உணவுத் தொழில்நுட்பவியலுக்கு உலகெங்கும் வேலைவாய்ப்பு!



உணவு அறிவியலின் ஒரு அங்கம்தான் உணவுத் தொழில்நுட்பவியல். ஒரு பொருளை உண்ணத் தகுந்ததாக மாற்றும் படிநிலைகளை அறிவியலின் துணைகொண்டு கற்றுத் தரும் தொழில்நுட்பம் இது. இத்துறை மீதான நாட்டம் இப்போதுதான் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், இத்துறையின் முன்னோடிகள், இத்துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரங்கள் குறித்து விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

‘‘முந்தைய காலங்களில் உணவைப் பதப்படுத்தும் நுட்பமே உணவுத் தொழில்நுட்பமாக கருதப்பட்டது. இன்று உணவுத் தொழில்நுட்பம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து சென்றுவிட்டது. உணவைக் கையாள்வதில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து லூயி ஃபாஸ்டியர் 1864ம் ஆண்டு கருத்துகளை வெளியிட்டதுதான் உணவுத் தொழில்நுட்ப அறிவியல் கவனம் பெற்றதன் தொடக்கம் என்று கூறலாம்.

உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுத்து அவற்றை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்து உண்ணத் தகுந்தவையாக நிலைத்திருக்கச் செய்ய உணவுத் தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுகிறது. உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் தொழில்நுட்பங்கள் இல்லையேல் உலகிலுள்ள பெருமளவு மக்கள் உணவின்றி மடியும் நிலை உருவாகும். ஒரு நாட்டில் விளையும் விளைபொருட்கள் சேமிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படவில்லையெனில் உலகில் பஞ்சமும் பட்டினியும் தலை விரித்தாடும்.

கடலும் மலையும், வெள்ளமும் வறட்சியும் மாறி மாறி பரவி விரிந்து கிடக்கும் இந்த நிலப்பரப்பில் எல்லாப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் பட்டினியின்றி வாழ உணவு தொழில்நுட்பவியலே பிரதானம். மக்கள்தொகை அதிகரித்து வரும் இக்காலத்தில் உணவுத் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் இத்துறையை மாணவர்கள் தாராளமாகத் தேர்வு செய்யலாம்.

உணவுத் தொழில்நுட்பவியல் சார்ந்த பிரிவுகள்/ படிப்புகள்

Food Bio Technology  உணவு உயிர்த்தொழில் நுட்பவியல்
Food packaging  உணவு பேக்கேஜிங்
Food grading  உணவு தரம்பிரித்தல்
Optical  Sorting  ஒலி பிரித்தல்
Food processing  உணவுப் பதப்படுத்துதல்
Food preservation  உணவுப்பொருள் பாதுகாப்பு
Microtial Technology  நுண்ணுயிர் தொழில்நுட்பம்
Food Biology  உணவு உயிரியல் இப்பிரிவுகளில் படிக்கலாம்.

B.Sc., B.S., B.Tech, M.Tech. M.Sc., Ph.D., D.Phil., D.Sc., Diploma உணவுத் தொழில்நுட்பவியல் துறையைக் கொண்ட இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...

சென்ட்ரல் ஃபுட் டெக்னாலஜிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், மைசூரு அமிட்டி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜி, புதுடெல்லி அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் கேட்டரிங் டெக்னாலஜி, சென்னை
ஏ.டி. பட்டேல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, குஜராத்
ஆச்சார்யா என்.ஜி.ரங்கா அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி, ஐதராபாத்
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
பாரத் பல்கலைக்கழகம், சென்னை
புவனேஷ்வர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஒடிசா
காலேஜ் ஆஃப் டெய்ரி அண்டு ஃபுட் சயின்ஸ் டெக்னாலஜி, ராஜஸ்தான்

உலக அளவில் உணவுத் தொழில்நுட்பவியல் துறையைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள் சில..

மாஸ்ஸே யுனிவர்சிட்டி, நியூசிலாந்து (www.massey.ac.nz)
ஓரிகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.oregonstate.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா, அமெரிக்கா (http://ucdavis.edu)
வேஜனிஞ்சன் யுனிவர்சிட்டி, நெதர்லாந்து (www.wageningenur.nl)
யுனிவர்சிட்டி ஆஃப் நெப்ராஸ்கா, அமெரிக்கா (www.unl.edu)
லண்ட் யுனிவர்சிட்டி, ஸ்வீடன் (www.lunduniversity.lu.se)
வர்ஜினியா டெக் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.fst.vt.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் குயின்ஸ்லாண்ட், ஆஸ்திரேலியா (www.uq.edu.au)
யுனிவர்சிட்டி ஆஃப் ரீடிங், இங்கிலாந்து (www.reading.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்கா   (www.uj.ac.za)

உணவுத் தொழில்நுட்பவியலில் சாதித்த இந்திய வல்லுநர்கள் சிலர்...

