எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோ அஜித்!



ஸ்ருதி ஹாசன்

‘‘இந்த தீபாவளி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அஜித்தோட நான் நடிச்ச ‘வேதாளம்’ ரிலீஸ் ஆகுது. மும்பைல ‘யாரா’, ‘ராக்கி ஹேண்ட்சம்’னு ரெண்டு படங்களோட ஷூட்டிங்  இருக்கு... பட், அன்னிக்கு சென்னையில இருக்க மேக்ஸிமம் ட்ரை பண்ணுவேன்.

ஆனா, தீபாவளிக்கு செம ஹேப்பியா ஆகுறது அப்பாவும், அக்‌ஷராவும்தான். டென் தவுசண்ட் வாலா பட்டாசு கொளுத்தி செமயா செலிப்ரேட் பண்ணுவாங்க. எனக்கு பட்டாசு பிடிக்காது. ஒன்லி சங்கு சக்கரம்தான்!’’  -  மும்பையில் இருந்த ஸ்ருதி ஹாசனுடன் பேசினாலே அள்ளுது எனர்ஜி!

‘‘எப்படி இருக்கு மும்பை லைஃப்?’’‘‘சந்தோஷமா இருக்கு. இங்கே நான் சொந்த வீடு, கார் வாங்கிட்டேன். பெருமையா இருக்கு. ஆனா, நல்ல சாம்பார் கிடைக்காது.  அப்பாவோட அக்காவான நளினி ரகு அத்தை வீடு இங்கேதான் இருக்கு. ஐயங்கார் வீட்டு  சாம்பார் சாப்பிடணும் போல தோணினா, உடனே அத்தை வீட்டுக்குப் போயிடுவேன்! ஆனா, இப்போ நான் டயட் மெயின்டெயின் பண்றதால, எல்லாமே பார்த்துப் பார்த்து சாப்பிட வேண்டியிருக்கு. பாலிவுட் ஹீரோயின்னா ஸ்லிம்மா இருந்தாகணுமே!’’‘‘என்ன சொன்னார் அஜித்?’’

‘‘ ‘வேதாளம்’ல நடிச்சது வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். அவர் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஹீரோ. ஒரு புரொஃபஷனல் போட்டோகிராபர் மாதிரி அஜித் சார், என்னை போர்ட்ஃபோலியோ பண்ணிக் குடுத்தது மறக்க முடியாத மொமன்ட். இத்தாலியில் ஷூட்டிங் அப்போ, ச்சும்மா கேஷுவலா பண்ணின ஷூட் அது.

இந்தப் படத்துக்கு முன்பே, ‘ரேஸ் குர்ரம்’க்காக இத்தாலி போயிருக்கேன். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அங்கே ஒரு இடத்தில் ஒரு ஆலயத்துக்குப் போயிருந்தோம். இப்போ மறுபடியும் அங்க போய் தரிசிச்சுட்டு வந்தேன். ‘சிறுத்தை’ சிவா ரொம்ப நல்ல டைரக்டர். இனிமையான மனிதர்!’’
‘‘விஜய்..?’’

‘‘ ‘புலி’ மாதிரி ஒரு ஃபேன்டஸி படத்துல  வொர்க் பண்ணினது, வித்தியாசமான அனுபவம். விஜய் சார் செட்ல அமைதியா  இருப்பார்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அவர் செம கூல் பர்சன்!’’‘‘அஜித்... பிரியாணி?’’

‘‘அஜித் சார் எனக்கு பிரியாணி பண்ணிக் குடுக்கல. ‘ஸ்ருதி, நீங்க டயட்ல இருக்கீங்க... ஸோ, இந்த டிஷ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்’னு ஒரு டயட் டிஷ் பண்ணிக் குடுத்தார். செம டேஸ்ட்டியா இருந்துச்சு!’’
‘‘உங்க சினிமா நண்பர்கள்..?’’

‘‘என்னோட வொர்க் பண்ணின எல்லாருமே நல்ல நண்பர்கள்தான். அதிலும் பெஸ்ட் ஃப்ரெண்ட் விஷால். ‘பூஜை’ படத்தில் அவர் கூட நடிச்ச அனுபவத்தில் சொல்றேன்... விஷால் ரொம்ப நல்லவர், திறமைசாலி, புத்திசாலி!’’
‘‘ ‘சிங்கம்-3’க்கு ரெடியாகிட்டீங்களா?’’

