மானுடவியல் படித்தால் மகத்தான எதிர்காலம்



மனித சமுதாயத்தின் கடந்த கால மற்றும் நிகழ்கால  வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், உயிரியல் மற்றும் சமூக  அறிவியலின் துணைகொண்டு படித்தறிந்து ஆய்வு செய்ய உதவும் துறையே மானுடவியல் (Anthropology). எதிர்கால வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் கடந்த கால வாழ்க்கைமுறையும், நாகரிகமும்தான் அடித்தளம். அந்த வகையில் அவற்றை ஆராய்ந்து அறியத்  தரும் மானுடவியல் துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக வளர்ந்து வருகிறது. உலகெங்கும் ஏராளமான வேலைவாய்ப்புகளையும்,  மரியாதையையும், புகழையும் பெற்றுத்தரும் இப்படிப்பை வழங்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள், இப் படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள்,  இத்துறையின் முன்னோடிகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

‘‘மனித சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சி மற்றும் அதன் விளைவுகள், பல்வேறு நாடுகளிலுள்ள மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடை, அவர்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும்  அதற்கான காரணங்கள் குறித்தும் மானுடவியல் ஆராய்கின்றது. இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் மனிதனில் காலப்போக்கில் ஏற்படக்கூடிய உடல், மனம்,  வாழ்க்கைமுறை மாற்றம் பற்றி படித்தறிய உதவுவதால் மிகவும் இன்றியமையாத துறையாக உலகம் முழுவதும் இத்துறை கருதப்படுகிறது.

மானுடவியல் துறை சார்ந்த பிரிவுகள்/ படிப்புகள்

Social Anthropology  சமூக மானுடவியல்
Biological Anthropology  உயிரி மானுடவியல்
Cultural Anthropology  பண்பாட்டு மானுடவியல்
Archaeology  தொல்லியல்
Anthropologic Lingusitcs  மானுட மொழியியல்
Cognitive Science  அறிவுசார்ந்த அறிவியல்
Global Studies  உலகியல்
Sociology  சமூகவியல்
Socio Linguistics  சமூக மொழியியல்
Socio Movements  சமூக நடத்தைகள் இப்பிரிவுகளில் படிக்கலாம்

B.A., B.Sc., B.S., M.A.,  M.Sc., M.S., M.Phil., Ph.D.,D.Phil., Diploma இளங்கலையைப் பொறுத்தவரை மானுடவியலில் சிறப்புத்துறைகள் குறைவு. முதுகலையில் குறிப்பிட்ட சிறப்புப் பிரிவைத் தேர்வு செய்து படிக்கலாம்.

இந்தியாவில் சிறந்த மானுடவியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் சில...

பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி
பெங்களூர் பல்கலைக்கழகம், பெங்களூரு
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
ஆந்திர பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்
யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லி, புதுடெல்லி
சாவித்ரிபாய் பூலே புனே யுனிவர்சிட்டி, புனே
பஞ்சாப் யுனிவர்சிட்டி, சண்டிகர்
யுனிவர்சிட்டி ஆஃப் கல்கத்தா, கொல்கத்தா
கவுகாத்தி யுனிவர்சிட்டி, அசாம்
லக்னோ யுனிவர்சிட்டி, லக்னோ
யுனிவர்சிட்டி ஆஃப் மும்பை, மும்பை

உலக அளவில் சிறந்த மானுடவியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள்

யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா, அமெரிக்கா (www.universityofcalifornia.edu)
லண்டன் குளோபல் யுனிவர்சிட்டி, இங்கிலாந்து (www.ucl.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனா, அமெரிக்கா (www.arizona.edu)
ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.stanford.edu)
தி யுனிவர்சிட்டி ஆஃப் கன்சாஸ், அமெரிக்கா (www.ku.edu)
கார்னெல் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.cornell.edu)
கோல்ட்ஸ்மித்ஸ் யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன், இங்கிலாந்து (www.gold.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் ரெஜினா, கனடா (www.uregina.ca)
யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன், அமெரிக்கா (www.washington.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் கேம்ப்ரிட்ஜ், இங்கிலாந்து (www.cam.ac.uk)

மானுடவியல் துறையில் புகழ்பெற்ற இந்திய அறிஞர்கள்

பேராசிரியர் ஸ்மிர்தி ஸ்ரீநிவாஸ்
பேராசிரியர் கௌசிக் சுந்தர்ராஜன்
பேராசிரியர் எஸ்.சி.ராய்
பேராசிரியர் பஞ்சண்ணன் மித்ரா
பேராசிரியர் எல்.பி.வித்யார்த்தி
பேராசிரியர் எம்.என்.ஸ்ரீநிவாஸ்
பேராசிரியர் குமார் சுரேஷ் சிங்
பேராசிரியர் ஜே.என்.பட்டாச்சார்யா
பேராசிரியர் லீலா டூபே
பேராசிரியர் பி.எஸ்.குஹா

உலக அளவில் மானுடவியல் துறையில் புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர்...

