facebook வலைப்பேச்சு



செராக்ஸ்னு எழுதினாதான் தூய தமிழாமே? அப்படியா?
முடியலையிசம்!
# கடுப்பைக் கௌப்பிக்கிட்டு...
 நறுமுகை தேவி

எல்லோருக்கும் யாரோ ஒருவர் அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க இருக்கிறார்கள் என்பது தனி சுகத்தை அல்லது ஒரு வகையான நிம்மதியைத் தருகிறது.
 பூ.கொ.சரவணன்

முன் சொல் அறியுமா பின் சொல் ராஜா சந்திரசேகர்

இப்போது நடப்பது பாராளுமன்றத் தேர்தலா? சட்டமன்றத் தேர்தலா? என்ற குழப்பம் பல தலைவர்களின் தேர்தல் பிரசார உளறல்களைப் பார்த்தாலே தெரிகிறது.
 ஜெயராஜ் பாண்டியன்

எதுவும் செய்யாதவர்கள், ஏதாவது செய்துகொண்டிருப்பவர்களிடம் முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் கேள்வி எழுப்பிக்கொண்டுதான் இருப்பார்கள்.
 சந்திரா தங்கராஜ்

முடிந்த திருவிழா
ஓய்வெடுக்கும்
ராட்டினக் குதிரைகள்.
 கி.சார்லஸ்

தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையின்
கனவினில் வந்து செல்வது
நம்மால் மறுக்கப்பட்ட
ஒரு கரடி பொம்மையாகவோ
ஒரு பூனைக்குட்டியாகவோ
மணற்குவியலில் எழுப்பிய வீடாகவோ
இருக்கக்கூடும்...
விளையாடட்டும்;
இப்போது எழுப்பிட வேண்டாம்!
கௌதமன் டிஎஸ் கரிசல்குளத்தான்

பாஜக ஒரு ஈமு கோழி. அதைப் போய் நம்பி வைகோ கூட்டணி வைத்துள்ளார்: தா.பாண்டியன்
# அப்போ நீங்க நம்பி இருந்தீங்களே அதிமுக... அது என்ன விராட் கோலியா?
 ஜேவிபி சச்சின்

பெருவன வாழ்வின்
வேட்டைப் பொழுதுகளை
இன்னமும் மறக்காத
நாயொன்று
எங்கள் வீட்டில் வளர்கிறது
 நந்தன் ஸ்ரீதரன்

ஈரம் தேடி அலையும் மனமாய்
மௌனித்துக் கிடக்கிறது...
பறந்து வீழ்ந்த சருகு!
 தமிழ்ச்செல்வி நிகோலச்

விழித்திருக்கும்போது கனவு களையும், விழி மூடியிருக்கும்போது நினைவுகளையும் தருபவளே மனம் கவர்கன்னி!
 தமிழ்ச்செல்வன் எத்திராஜ்

என்னோடு வாக்குவாதம் செய்ய யாருக்கு தில் இருக்கிறது: கார்த்திக்
# வாடா... டேய் தடியா... குண்டா...ன்னு ஒரு சின்னப் பய வடிவேல கிட்னி எடுக்க கூப்பிடுற காமெடிய நாங்களும் பாத்திருக்கோம் தல
 நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

twitter வலைப்பேச்சு

@naan  _shiva 
பாரதியே   மன்னியும்... இனி ஓடி விளையாடு கிடையாது; மூடி விளையாடு தான்...
# ஆழ்துளைக் கிணற்றை!

@itzraga  
காலைல அரக்கப் பறக்க பஸ் புடிக்க ஓடி வர்றப்ப ஹாயா மரத்து மேல உக்காந்து நம்மள எகத்தாளமா லுக்கு வுடுற காக்காயப் பாத்தாலும் பொறாமையா வருது!

@Thambi  _Vj
சாப்பாட்டு   இலையில் ஊத்திய ரசத்தையே தடுக்க முடியலையே... நாமெல்லாம் எப்படி எல்லையில் ஊடுருவும் சீனாக்காரன தடுக்கப் போறோம்?

@senthilcp   
காங்கிரஸ்   ஆட்சிக்கு வரா விட்டால் நான் கண்ணாடியைக் கழற்றுவேன்: நடிகர் கார்த்திக் 
# பாத்து... மோடி ஆட்சிக்கு வந்து பெண்டு கழட்டிடப் போறாரு!

@iMuthuram   
‘‘ஏ... திருடன்... திருடன்...’னு கத்திக்கிட்டே திருடனும் ஓடுற மாதிரி காங்கிரஸ்காரங்களும் ஊழல ஒழிக்கணும்னு ஓயாம கத்திக்கிட்டே இருக்காங்க!


@Sricalifornia  
யாரிடமாவது   சொந்தப் பிரச்னைகளைப் பகிர்ந்துகொண்டால், நம்மை விமர்சிக்கும் உரிமையையும் சேர்த்தே கொடுத்துவிடுகிறோம்.

@2nrc   
போன் பண்ணி ஒரு வார்த்தை பேசுவதுன்னா வெறும் ‘ஹலோ’தான் சொல்ல முடியும்...

@laksh  _kgm
ஆறுதல்   தேடும் மனக் குழந்தை கடவுள் பொம்மையைக் கட்டி அணைத்து உறங்குகிறது!

@c_sathishkumar  1
நுழைவுக்   கட்டணம் பக்தனுக்கு; நுழையாமல் கட்டணம் செருப்புக்கு!

@penathal  
ஒரு 5   வருஷம் யார் ஆட்சி பண்ணாலும் நாடு ஒண்ணும் ஆகிடாது. இந்தத் தேர்தலை வாழ்வா சாவா மாதிரி பாக்கறவங்களைப் பாத்தாதான் பயமா இருக்கு.

@arattaigirl   
தூக்கத்திலிருந்து   எழுவது சுலபம்தான்... படுக்கையிலிருந்து
எழுவதை விட!

@bommaiya   
பொண்டாட்டிக்காக ஒரே ஒரு தடவ தாஜ்மஹால கட்டுன ஷாஜகானத்தான் இந்த உலகம் கொண்டாடுது... மாசாமாசம் லோன் இ.எம்.ஐ கட்ற
நம்மள இல்ல!

@SujoJosh  
மனைவியோடு  சண்டை வந்தால் முதலில் செருப்பைத் தேடுங்கள். கிடைத்ததும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே
ஓடி விடுங்கள்!

@WritterMazhalai   
தமிழக வாக்காளர்கள்
என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?
# கரன்ட்டை குடுத்துட்டு நீங்க எக்கேடோ கெட்டுப் போங்க!