லைஃப்



* உலக மக்களில் 80 சதவிகிதத்தினர் தினம் 10 டாலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ்கிறார்கள்.
* வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் சராசரியாக வாழ்நாளில் 5 மாதங்களை போன் பேசியே கழிக்கிறார்கள்.
* எப்போதாவது நிகழும் பெரிய சாதனைகளை விடவும், அடிக்கடி செய்யப்படும் சிறிய செயல்பாடுகளே மனித மனத்துக்கு அதிக திருப்தியை அளிக்கிறது.

* ஒரே இடத்தில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக அமர்ந்திருப்பது, மனித ஆயுளில் 2 ஆண்டுகளைக் கழிக்கிறது.
* பொதுவாக ஆண்களை விட பெண்களே அதிக காலம் வாழ்கிறார்கள். அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலம் மெதுவாகவே மூப்பு அடைவதும் இதற்கு ஒரு காரணம்.
* சராசரியாக ஆண் வாழ்வில் 6 மாத காலம் சவரம் செய்து கொள்வதிலேயே கழிந்து போகிறது.
* ரெகுலராக ஜாகிங் செல்பவர்களுக்கு ஆயுட்காலம் 6 ஆண்டு காலம் வரை அதிகரிக்கிறது.
* அமெரிக்கர்களுக்கு வாழ்நாளில் கேன்சர் ஏற்படும் அபாயத்தின் அளவு 50 சதவிகிதம்.
* 7 மணி நேரங்களுக்குக் குறைவாக உறங்குபவர்களுக்கும் ஆயுட்காலம் குறைகிறது.
* மாதவிடாய் நாட்களை மொத்தமாகக் கணக்கிட்டால் ஒவ்வொரு பெண்ணுக்கும் 4 ஆண்டுகள்.

- சூர்யா