பேராசிரியர் போவ்ஸ், பிரான்ஸ்
பேராசிரியர் ப்ரோனிஸ்லாவ் மாலினோவ்ஸ்கி, ரஷ்யா
பேராசிரியர் மார்கரெட் மீட், இங்கிலாந்து
பேராசிரியர் ஆடம் கே.கொல்லார், அமெரிக்கா
பேராசிரியர் க்ளிஃபோர்ட் கீர்ட்ஸ், ஜெர்மனி
பேராசிரியர் மார்செல் மாவ்ஸ், இங்கிலாந்து
பேராசிரியர் பெனெட்யூஸ், இத்தாலி
பேராசிரியர் ஃபார்மர், ஜெர்மனி
பேராசிரியர் ஃபோரோஃஸ்கி, இத்தாலி
பேராசிரியர் போன்னா ஹராவே, அமெரிக்கா

மானுடவியல் துறை மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆய்வுகளை ஊக்குவிக்கவும் செயல்படும் அமைப்புகள்/ குழுக்கள்

அமெரிக்கன் ஆந்த்ரபாலஜிக்கல் அசோசியேஷன், அமெரிக்கா
சொசைட்டி ஃபார் தி சோஷியல் ஸ்டடீஸ் ஆஃப் சயின்ஸ், அமெரிக்கா
யூரோப்பியன் அசோசியேஷன் ஆஃப் சோஷியல் ஆந்த்ரபாலஜிஸ்ட்ஸ், இங்கிலாந்து
அமெரிக்கன் எத்னாலஜிக்கல் சொசைட்டி, அமெரிக்கா
மாக்ஸ் ப்ளாங்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் எவல்யூஸ்னரி ஆந்த்ரபாலஜி, ஜெர்மனி
எத்னாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் லண்டன், இங்கிலாந்து
ஆந்த்ரபாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் லண்டன், இங்கிலாந்து
கனடியன் ஆந்த்ரபாலஜிக்கல் சொசைட்டி, கனடா
சொசைட்டி ஆஃப் மெடிக்கல் ஆந்த்ரபாலஜி, ஆஸ்திரேலியா

மானுடவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் / பதக்கங்கள் சில...


வெல்கம் மெடல் ஃபார் ஆந்த்ரபாலஜி, இங்கிலாந்து
சில்வர் மெடல் அவார்டு, கனடா
ட்டே ராங்கி ஹிரோவா மெடல், நியூசிலாந்து
தி லூசி மேயர் மெடல், அமெரிக்கா
தி மாண்ட்கோமெரி மெடல், இங்கிலாந்து
லோவென்ஸ்டீன் ஆந்த்ரபாலஜி ப்ரைஸ், கனடா
வைகிங் ஃபண்ட் மெடல், அமெரிக்கா
கிரிகோரி மெடல், அமெரிக்கா
எட்ஜ்வார்த் டேவிட் மெடல், ஆஸ்திரேலியா
தி டெண்ட் மெடல், இங்கிலாந்து

மானுடவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் சில...

மினிஸ்ட்ரி ஆஃப் கல்ச்சர், இந்திய அரசு
ஆந்த்ரபாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா, புதுடெல்லி
மானுடவியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள்
மானுடவியல் துறையைக் கொண்ட ஆய்வு நிறுவனங்கள்
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், புதுடெல்லி
மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள்
மினிஸ்ட்ரி ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, இந்திய அரசு
ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா, டேராடூன்

இந்தியாவைப் பற்றி ஆய்வு செய்யும் உலகிலுள்ள பல்கலைக்கழகங்கள்

ஆசிரியர் மற்றும் ஆய்வு நிறுவனங்கள்
மானுடவியல் சார்ந்த தொண்டு நிறுவனங்கள்

அடுத்த இதழில்  அரசியல் அறிவியல் (Political science)
தொகுப்பு: வெ.நீலகண்டன்