கவர்ச்சி தாகம்!



அனுதினமும் மிரட்டி வரும் பன்றிக் காய்ச்சல், வெயில் அதிகரித்தால் குறைந்து விடும் என்ற தகவல் ஆறுதல் தந்து, அச்சம் போக்கியது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கடைசியாக ‘வுட்பிக்கு உளவியல் டெஸ்ட்’ எனப் போட்டு, ‘அவன் அவள் அன்லிமிடெட்’ தொடரில் புண்ணியத்தைத் தேடிக்கிட்டீங்க... எங்க கோபத்திலிருந்தும் தப்பிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்!
- ஜெ.வி.கண்ணாயிரம், காங்கேயம்.

யதார்த்த இயக்குநர் ஆர்.சி.சக்திக்கு, ‘அழியாத கோலங்கள்’ பகுதியில் சாருஹாசன் எழுதிய நினைவஞ்சலி படித்து கண்களில் நீர் கோர்த்தது!
- வி.சண்முகம், சிதம்பரம்.

சிருஷ்டி டாங்கே போட்டோவின் குளிர்ச்சி, அடிக்கிற வெயிலில் எங்களுக்கு ‘கவர்ச்சி தாகத்தை’ தீர்த்தது. ‘லவ் பண்ண டைம் கொடுங்க’ என அவர் கெ(£)ஞ்சறப்ப... வாவ்!
- எச்.சூரஜ்குமார், திருப்பூர்.

பலாத்காரக் கொலை வழக்கு கைதியை ஆவணப்படத்தில் பேச அனுமதி அளித்ததே அரசு தான். ஆக, இது இந்தியாவை அவமானப்படுத்த நடக்கும் சர்வதேச சதியென ஒப்பாரி வைப்பதில் பயனில்லை!
- எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.

ஓய்வூதியம் பெறும் ஓல்டு ஏஜ் பிரிவினருக்கு மத்திய அரசின் புதிய பட்ஜெட் இழைத்திருப்பது அநீதி. அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த கட்டுரை, சின்ஸியரான சமூக சேவை!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

உருவம் சிறியது என்றாலும் ‘எளிய வாழ்வு... ஏது தாழ்வு’ என்ற பாலிஸியோடு சினிமாவில் வலம் வரும் ‘அம்பானி’ சங்கர், மென்மேலும் வளர்வார். ‘வளர்ந்து’ கொண்டே
யிருப்பார்!
- ப.இசக்கி பாண்டியன் திருநெல்வேலி.

‘ஹெல்மெட் போடுங்க’ என்று அறிவுரை வழங்கும் ஆகாஷ், பெயருக்கேற்ப வானத்தைப் போல உயர்ந்த மனம் கொண்டவன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

மார்ச் மாதத்தில் வரப் போகும் ஜாலி தினங்களைப் பட்டியலிட்டு வாசகர்களை முன்கூட்டியே தயார்படுத்திய உமது பாங்கு... செம போங்கு சார்!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

‘கேப்டன் அமெரிக்கா’ படத்தின் மூக்கறுந்த கோர வில்லன் போல தானும் மாறத் துடிக்கும் மனிதனை நினைத்தால் வேடிக்கை அல்ல... வேதனைதான் மிஞ்சுகிறது!
- எஸ்.லதா மணி, தேனி.

லேட்டானால் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பிவிடும் பள்ளி நிர்வாகங்களுக்கு எதிராக நாஞ்சில் நாடன் முன்வைக்கும் வாதங்கள் நியாயமானவை. நம் விதிமுறைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை!
- மனோகர், சென்னை-18.