‘‘ஹரி சார், சூர்யா சார் கூட மறுபடியும் வொர்க் பண்றது சந்தோஷம். சிவா சார் மாதிரியே ஹரி சாரும் எனக்கு ரொம்பப் பிடிச்ச டைரக்டர். ‘பூஜை’யில் நடிச்சதாலதான் ஹரி சார் வொர்க்கிங் ஸ்டைல் பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது. ‘சிங்கம் 3’ல நடிக்கப்போறதில் ரொம்ப எக்ஸைட்டடா இருக்கு. சூர்யாவோட வொர்க் பண்றது இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம்.

நிறைய கத்துக் குடுப்பார். எங்க அப்பா கூட, ‘சூர்யா, நம்ம வீட்டுப் பிள்ளை’னு சொல்வார். இந்தியில ‘சிங்கம்’ பார்ட் ஒன் அண்ட் டூ வந்துச்சு. ஆனா, நம்ம துரைசிங்கம் மாதிரி அந்த சிங்கம் இல்ல. எப்போ ஷூட்டிங் ஆரம்பிப்பாங்கனு ஆர்வமா இருக்கேன்!’’
‘‘அப்பா விளம்பரப் படத்தில் நடிச்சிருக்காரே... கவனிச்சீங்களா?’’

‘‘விளம்பரப் படங்களில் நடிங்கனு அப்பாகிட்ட அடிக்கடி சொல்லியிருக்கேன். அதுக்கு இப்பதான் நேரம் செட் ஆகியிருக்கு. அவர் எதைப் பண்ணினாலும் ஒரு அர்த்தத்தோடதான் பண்ணுவார்!’’ ‘‘ஸ்ருதியோட பர்சனல்..?’’‘‘கொஞ்சம் கடவுள் பக்தி உண்டு. இஷ்ட தெய்வம் முருகன். என் நம்பிக்கையில அப்பா குறுக்கிட மாட்டார். ஐஸ்க்ரீம் ரொம்பப் பிடிக்கும். ஆனா, இப்ப குரலுக்காக சாப்பிடுறதில்ல. வீட்ல இருந்தா சின்னச் சின்னதா குக்கிங் பண்ணிடுவேன்.

பொங்கல், இட்லி, தோசைனு எல்லாம் பிடிக்கும். ஆனா, அடிக்கடி டயட்ல இருக்கறதால அதை மிஸ் பண்ண வேண்டியிருக்கு. இன்னொரு ஹாபி பெயின்டிங்ஸ். ஓரளவு நல்லா வரைவேன். ஃபேன்டஸி, ஆட்டோபயோகிராபி புக்ஸ் படிக்கப் பிடிக்கும். ஹாலிவுட் மூவிஸ் விரும்பிப் பார்ப்பேன்!’’‘‘அடுத்து?’’

‘‘மியூசிக் பண்றது, பாடுறது... இப்படியே செட்டில் ஆகிடுவேன்னு நினைச்சேன். ஆனா, இப்போ பார்த்தா 25 படங்கள்கிட்ட பண்ணிட்டேன். நடிக்க வந்தது நானே எதிர்பார்க்காதது. லேட்டஸ்டா ரிலீஸ் ஆன தெலுங்குப் படம், ‘மந்துடு’ பார்த்து ‘நல்லா பண்ணியிருக்கே’னு அப்பா கூட பாராட்டினார். ‘என் படம் ரிலீஸ் ஆகியிருக்கு.

போய்ப் பாருங்க’னு இதுவரைக்கும் நான் அப்பாகிட்ட சொன்னதில்ல.   இப்போ ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்றவங்களுக்காக ஒரு புரொடக்‌ஷன் கம்பெனி தொடங்கப்போறேன். ஃப்யூச்சர்ல டைம் கிடைச்சா மியூசிக் ஆல்பம் ஒண்ணும் பண்ணலாம்னு இருக்கேன். ஸோ, என்னோட 60 வயசுலயும் நான் சினிமாவில்தான் இருப்பேன்!’’

- மை.பாரதிராஜா