பருமன் மருந்துகள்



சராசரி மனித வாழ்க்கை என்பது (Life Span) 80 ஆண்டுகள். ஆனால், இது நேர்க்கோடு போல 0   80 எனச் செல்வதில்லை. 40 வரை ஏறுமுகமும் 40க்குப் பிறகு இறங்கு முகமாகவும் இருக்கும். ஒவ்வொரு 10 ஆண்டுகால வாழ்க்கையும் பல உடல் மாற்றங்களை உள்ளடக்கியது.

40 ஆண்டுகள் வரை வளர்ச்சியின் உச்சமாகச் செல்வது, பிறகு தேய்மானமாக 80 நோக்கி இறங்குகிறது. 80க்குப் பிறகு வாழும் வாழ்க்கை போனஸ் வாழ்க்கை. இதில் 40 வயது வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளும் தாய்ப்பாலின் சக்தியைப் பொறுத்து அந்தந்த வயதுக்கு ஏற்ப, வளர்ச்சிக்கு ஏற்ற, உடல் உயரத்துக்கு ஏற்ற உணவு, சத்துகள், உடற்பயிற்சி, சுகாதாரமான சூழ்நிலை, பாரம்பரியம் என்பதைப் பொறுத்தே இது அமைகிறது.

பெரும்பாலானவர்களுக்கு எந்த ஒரு பெரிய உடல் நல பிரச்னையும் இன்றி உடல், மன வளத்தின் உச்சகட்டமான 40 வயதைத் தொட்டுவிட முடியும். அதற்குப் பிறகான வாழ்க்கை, விமானத்திலிருந்து குதிப்பதற்குச் சமமானது. பாராசூட்டுடன் குதிப்பது என்பது அந்த உயரத்திலிருந்து விழுவதை எப்படி ஒரு சுக அனுபவமாகவும் பாதுகாப்பான தாகவும் மாற்றுகிறதோ அவ்வளவு எளிதானது.

40 வயதுக்குப் பிறகு எப்படி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது பற்றி அறிவதே முதல்படி. ‘எனக்கு எதுவும் வராது’ என நினைப்பது, உடல் தரும் சிறுசிறு சிக்கல்களை உணராமல் இருப்பது, மருத்துவரை அணுகாமல் இருப்பது, தேவையான உடல் பரிசோதனை செய்து கொள்ளாமல் இருப்பது போன்றவைதான் குழப்பத்தின் ஆரம்பம்.

பெரிய இதய நோய் சிகிச்சை நிபுணராக இருந்தாலும், ‘காலையில் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்’ என்பது போன்ற செய்திகள் நமக்கும் பாடமாகும். 20 முதல் 40 வயது வரை நாம் எப்படி... என்ன சாப்பிடுகிறோம்?

உடற்பயிற்சியுடன் மன உளைச்சல் இல்லாத வாழ்க்கை வாழ்கிறோமா? இதுவே அந்த 40 வருட வாழ்க்கைக்கான அடித்தளம். 40 வயதுக்கு மேல் வருகின்ற நோய்கள் இப்போதெல்லாம் அதிக பணம் ஈட்டும் ஐ.டி. இளைஞர்களுக்கு 30 வயதுக்குள்ளாகவே மனஉளைச்சலுடனும் வேலைப்பளுவுடனும் வந்து சேர்கின்றன.

அதிக கொழுப்பு, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகள் பற்றிக் கொள்கின்றன. மருந்து, மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மன உளைச்சல் இல்லாத வாழ்க்கையானது மருத்துவரின் ஆலோசனையை மீறும் பட்சத்தில் மாரடைப்பாகவோ, பக்கவாதமாகவோ மாறிவிடக்கூடும்.

40 வயதுக்கு மேல் ஆரம்பிக்கிறது ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’. உடலில் கொழுப்பு அதிகமாகி, ரத்தத்திலிருக்கும் நல்ல கொழுப்புகளை குறைத்து, கெட்ட கொழுப்பு வகைகளைக் கூட்டி, ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படலங்களாக (Atherosclerotic plaques) படரச் செய்கிறது. அதனால் ரத்தக்குழாய் சுவர்களில் ஏற்படும் மாற்றத்தால் ரத்தக்கொதிப்பு நோய் உருவாகி, அதை படலங்கள் அடைக்குமானால் மாரடைப்பு, மூளையில் வாதம் போன்றவை ஏற்படும். இதற்கான ஆரம்ப அறிகுறியே மெட்டபாலிக் சிண்ட்ரோம். எடை (BMI), ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, கொழுப்பு என பரிசோதனைகளை செய்து, அம் முடிவுகளை பாதுகாப்பான எல்லைக்குள் லட்சியமாக்கு(நிஷீணீறீ)பவர்களுக்கு நோய் வருவதைத் தள்ளிப் போடலாம்.

G  Glucose ­­­.....(70 110140)
O  Obesity  BMI<26<29
A  Anti Hypertensive efforts Bp<140/90
L  Lipid profile
HDL>40
LDL<100
Trid<150

  பருமன் என உடலில் கூடும் கொழுப்பின் அளவையே கூறுகிறோம். பருமனை அளவிட Bro Cas Index முறை ஒரு எளிதான கணக்கு. இது பெரியவர்களுக்கு மட்டுமே. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. BMI அளவீடுகளும் அதன் வரையறைகளும் உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்டவை அதன் அட்டவணை,

18-25.9 - ஆரோக்கியமான எடை
25-29.9 - அதிகப்படியான எடை
30-34.9 - உடல்
பருமன் கிளாஸ் - 1
35-39.9 - உடல்
பருமன் கிளாஸ் - 2
40 (அல்லது) அதற்கும் மேல்-உடல் பருமன் கிளாஸ் - 3 (அல்லது) தீவிரமான பருமன்.4 உங்களது பிஎம்ஐ அளவீடு சரிதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் சோதனை செய்து கொள்ளுங்கள்.

