பாலைவனக் கீரி



கீரி இனத்தைச் சேர்ந்த சிறிய பாலூட்டி விலங்கான பாலைவனக் கீரி ஆங்கிலத்தில்   Meerkat   அல்லது   Suricate   என்று அழைக்கப்படுகிறது.

* ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் உள்ள கலகரி (Kalahari) பாலைவனம், நமீபியாவின் நமிப் பாலைவனம், தென்மேற்கு அங்கோலா மற்றும் தென் ஆப்ரிக்காவில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன.

* கூட்டமாக வாழும் இயல்புடைய பாலைவனக் கீரிகள் 20 முதல் 50 எண்ணிக்கை வரையிலோ அல்லது அதற்கு அதிகமாகவோ சேர்ந்து வாழும்.

* ஆண் கீரிகள் 730 கிராம் எடையும் பெண் 720 கிராம் எடையும் கொண்டனவாக இருக்கும். உடல் 25-35 செ.மீ. நீளம் வரையிலும் வால் 17-25 செ.மீ வரையிலும் இருக்கும். இது தனது இரண்டு கால்களையும் பயன்படுத்தி நிமிர்ந்து நிற்கும்போது சமநிலையில் இருக்க வால் பெரிதும் பயன்படுகிறது. வலுவாக இருக்கும் 4 விரல்கள், 2 செ.மீ நீளத்தில் தோண்டி இரையைத் தேடிச் சாப்பிட உதவும் வகையில் அமைந்துள்ளன. வளைந்த நகங்கள் மரம் ஏறவும் உதவுகின்றன.

* பல்லி, பாம்பு, சிலந்தி, தேள், முட்டை, சிறிய பாலூட்டிகள் மற்றும் சிறிய பறவைகளை இவை உணவாக உட்கொள்கின்றன. ஒரு குழுவிற்கு ஒரு பாதுகாவலரை (பெண் கீரி) வைத்து விட்டு மற்றவை இரை தேடச் செல்கின்றன.

* ஏதேனும் ஆபத்து என்றால் கால்களை உயரத் தூக்கி அசைத்தும் விசில் ஒலி எழுப்பியும் இவை கூட்டத்தை எச்சரிக்கும். ஒவ்வொரு ஆபத்திற்கும் ஒவ்வொரு விதமாக சமிக்ஞை செய்து தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு தங்கள் கூட்டத்தாரைப் பாதுகாக்கும் இயல்புடையவை இவை.

* அனிமலியா (Animalia) இனத்தினுள் ஹெர்பெஸ்டிடே (Herpestidae) குடும்பத்தைச் சேர்ந்த பாலைவனக் கீரிகள் 12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. குட்டிகள் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே தேவையான இரையைத் தானே தேடிக் கொள்ளும்.

* இள மஞ்சள், பழுப்பு மற்றும் பிரவுன் நிறங்களில் காணப்படும் பாலைவனக் கீரிகளின் காதுகள் பூனையைப் போன்றும், மூக்கு கூர்மையாகவும் இருக்கும். மிகத் துல்லியமாகக் கேட்கும் செவித்திறனை இவை பெற்றுள்ளன.

- பா.கபிலன், சிதம்பரம்.