அறிவை வளர்க்கும் ஐன்ஸ்டீன்




பொது அறிவுப் பெட்டகத்தின் திடீர் விலையேற்றத்தைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். முத்தாரத்திற்கு ரூ. 5 மட்டுமல்ல, அதைவிட கூடுதல் விலையைக்கூட தரத் தயாராக இருக்கிறோம்! பல அரிய தகவல்களைக் கொடுத்து எங்களை ‘அறிவுக் கடலில்’ நீந்த வைக்கும் முத்தாரத்தின் பணி மகத்தானது. 

- ஆர்.ராஜதுரை, சீர்காழி.

‘காண்டாமிருகம்’ பற்றிய தகவல்களும் படமும் சூப்பர். வாரா வாரம் ஒரு மிருகத்தை அறிமுகப்படுத்தி சுவாரஸ்ய தகவல்களைத் தரும் முத்தாரத்திற்கு தேங்க் யூ!

- டி.கே.சாந்தி குமார், சேலம்.

எறும்புகளின் தலையில் இருக்கும் உணர் கொம்புகள், எறும்புகளுக்கு இயற்கை கொடுத்த ‘ராடார் டெக்னாலஜி’ என்பது போன்ற தகவல்களோடு ‘பூச்சிப் பூக்கள்’ தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது. 

- எஸ்.சங்கரி, தேனி.

கேள்வி கேட்க கேட்கத்தான் குழந்தைகளின் அறிவு வளரும் என்பார்கள்! அப்படி கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலையும் அளித்து, அறிவை இன்னும் வளர்த்து விடுகிறது ஐன்ஸ்டீன் பதில்கள் பகுதி.

- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.