கடிகார க்ளீனிங்!



லண்டனில் இருக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்ற கட்டிடத்தோடு இணைந்திருக்கும், புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும். மேலிருந்து கயிறு கட்டிக்கொண்டு இறங்கி நான்குபுற கடிகாரங்களையும் துடைக்கும் நிபுணர்கள், கையோடு அந்தக் கடிகாரங்களை புகைப்படமும் எடுப்பார்கள். தொழில்நுட்பக் கோளாறுகளை ஆராய இந்தப் படங்கள் உதவுமாம்!