விவரமான பொண்ணு!



‘சாக்லெட் பாய்’ போலிருக்கும் மொழுமொழு கார்த்தியை வடசென்னைப் பையனாக்கும் இயக்குநர் இரஞ்சித்தின் முயற்சிக்கே பெரிய சபாஷ்!
- ராஜேஷ், சென்னை-41.

நஸ்ரியாவின் நிக்காஹ் லைவ் கவரேஜ் அருமை. திருமணத்துக்கு முன்பே பஹத் பாசிலுக்குப் பிடித்த பட்டர் சிக்கன், சிக்கன் ஸ்டீவ், பிரியாணி எல்லாம் சமைக்கக் கற்றுக்கொண்டாரா நஸ்ரியா? பஹத் லக்கிதான்!
- எஸ்.விமலநாதன், காங்கேயம்.

மீன்களுக்கு டாக்டரா? அவற்றுக்கும் காய்ச்சல், வயிற்று வலி, ஹார்ட் அட்டாக் எல்லாம் வருமா? இப்படி ஒவ்வொரு வரியிலும் அதிர்ச்சி வைத்தியம் தந்தது அந்தக் கட்டுரை. அதிலும் அரஸ்ஸின் கலகல ஓவியங்கள், கலக்கல்!
- இரா.கணபதி, சேலம்.

அடுத்த ரவுண்டுக்கு அஞ்சலி ரெடியானாலும் அழைக்க ஆளில்லை. அதற்குக் காரணம், உடம்பு சற்று உப்பியதே என்கிற ரகசியத்தைக் கண்டுபிடித்த உமக்கு ‘ஜேம்ஸ் பாண்ட்’
பட்டம்தான் தரணுமய்யா!
- நெ.சிவதம்பி, திருப்பூர்.

‘பொறியாளன்’ படத்தைப் பற்றி படிக்கும்போதே, ‘பொறி’ பறந்தது. படத்தின் நாயகி ரக்ஷிதாவின் போட்டோ, ஆண் கூட்டத்தை மீன் கூட்டம் போல ‘பொரி’ போட்டு இழுக்கும் போலிருக்கிறதே!
- கே.வி.பால்பாண்டி, மதுரை.

அமலாபால் கல்யாணமாகி செட்டிலாகிவிட்ட நேரமாய்ப் பார்த்து, அவர் இடம் தனக்குத்தான் என சமுத்திரகனியிடம் ஒட்டிக்கொண்டுள்ள தன்ஷிகா விவரமான பொண்ணுதான் பாஸ்!
- டி.வி.ஸ்டீபன் சார்லஸ், நாகை.

ஐ.எஸ்.ஓ 9001 தரச் சான்று என்றால், நம்பகம் என்று நினைத்திருந்தோம். ஆனால், ‘அது நிறுவனத்துக்குத்தான்... விற்கும் பொருட்களுக்கு அல்ல’ எனும் பகீர் தகவல்,
எங்களை உலுக்கிப் போட்டது.
- செ.காந்திமதி, கன்னியாகுமரி.

இவ்வார ‘பொலிட்டிக்கல் பீட்’ பகுதியில் வெளியாகியிருந்த அரசியல் செய்திகள், வழக்கத்தை விட கூடுதல் பரபரப்பு. அதிலும் ஷாருக்கான் - ஷம்பா டான்ஸ் குறித்த தகவல், படு கலக்கல் சார்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘அவனவன் ட்வென்ட்டி 20 மேட்ச்லயே 200 ரன் அடிக்கிறான். நீங்க டெஸ்ட் மேட்ச்ல கூட 20 ஓவர் ஆட மாட்டேங்கறீங்களே...’ - ஆல் தோட்ட பூபதியின் நக்கலில் நம் கிரிக்கெட் அணி மீண்டும் ஆல் அவுட்!
- ஆர்.ரம்யா சந்தோஷ், திருநெல்வேலி.