+2 மாணவர்களே...



மருத்துவம், பொறியியல், சி.ஏ, கடல்சார் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள்

விண்ணப்பிக்க ரெடியா?

+2 தேர்வு பரபரப்பு ஓயும் நேரம். இது நுழைவுத்தேர்வுகளின் காலம். சிறந்த கல்வி நிறுவனங்களில் குறைந்த செலவில் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வுகளுக்குக் தயாராகலாம். அண்மைக்காலத்தில் விண்ணப்பிக்க வேண்டிய சில நுழைவுத்தேர்வுகள் பற்றி விளக்குகிறார் கல்வியாளரும், ‘ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி’யின் இயக்குனருமான ஆர்.ராஜராஜன்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) Common Entrance Test

மத்திய அரசின், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழே செயல்படும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் வளாகங்களைக் கொண்டு இயங்குகிறது. இங்கு
* B.Tech (Marine Engineering)
* B.Tech (Naval Architecture - Ocean Engineering)
* B.Sc (Ship Building - Repair)
* B.Sc (Maritime Science)
* B.Sc (Nautical Science)
* Diploma in Nautical Science leading to B.Sc.(Applied Nautical Science) போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது. +2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றவர்களும் தற்போது பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 

இந்த நுழைவுத்தேர்வு 25.4.2015, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.imu.edu.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள்; 6.4.2015. சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையிலான இந்தத் தேர்வில் இயற்பியல் வேதியியல், கணிதம், பொது அறிவு, நுண்ணறிவு தொடர்பான வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வின் விண்ணப்பக் கட்டணம், பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.1000. SC/ST பிரிவினருக்கு ரூ.700.

கூடுதல் விவரங்களுக்கு:
Indian Maritime University,
East Coast Road, Uthandi,
Chennai 600 119, Tel:044 24530343 / 345

CA படிப்புக்கான CPT நுழைவுத்தேர்வு

The Institute of Chartered Accounts of India நிறுவனம் சிகி படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக Common Proficiency Test (CPT) என்ற தேர்வை நடத்துகிறது. 10 வகுப்பு. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். +2 வில் வணிகக் கணிதம், கணிதம், பொருளாதாரம், வணிகவியல், கணக்கியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்களுக்கு இத்தேர்வும், படிப்பும் எளிதாக இருக்கும். 10ம் வகுப்பு முடித்து சிறிஜி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் +2 முடித்த பின்புதான் சிகி படிப்பில் சேர இயலும். வருடத்துக்கு 2 முறை இந்த தேர்வு நடைபெறும். ஜுன் மாதம் நுழைவுத்தேர்வை எழுத விரும்புவோர் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள்ளும், டிசம்பரில் எழுத விரும்புவோர் அக்டோபர் ஒன்றாம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

CPT நுழைவுத் தேர்விற்கு பதிவுக் கட்டணம் ரூ.6000 மற்றும் இதழ்களுக்கான ஆண்டுக்கட்டணம் ரூ.200. இந்தத் தொகையை ‘The Secretry, Chartered The Institute of Accounts of India’ என்ற பெயரில் புதுடெல்லி, கான்பூர், மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற இடங்களில் ஏதேனும் ஒன்றில் மாற்றத் தக்கவாறு டி.டி எடுத்து அனுப்ப வேண்டும்.

இந்த நுழைவுத்தேர்வு Accountancy, Mercantile law, General Economics,  quantitative aptitude ஆகிய நான்கு பாடங்களில் நடைபெறும்.200 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வு 2 பிரிவுகளாக நடைபெறும். இடையே 2 மணி நேரம் இடைவெளி தரப்படும். முதல் பிரிவில் இரண்டு உட்பிரிவுகள் உண்டு. இதில் பிரிவு கி-யில் கணக்கியல் 60 மதிப்பெண்களுக்கும், மெர்க்கண்டைல் விதி 40 மதிப்பெண்களுக்கும் வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் பிரிவிலும் இரண்டு உட்பிரிவுகள் உண்டு. இதில் பிரிவு A-யில் பொது பொருளாதாரத்தில் 50 மதிப்பெண் களுக்கும், குவாண்டிடேட்டிவ் ஆப்டிட்யூடில் 50 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு;
The Institute of Chartered Accountants of India,
ICAI Bhawan, 122, Mahatma Gandhi Road,
Post Box No. 3314, Nungambakkam,
Chennai  600 034. phone No: (044) 39893989.

