நியூஸ் வேஅவ்வளவாக பரபரப்பாக இல்லாத சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதில்லை என்ற பாலிஸி வைத்திருக்கிறார் ப்ரியா ஆனந்த். அதர்வா, கௌதம் கார்த்தி ரக இளம் ஹீரோக்களின் படங்கள் என்றால் உடனே கால்ஷீட் தருகிறார். இப்போது விக்ரம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் ப்ரியா.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டது. ‘‘இதுக்கு முன்பு நான் பண்ணின போலீஸ்ல ஒரு ஃபேமிலி பேக்ட்ராப் இருக்கும். ஆனா, இதுல வித்தியாசமான போலீஸை எதிர்பார்க்கலாம்’’ என்கிறார் விஷால்.

அமீர்கானின் ‘பிகே’ படத்தில் ஒரு பக்கா, ஆனால், சின்ன ரோலில் சஞ்சய் தத் நடித்தார். ‘பிகே’யில் அவர் என்ட்ரி மறக்க முடியாதது. அதே மாதிரி தமிழ் ‘பிகே’யில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

கமலை வைத்து பிரபுதேவா இயக்கும் படத்தின் பெரும்பகுதி மொரீஷியஸில் நடக்க உள்ளது. இதற்காக சமீபத்தில் மொரீஷியஸுக்கு லொகேஷன் விசிட் அடித்து வந்துள்ளார் கமல்.

இந்தியில் 3 படங்கள், தெலுங்கில் மகேஷ்பாபு வுடன் ஒரு படம், தமிழில் விஜய்யுடன் ‘புலி’ என பிஸியாக இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். ‘‘பாலிவுட்டில் முதலில் கவனம் செலுத்து, அப்புறம் மற்ற மொழிகளில் ஆஃபர்ஸ் அள்ளிக் கொண்டு வரும்’’ என தன் தங்கை அக்ஷராவுக்கு அட்வைஸும் செய்திருக்கிறார் ஸ்ருதி.

மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’வின் தமிழ் ரீமேக்கிற்கு ‘36 வயதினிலே’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். அது ஜோதிகாவின் வயதைக் குறிப்பது போல உள்ளது. ‘ஜோவிற்கே 36 வயதென்றால், அப்போ சூர்யாவிற்கு நாற்பதா?’ என சலசலப்பு எழும் என்பதால், அந்த டைட்டிலை மாற்றச் சொல்கிறார்களாம் நெருங்கிய வட்டாரத்தில்!

மல்லுவுட்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் செமயாக வொர்க் அவுட் ஆன சந்தோஷத்தில் இருக்கிறார் மஞ்சு வாரியர். இப்போது மோகன்லாலுடன் நடித்து வரும் மஞ்சு, ‘‘சக நடிகர்களுக்கு லால் சார் ஒரு பல்கலைக்கழகம்’ என பெருமை பொங்க சொல்கிறார்.

இங்கே ஷூட்டிங்கை முடித்து விட்டு மும்பைக்குப் பறந்த தமன்னாவிற்கு விமானத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ். இன்னொரு சீட்டில் ஹன்சிகாவைப் பார்த்ததும் இருவருக்குள்ளும் சந்தோஷம் சிறகடித்துப் பறக்க... செல்ஃபி எடுத்து ஹேப்பி ஃபீலா கியிருக்கிறார்கள்.

ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற ஸ்பீடில் இருக்கிறார் மணிரத்னம். தெலுங்கில் ‘ஓகே பங்கார’மாக வெளியிடுகிறார்கள். அங்கே துல்கர் சல்மானுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பவர் ‘நான் ஈ’ நானி.

சூர்யாவின் ‘மாஸ்’ படத்தில் நடிக்கும் ராசியால் பிஸியாகிவிட்டார் பிரணிதா. விக்ரம்பிரபு நடித்த ‘அரிமாநம்பி’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அதில் விஷ்ணு மஞ்சுவின் ஜோடியாக பிரணிதா கமிட் ஆகி
யிருக்கிறார். படத்தில் தெலுங்கிற்காக சில மாற்றங்களைச் செய்துள்ளனராம்.

‘அஜித் இடத்தைப் பிடிப்பது கடினம். ஆனால் அவரைப் போல கார் ரேஸர் ஆவது ஈஸி’ என ஜெய் நினைத்துவிட்டார் போல. கடந்த ஆண்டு தேசிய அளவிலான ரேஸிங்கில் கலந்துகொண்ட ஜெய், இப்போது ஃபார்முலா 1600 ரேஸில் 6வது இடத்தைப் பிடித்திருக்கிறார். ஃபார்முலா ஒன் ரேஸில் வென்ற பார்த்திவசுரேஷ்வரன்தான் ஜெய்க்கு கோச்!

ஸ்போர்ட்ஸை மையமாக வைத்து இந்தியில் ஒரு படம் பண்ணுகிறார் அமீர்கான். அதில் அவரது மகளாக நடிக்க டாப்ஸியை போட்டோஷூட் செய்திருக்கிறார்கள். அமீர்கானிடமிருந்து க்ரீன் சிக்னலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் டாப்ஸி.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த படம் முடிவாகிவிட்டது. அனேகமாக நயன்தாரா தான் ஹீரோயின். சிம்பு படத்தை சீக்கிரத்தில் முடித்துவிட்டு இதற்காக ரெடியாகிறார் கௌதம்.

ஷூட்டிங்கில் கொஞ்சம் பிரேக் கிடைத் தாலும் ஃபாரீன் பறந்துவிடுகிற பார்ட்டி சோனாக்க்ஷி சின்ஹா. இப்போது ரெஃப்ரெஷிற்காக மாலத்தீவு பறந்திக்கிறார். அங்கே கடலில் ஆசை தீரக் குளித்து குஷியாகியிருக்கிறது பொண்ணு!

சித்தார்த் ‘எனக்குள் ஒருவன்’, ‘காவியத் தலைவன்’ தயாரிப்பாளரான வருண் மணியனுக்கு அரை சம்பளத்தில் ஒரு படம் செய்து கொடுக்க சம்மதம் சொல்லிவிட்டார். வாங்கின நல்ல பெயருக்கு கொடுக்கலாமே!

கார்த்தி இதுவரைக்கும் விவேக்குடன் சேர்ந்து நடித்ததில்லை. இப்போது ‘காஷ்மோரா’ படத்தில் அவரோடு கூட்டணி வைக்கிறார்கள். இதற்காக இரண்டு பேரும் சந்தித்து பேசி
யிருக்கிறார்கள்.

‘‘வில்லேஜ் சப்ஜெக்ட்ல குட்வில் சம்பாதிச்சிட்டேன். இனி மாடர்ன் கேரக்டர்கள்தான் வேணும்’’ என்கிறார் லட்சுமி மேனன் இப்போது நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மறுத்து விடுகிறார் என குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. என்னம்மா, இப்படிப் பண்றீங்களேம்மா!