*ஒரே மாதத்தில் அதிகப்படியான எடையைக் குறைப்பது என்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். நடைமுறை சாத்தியம் கொண்டதாக பார்த்துக் கொள்ளுங்கள். எந்த உணவைக் குறைக்க வேண்டும்? எதைக் கைவிட வேண்டும்? உணவிலுள்ள சத்துப் பொருட்கள் என்னென்ன? நமக்கு எவ்வளவு சக்தி தேவை? சமச்சீர் உணவு என்ன? எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும்.

*நடைப்பயிற்சி, நீச்சல், ஜாக்கிங், ஷட்டில் போன்றவை எடையைக் குறைக்க பெரிதும் உதவும். எப்போதும் பயிற்சிக ளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும்.

*மனிதனின் இரைப்பை ஒரு எலாஸ்டிக் பலூன் போன் றது. இரைப்பை ஏற்கனவே விரிந்த அளவுக்கோ, அதை விட அதிகமாகவோ விரியும் போதே அந்த நிலையை அடைந்தால்தான் சாப்பிட்ட ஒரு திருப்தி நமக்கு ஏற்படும். அதனால் உணவைக் குறைக்கும் அளவுக்கு பதிலாக காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகாயை வேக வைத்தும், பச்சையாகவும் எடுத்துக் கொள்ளலாம். பழம் அவசியம் என்றாலும், குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீராலும் இரைப்பையை நிரப்ப முடியும்.

*பருமனை தடுத்தாலே 40 வயதுக்கு மேல் வரும் அனைத்து உபாதைகளிலிருந்தும் விடுபடலாம். உணவை மென்று சுவைப்பதன் மூலம் மூளை, உணவு உண்பதை நன்றாக அறிய வைக்க முடியும். உணவில் அரிசி பதார்த்தங்களாக மாவுச் சத்தைக் குறைப்பதன் மூலம் பருமனைக் கட்டுக்குள் வைக்க முடியும். கண்டிப்பான உடற்பயிற்சி - ஒரு கிலோமீட்டருக்கு 11 நிமிடம் என தினசரி 45 நிமிட நடைப்பயிற்சி எல்லா நோய்களையும் விரட்டி விடும்.

எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்குக் கூட வருடாவருடம் 600 கிராம் முதல் 1கி.கி. வரை எடை கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பருமன் கூடும்போது கொழுப்பு உடலின் எல்லாப் பகுதிகளிலும் பெருகுவது போல ரத்தக்குழாய்களில் பெருகி படரும் போதுதான் ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவை மட்டுமல்ல... எடை தாங்க முடியாமல் மூட்டுவலி, முட்டித் தேய்மானம், இடுப்பு வலி போன்றவையும் ஏற்படுகின்றன.

*வலிநிவாரணி மாத்திரையால் வலி குணமாவது போல, எடை குறைக்கும் மாத்திரைகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. சில மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் டயட் மற்றும் உடற்பயிற்சியுடன்தான் பலன் அளிக்கின்றன. ஆகவே, மருந்துகள், பொடிகள், தேன் என எதுவும் பருமனைக் குறைக்க வேலை செய்யாது.

*கடுமையான பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (BMI>40) அறுவை சிகிச்சையே தீர்வாகிறது. லேப்ராஸ்கோபிக் கேஸ்ட்ரிக் பைபாஸ், லேப்ராஸ்கோபிக் கேஸ்ட்ரிக் பேன்டிங் ஆகிய இரு சிகிச்சை முறைகள் இப்போது பின்பற்றப்படுகின்றன.

*இப்பிரச்னை வராமல் தடுக்க 30 வயதிலிருந்தே வாழ்க்கை நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து, உணவையே மருந்தாக முயற்சிக்கலாம். எப்படி ஆண் வழுக்கைக்கு மருந்துகள் இல்லையோ, உடல் பருமனைக் குறைக்கவும் மருந்துகள் இல்லை. பருமனை தடுத்தாலே 40 வயதுக்கு மேல் வரும் அனைத்து உபாதைகளிலிருந்தும் விடுபடலாம். ஒல்லிபெல்லி ஆக மருந்தே கிடையாது!

பருமனைக் குறைக்க உதவுவதாக சொல்லப்பட்ட Sibutramine மற்றும் Lorcaserin  இரண்டு மருந்துகளும் வாபஸ் பெறப்பட்டன. இவற்றில் Lorcaserinல் தலைவலி, களைப்பு, வாந்தி உள்ளிட்ட பக்க விளைவுகளுடன், மனநலப் பிரச்னை களும், இதயக் கோளாறுகளும் ஏற்படுவதாக தெரிந்ததால் வாபஸ் பெறப்பட்டது. பருமனை குறைப்பதில் எஃப்.டி.ஏ மற்றும் இ.எம்.ஏவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருந்து Orlistat மட்டுமே.

இது கொழுப்பு கிரகிக்கப்படுவதைக் குறைக்க உதவுகிறது. இதை எடுத்துக் கொள்வதால் மட்டுமே ஒட்டுமொத்த பருமனையும் உதறித் தள்ளி விட்டு, ஒல்லிபெல்லியாகி விட முடியாது. கடுமையான உடற்பயிற்சி, கூடவே உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றுடன் இந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளும் போது 3 சதவிகித எடைக் குறைப்புக்கு மட்டுமே இது உதவும். 100 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு 3 சதவிகித எடைக் குறைப்பு என்றால் வருடத்துக்கு வெறும் 3 கிலோ மட்டுமே குறைய முடியும்!