ஜோக்ஸ்



‘‘கஜானாவிலிருந்து காலணாகூட எடுக்க முடியவில்லை அமைச்சரே...’’
‘‘ஏன் மன்னா..?’’
‘‘பாஸ்வேர்ட் மறந்து விட்டது..!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.

தத்துவம் மச்சி தத்துவம்

ரத்தத்தைக் குடுத்தா
ரத்த தானம், கண்ணைக் குடுத்தா
கண்தானம். அதுக்காக ‘மைதா’வை குடுத்தா
மைதானம்னு சொல்ல
மாட்டாங்க...
- தானம் கொடுத்த மாட்டின்
பல் செட்டைப் பிடுங்கிப்
பார்ப்போர்
சங்கம்
-பர்வீன் யூனுஸ், ஈரோடு.

மகளிரணித் தலைவி ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டதுக்கு தலைவர் ஏன் கோபப்படறார்..?’’
‘‘ஜன்னல் கம்பிகளைப் பார்க்கும்போது அவருக்கு ஜெயில் ஞாபகம் வந்துடுதாம்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘அந்த ஆஸ்பத்திரி ரொம்ப மோசம்னு எதை வச்சு சொல்றீங்க..?’’
‘‘முகமூடி போட்டுக்கிட்டுத்தான் ஃபீஸே வாங்குறாங்க..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘பதுங்கு குழியில் ரெண்டு டைப்பா?’’
‘‘ஆமாம்! மாற்றானுக்கு பயந்து தோண்டியது... மகாராணிக்குப் பயந்து தோண்டியது!’’
- பி.ஜி.பி.இசக்கி, அகஸ்தியர்பட்டி.

‘‘என்ன டாக்டர் இது... ஃபீஸ்ல இருநூறு ரூபா அதிகமா சேர்த்திருக்கீங்க?’’
‘‘நர்ஸ்களுக்கான மேக்கப்
செலவு அது!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

தத்துவம் மச்சி தத்துவம்

குப்பை லாரி ரோட்ல போனா குப்பை கொட்டிக்கிட்டே போகும். தண்ணி லாரி தண்ணி கொட்டிக்கிட்டே போகும். பெட்ரோல் லாரி பெட்ரோல் கொட்டிக்கிட்டே போகுமா?
- கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டில் கசமுசா என யோசிப்போர் சங்கம்
- ஜி.தாரணி, அரசரடி.

ஓவியம்: கண்ணா