தற்கொலைய தடுக்கலாம்!



ஆராய்ச்சி

தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் உள்ளவர்களை எளிய ரத்தப் பரிசோதனை ஒன்றை செய்வதன் மூலம் முன்னரே அனுமானித்து தடுத்துவிடலாம் என்று அறிவித்து இருக்கிறது அமெரிக்க மனநல ஆய்விதழ்.

இறப்புக்குப் பிறகு சாதாரண மக்களின் மூளையையும் மன நலம் குன்றியவர்களின் மூளையையும் ஒப்பிட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்த போது SKA2  ஜீன்களின் அளவு குறைந்து காணப்பட்டவர்கள் தற்கொலை முடிவையே எடுத்தது கண்டறியப்பட்டிருக்கிறது.SKA2 மூளையில் உள்ள ப்ரீஃபிராண்டல் கார்டெக்ஸின் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது.

எதிர்மறை எண்ணங்கள் வராமல் தடுக்கவும் மனக்கிளர்ச்சியால் எடுக்கும் முடிவு களை கட்டுப்படுத்தவும் செய்வது இந்த ஜீன்களின் முக்கிய வேலைகளாகும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோனை மூளை அதிகம் சுரக்காமல் ஷிரிகி2 ஜீன்கள் தடுக்கின்றனவாம். இதன் மூலம் மன அழுத்தம் வராமலும் தற்கொலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் எழாமலும் இருக்க முடியுமாம்.

ஷிரிகி2 ஜீன்கள் குறைவாக இருப்பவர்களுக்கு   எந்த தடையும் இன்றி கெட்ட ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக சுரந்து, மன அழுத்தத்தை அதிகமாக்கி, தற்கொலைக்கு தூண்டுகிறதாம். தற்கொலையால் இறந்து போனவர்கள் சிலரை ஆய்வு செய்ததில் கார்டிசோல் ஹார்மோனின் சுரப்பு அளவற்று இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.மரபணுக்களில் மித்தைல் வேதிப்பொருட்களின் தாக்கம் அதிகம் இருந்தாலும் SKA2 ஜீன்களின் தன்மையை குறைத்து, தற்கொலை எண்ணத்தை தூண்டிவிடுகிறதாம்.

 ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் 325 நபர்களுக்கு SKA2 ஜீன்களையும் மரபணுக் களையும் மையமாக வைத்து  ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்த போது, 80 முதல் 96 சதவிகிதம் நபர்களுக்கு ‘தற்கொலை எண்ணம் இருக்கிறதா, இல்லையா’ என்பதை துல்லியமாக கணிக்க முடிந்தது.  எதிர்காலத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்தவர்களையும் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவர்களையும் கூட எளிதாக தரம் பிரிக்க முடிந்தது.

‘இந்தச் சோதனையை பயன்படுத்தி தற்கொலை செய்ய முயல்பவர்களை முன்னரே கண்டறிந்து முறையான மனநல ஆலோசனை களை வழங்கி நல்வழிக்கு கொண்டுவரலாம். தற்கொலை என்ற சமூகப் பிரச்னைக்கும்  முற்றுப்புள்ளி வைக்கலாம்’ என்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.SKA2 ஜீன்கள் குறைவாக இருப்பவர்களுக்கு எந்தத் தடையும் இன்றி கெட்ட ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக சுரந்து, மன அழுத்தத்தை அதிகமாக்கி, தற்கொலைக்கு தூண்டுகிறதாம்.