வால்’ பிடித்த கதையாக, ‘‘தொடர்ந்து கிளாமர் ரோலே பண்றீங்களே?’’ என தூண்டிலைப் போட்டோம்... ‘‘இந்தக் காலத்துல கிளாமரா நடிக்காத ஹீரோயின் யாருங்க? எல்லாருக்குமே கிளாமர் பொருந்தாது.உடல்வாகு அமையணும். எனக்கு அது அமைஞ்சிருக்கு... நடிக்கிறேன்.

இதில் என்ன தப்பு?  ஹோம்லி, வில்லேஜ் கேரக்டர்களுக்கும் நான் பொருத்தமான பொண்ணுங்கறதை ‘களவாணி’ படத்திலேயே நிரூபிச்சாச்சு. இப்போ ‘புலிவால்’ படத்துல இன்னும் வித்தியாசமான கேரக்டர். மலையா ளத்தில் ஹிட்டான ‘சாப்பா குரிஷு’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். தமிழிலும் அந்தக் கதையை மாரிமுத்து சார் ரொம்ப அழகா டைரக்ட் பண்ணியிருக்கார்.  இதில் ரொம்ப போல்டான, ஸ்டை லிஷான கேரக்டர். ரொம்பவே ரசிச்சு ரசிச்சு நடிச்சேன்.’’

‘‘விமலுடன் சமாதானம் ஆகிட்டீங்களா?’’ ‘‘ஒரு பிரஸ்மீட்ல ‘ஓவியா கூட இனி நடிக்கமாட்டேன்’னு விமல் சொன்னதை வச்சி இதைக் கேட்குறீங்கன்னு நினைக்கிறேன். உண்மையில எங்களுள்ள சண்டையெல்லாம் இல்லை. விமல் படத்தில்  நடிக்கமாட்டேன்னு நான் சொல்லலையே. கதை பிடிச்சி, அதில் எனக்கு முக்கியத்துவமும் இருந்தா, சின்ன ஹீரோ பெரிய ஹீரோ என்ற பாகுபாடு பார்க்காமல் நடிக்க நான் தயாரா இருக்கேன். ‘புலி வால்’ படத்தில் விமலுடன் சேர்ந்து நடிக்கிற காட்சிகள் இல்லை. அதனால் நாங்க மீட் பண்ணிக்கிற சந்தர்ப்பம் கிடைக்கல. சினிமா என்பது ஆர்ட்... இதில் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டு ம £ர்ஷியல் ஆர்ட் ஆக்கிடக் கூடாது. ரொம்ப பேசுறனோ..?’’

‘‘நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்..?’’ ‘‘ ‘கழுகு’ கிருஷ்ணா ஜோடியா ‘இருக்கு ஆனா இல்லை’ படத்தில் நடிக்கிறேன். மலையாளத்தில் ஒரு படம் கமிட் ஆகியிருக்கேன். சினிமா என்னோட கனவா இருந்ததில்லை. பத்தாம் வகுப்பு படி க்கும்போது மாடலிங் பண்ணியதைப் பார்த்து வந்த வாய்ப்புதான். ரெண்டே மலையாளப் படங்கள் பண்ணியதும் ‘களவாணி’ வாய்ப்பு கிடைச்சிடுச்சு. அதுக்கப்புறம் தமிழ் சினிமாவுல எனக்குன்னு  ஒரு இடத்தை தக்க வச்சிக்கணும்னு ஆசை வந்துடுச்சு. மத்தபடி நான் யார் இடத்துக்கும் ஆசைப்படல. டோலிவுட், பாலிவுட்னு அடுத்தடுத்து தாவி உடனே உச்சத்தைத் தொடணும்னு பேராசையும்  இல்லை. நல்ல நேரம் வந்தா, ஆசைப்படாத விஷயங்களையும் நம்மால அடைய முடியும். சினிமாவில் எனக்கு நெருங்கிய தோழிகளும் இல்லை... பொறாமைப்படும் நடிகையும் இல்லை.’’

‘‘நெருங்கிய ‘தோழர்கள்’..?’’
‘‘அப்படியும் யாரும் இல்லை. நான் படிச்சது பெண்கள் கல்லூரி
யிலதான். பி.ஏ ஆங்கில இலக்கியம் படிச்சிருக்கேன். காலேஜ் போற வழியில சில பசங்க பின்னாடி சுத்தியிருக்காங்க. பாவம், வண்டிக்கு பெட்ரோல் போட்டே செலவானதுதான் மிச்சம். யார் மேலயும்  எனக்குக் காதல் வரல.’’

‘‘ ‘மூடர்கூடம்’, ‘மதயானைக் கூட்டம்’ படங்கள்ல சும்மா வந்து போற மாதிரி இருந்துச்சே..?’’
‘‘ ‘மெரினா’ படத்தில் நடிக்கும்போது, அதில் அசோசியேட்டா இருந்த நவீன் பழக்கமானார். டேலன்ட்டான ஆள். என்னோட கேரக்டர் மட்டும் இல்லாமல், டோட்டலா ஒரு படத்தோட கதை பிடிச்சிருந் தாலே நான் நடிப்பேன். அப்படித்தான் அந்தப் படங்கள்ல நடிச்சேன். ஆனா, ‘புலிவால்’ படத்துல எனக்கு முக்கியத்துவம் இருக்குறதை படம் பார்க்கும்போது தெரிஞ்சுக்குவீங்க.’’

 அமலன்