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) - வேலூர்


வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி MBBS, B.Sc -நர்சிங், நியூளியர் மெடிக்கல் டெக்னாலஜி, மருத்துவ ஆய்வக தொழில் நுட்பம், கண் மருத்துவ தொழில்நுட்பம், மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் சயின்ஸ், கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிஸ் தொழில்நுட்பம், புரோத்தடிக்ஸ் மற்றும் ஆர்த்தோடிக்ஸ், ரேடியாலஜி இமேஜிங் தொழில்நுட்பம், ரேடியோதெரபி தொழில்நுட்பம், மெடிக்கல் சோஷியாலஜி, கார்டியோ பல்மனரி பர்ஃபியூஷன்கேர் தொழில் நுட்பம், நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி, விபத்து மற்றும் அவசர மருத்துவ உதவித் தொழில்நுட்பம், கார்டியாக் தொழில்நுட்பம், ஆக்குபேஷனல் தெரபி, ஆடியாலஜி போன்ற மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 26.3.2015க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங் களை சமர்ப்பிக்க இறுதி நாள் 2.4.2015. பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களை எடுத்து தேர்ச்சியடைந்த, இந்தாண்டு தேர்வெழுதியுள்ள மாணவர்கள் விண்ணப் பிக்கலாம்.

www.cmchvellore.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.800. “CMC Vellore Association a/c” என்ற பெயரில் டி.டி. எடுக்க வேண்டும். டி.டியின் பின்னால் விண்ணப்பம் மற்றும் டி.டி. எண்ணைக் குறிப்பிடவேண்டும். ஆன்லைனில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியாகவும் பணம் செலுத்தலாம்.MBBS / B.ScNursing /  AHS படிப்புகளுக்கான தேர்வு 23.5.2015 அன்று நடைபெறும். மற்ற படிப்புகளுக்கான தேர்வு 23.5.2015 பிற்பகல் நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு:
Directorate
Christian Medical College, Vellore  632004
Tel: 04162282010, 3072010
Email: directorate@cmcvellore.ac.in

ஜிப்மர்-புதுச்சேரி

புதுவையில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வை +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், தற்பொழுது பொதுத்தேர்வு எழுதி உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MBBS படிக்க விரும்பும் மாணவர்கள் www.jipmer.edu.in என்ற இணையதளம் வழியாக 4.5.2015 வரை விண்ணப்பிக்கலாம். மருத்துவம் சார்ந்த B.Sc மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு 6.4.2015 முதல் 7.6.2015 வரை விண்ணப்பிக்கலாம். MBBS படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் தலா 60 வினாக்களும், ஆங்கிலத்தில் 20 வினாக்களும் கேட்கப்படும். சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் வினாக்கள் அமையும். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படாது. ஆன்லைன் வழியாகவே தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் நாள்: 7.6.2015.  இந்த நுழைவுத்தேர்வுக்கான கட்டணம், பொது பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1000. SC/ST/OPH பிரிவினருக்கு ரூ.800.

COMEDK UGET 2015 நுழைவுத்தேர்வு


கர்நாடக மாநிலத்தில் செயல்படும் 14 மருத்துவக் கல்லூரிகள், 25 பல் மருத்துவக் கல்லூரிகள், 150 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 20,000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்காக அக்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்தும் பொதுத்தேர்வு COMEDK (Consortium of Medical, Engineering and Dental Colleges of Karnataka). இத்தேர்வில் தமிழக மாணவர்களும் பங்கேற்கலாம்.

தேர்வு நடைபெறும் நாள்: 10.5.2015. கர்நாடக மாநிலத்தில் மட்டும் பல்வேறு மையங்களில் இந்த நுழைவுத்தேர்வு நடக்கும். கர்நாடக கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இத் தேர்வில் பங்கேற்கலாம். www.comedk.org என்ற இணையதளத்தில் விண்ணப் பத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 8.4.2015. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இறுதி நாள் 15.4.2015.

இயற்பியல், வேதியியல், கணிதம் (அல்லது) இயற்பியல், வேதியியல், உயிரியல். இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல். என இரண்டு பிரிவுகளில் விருப் பத்திற் கேற்ப (மருத்துவம், பொறியியல்) மாணவர்கள் ஒரு பிரிவைத் தேர்வு செய்து கொள்ளலாம். முதல் பிரிவில் நுழைவுத் தேர்வு எழுத கட்டணம், ரூ.1200. இரண்டாம் பிரிவில் தேர்வெழுது வதற்கான கட்டணம், ரூ.1500. தேர்வுக் கட்டணத்தை பெங்களூரில் பெறும் வகையில் தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளில் ஞிஞி எடுத்து அனுப்பலாம்.

கூடுதல் விவரங்களுக்கு:

COMEDK, # 132, Second Floor, 11th Main, 17th Cross, Malleswaram,
Bangalore  560 055. ph: 08041132810