தேடலுக்கு நன்றி!



+2 மாணவர்களுக்கான அக்கறை டிப்ஸ்கள் அத்தனையும் அற்புதம். மாதிரி வினாத்தொகுப்பு, ஞாபகமறதியைப் போக்கும் வழிகள், தேர்வறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், தேர்வுக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள், கண்களைப் பாதுகாக்க டிப்ஸ், தேர்வு பயம் போக்கும் வழிமுறைகள் என நீங்கள் தந்திருந்த அனைத்து கட்டுரைகளிலும் அக்கறை ததும்பியது. 
- எஸ்.சரஸ்வதி, புதுச்சேரி.

பெட்ரோல் விலை போக்குக் காட்டிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், சென்னை திருவேற்காடு எஸ்.ஏ. எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள சோலார் மூலம் ஓடக்கூடிய பைக் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கிறது. பாக்கெட்டுக்கும் பாதகமில்லை, சுற்றுச்சூழலுக்கும் பிரச்னையில்லை. மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.
- எஸ்.அதியமான், தர்மபுரி.

10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வு என்றாலே மாணவர்களுக்கு பயத்தில் காய்ச்சலே வந்துவிடும். அதுபோன்ற பயம், பதற்றத்திலிருந்து விடுபடுவது பற்றி டாக்டர் அபிலாஷா தந்திருந்த ஆலோசனைகள் மாணவர்களுக்கு உற்சாக டானிக்காக இருந்தது.
- டி.கே.சதாசிவம், திருநெல்வேலி.

கேம்பஸ் நியூஸ்’ பகுதியில் வழங்கும் செய்திகள் அனைத்தும் மிகவும் உபயோகமாக இருக்கின்றன. கல்வி சார்ந்த ஆணைகள், அறிவிப்புகள், நுழைவுத்தேர்வுகள், செய்திகள் என அனைத்துவிதமான செய்திகளும் அதில் கொட்டிக் கிடக்கிறது. உங்கள் தேடலுக்கு நன்றி.
- வீ.சுந்தரம், சாத்தூர்.

சென்னையில் கடந்த 20 வருடங்களாக வசிக்கிறேன். ஆனால் சென்னை கணித நிறுவனம் பற்றி எனக்குத் தெரியாது. கணிதத்தின் மீது தீரா விருப்பம் கொண்ட எனக்கு அந்நிறுவனத்தை கல்வி வேலை வழிகாட்டிதான் அறிமுகப்படுத்தியது. மிக்க நன்றி.
- செந்தில்வடிவு, சென்னை-53.