புத்த கயா





கயா பீகார் மாநிலத்தின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள பழம் பெரும் நகரம். கங்கை நதியின் உபநதியான பால்கு நதியின் கரையில் அமைந்துள்ளது. மகதப்  பேரரசின் தலைநகரமாக விளங்கியது கயா. புத்தர் ஞானம் பெற்ற இடனமான புத்த கயா கயாவிற்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே உள்ள பிரதஷிலா மலைக்கும் தெற்கே உள்ள புத்த கயாவிற்கும் இடையில் ஏறத்தாழ 45க்கும் மேற்பட்ட புனிதத் தலங்கள் உள்ளன. மகத பல்கலைக்கழகமும் கல்லூரிகள் பலவும் இங்குள்ளன.
- க.ரவீந்திரன்