பேராசிரியர் ககன் குப்தா
பேராசிரியர் அமித் ஜீன்வால்
பேராசிரியர் ரித்தா போஸ்லே
பேராசிரியர் சுனிதா பாட்டீல்
பேராசிரியர் அஞ்சலி சாண்டல்
பேராசிரியர் தேஜிந்தர் கவுர்
பேராசிரியர் சாந்தனு குப்தா
பேராசிரியர் சையத் சலீம் யாசர்
பேராசிரியர் டி.ஆர்.அபர்ணா
பேராசிரியர் எம்.எம்.ஆலம்

உலகப் புகழ்பெற்ற உணவுத் தொழில்நுட்பவியல் வல்லுநர்கள் சிலர்...

நிக்கோலஸ் அப்பெர்ட், பிரான்ஸ்
லூயி பாஸ்டியர், பிரான்ஸ்
ஹான்ஸ் பாஸ்லா, ஜெர்மனி
ஃப்ராங்க் லெஹ்மன், அமெரிக்கா
கெய்ல் பேக்கஸ் பெல்லர், நியூசிலாந்து
ஜே.டி. ப்ளேர்ஸ், அமெரிக்கா
சர். பிரான்ஸிஸ் பேக்கன், அமெரிக்கா
சர் ப்ரோக்கா ப்ரெய்ன், ஜெர்மனி
கேப்ரியல் டிசோஸா, ஆஸ்திரேலியா
எரிக் ஸ்கோஸர், அமெரிக்கா

உணவுத் தொழில்நுட்பவியல் துறையை வளர்க்கவும், ஆய்வுகளை ஒருங்கிணைத்து அங்கீகாரம் பெற்றுத்தரவும்  தொடங்கப்பட்டுள்ள அமைப்புகள் / குழுக்கள் சில...

அசோசியேஷன் ஆஃப் ஃபுட் சயின்டிஸ்ட் அண்டு ரிசர்ச்சர்ஸ், இந்தியா
ஃபுட் டெக்னாலஜி அசோசியேஷன் ஆஃப் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா
இன்டர்நேஷனல் யூனியன் ஆஃப் ஃபுட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, அமெரிக்கா
அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ஃபுட் சயின்ஸ், அமெரிக்கா
சைனீஸ் ஃபுட் சொசைட்டி, சீனா
டெய்ரி இண்டஸ்ட்ரி அசோசியேஷன், ஆஸ்திரேலியா
ஃபுட் டெக்னாலஜிஸ்ட்ஸ் அசோசியேஷன், கனடா
ஆப்ரிக்கன் ஃபுட் டெக்னாலஜி சொசைட்டி, தென் ஆப்ரிக்கா
கனடியன் சொசைட்டி ஆஃப் ஃபுட் டெக்னாலஜி, கனடா
நியூசிலாந்து ஃபுட் டெக்னாலஜிஸ்ட்ஸ் சொசைட்டி, நியூசிலாந்து.

உணவுத் தொழில்நுட்பவியல் துறையில் சாதிக்கும் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் / பதக்கங்கள் சில...

இன்ஸ்பையர் ஃபேகல்டி ஃபெல்லோஷிப், இந்தியா
யங் சயின்டிஸ்ட் அவார்டு, இந்தியா
டாக்டர் டி.எஸ்.கோத்தாரி ஃபெல்லோஷிப், இந்தியா
என்டோமென்ட் கோல்டு மெடல், ஐ.ஐ.டி, காரக்பூர்
தி ஜப்பான் ப்ரைஸ், ஜப்பான்
எஃப்.டபிள்யூ.ரீய்ட் மெமோரியல் மெடல், ஆஸ்திரேலியா
ப்ரீஸ்ட்லி மெடல், அமெரிக்கா
நேஷனல் மெடல் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா
ஜே.எஸ்.ஸ்காட் மெடல், நியூசிலாந்து
பெய்ல்பி மெடல், அமெரிக்கா

 உணவுத் தொழில்நுட்பவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் சில...
டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, புது டெல்லி
சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் புட் டெக்னாலஜி, மைசூரு

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நட்சத்திர உணவு விடுதிகள், கப்பல் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், புது டெல்லி
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்
பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர், மும்பை
டிபார்ட்மென்ட் ஆஃப் பயோ டெக்னாலஜி, புதுடெல்லி
இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அமைப்புகள்
உணவு ஆய்வு நிறுவனங்கள்
பால் மற்றும் பிற உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள்

அடுத்த இதழில் மானிடவியல் (Anthropology)
தொகுப்பு: வெ.நீலகண்டன்