படுகொலையான அரசரின் குடும்பம்!



மர்மங்களின் மறுபக்கம் 49

உள்ளூர் போல்ஸ்விக் இயக்கத்தினர் இரண்டடுக்கு மாடிவீட்டின் உரிமையாளரை அணுகி மன்னரின் குடும்பத்திற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து தருமாறு வேண்டு கோள் விடுத்தனர். ‘மிகவும் முக்கிய நபர்கள் வசிக்கும் வீடு’ என்று மக்களால் அந்த வீடு கருதப்பட்டது.

அந்த வீட்டின் நிலவறையில் அமைக்கப்பட்டிருந்த பெரிய அறை கிச்சனாகவும், ஸ்டோர்ரூமாகவும் பயன்பட்டது. மேல் பகுதியில் ஐந்து பெரிய அறைகள் மன்னரின் குடும்பம் தவிர்த்து டாக்டருக்கும், சில வேலைக்காரர்களுக்கும் ஒதுக்கப்பட்டன. அவ்வீட்டிற்கு பாதுகாப்பாக ஆட்களை நியமித்ததே உள்ளூர் போல்ஸ்விக் கட்சிதான்.

அடிக்கடி மன்னரின் மகன் அலெக்ஸுக்கு உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டது. டாக்டரி ன்   ஆலோசனைப்படி  மன்னர் அவனை தோட்டத்துப்பக்கம்  அழைத்துப் போய் உலாவப் பழக்கினார். மன்னரின் எளிமை வேலைக்காரர்களுக்கு மிகவும்  பிடித்துப் போனாலும் ராணியின் பந்தா நடவடிக்கைகள் பலரையும் அவரை வெறுக்க வைத்தது.

அனைத்து  பணியாளர்களுக்கும் பாஸ் அலெக்ஸாண்டர் அவிவேவ். சில மாதங்களுக்குப் பிறகு, அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்டு, யூரோவ்ஸ்கி என்பவர் இப்பதவிக்கு  வந்தார். ஆனால் அடிக்கடி மாஸ்கோவிலிருந்து  மன்னரும் அவரது குடும்பமும்  பாதுகாப்பாக  இருக்கிறதா, அவனை யாராவது எதிரிகள் வந்து பார்க்கிறார்களா என்று தகவல்  கேட்டுக்  கொண்டே இருந்தனர்.

1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-17 தேதிகளின் இரவில் மன்னர் குடும்பத்தை யூரோவ்ஸ்கி நள்ளிரவில்  எழுப்பி,  ஆடை அணியவைத்து கீழ்த்தள நிலவறைக்கு அழைத்துச் சென்று ஒரு  அறையில் பத்திரமாக வைத்தார். அப்போது தெருவில் எதிரிப் படைகள் தாக்கத் தொடங்கிவிட்டன  என்று மன்னர் குடும்பத்திடம்  யூரோவ்ஸ்கி கூறி பெரிய டிரக்கை வீட்டிற்கே வர வழைத்தார். மன்னரும், அவரது ராணியும், நோய்வாய்ப்
பட்டிருந்த  மகனும்  அமர மட்டுமே நாற்காலிகள்.

டிரக்கில் அரச குடும்பத்தை   ஏற்றிக்கொண்டு சென்ற தளபதி  யூரோவ்ஸ்கிக்கு  அடுத்து என்ன செய்ய  வேண்டும் என்பது மனதில் சினிமா போல விரிந்தது. டிரக் சிறிது  தூரம் சென்றவுடன் நிதானமாக  துப்பாக்கியை எடுத்து மன்னர் நிகோலஸை குறிவைத்து ரசித்து சுட்டார்.வண்டியில் பயணித்த அரச குடும்பத்தாரும், பணியாளர்களும் தளபதியின் பிளான்படி வரிசையாக பிணமானார்கள்.

புறநகரிலிருந்த கனிமச் சுரங்கத்தில் இறந்தவர்களின் பிணங்கள் வெட்டி எரிக்கப்பட்டன. ஜூலை மாதம் 17ஆம் தேதி மாஸ்கோ தலைமையகத்திற்கு அரச குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டது. லெனினின் ெநருங்கிய  அதிகாரி  செவர்டிலேதான்  இச்செய்தியை முதலில் அறிந்தவர்.  

எக்டரின்பர்க் நகரை ஒரு வாரத்திற்குப் பின் கைப்பற்றிய எதிரிகள்தான் முதலில் மன்னர் படுகொலை பற்றிய விசாரணையைத் துவக்கினார்கள்.  முதலில்  இதை விசாரித்த  அதிகாரி, ஜூலை 16-17 இரவு மன்னர் கொல்லப்பட்டார் என்றும், அரசியும், அவரது மகனும், நான்கு பெண்களும் உயிரோடு விடப்பட்டார்கள் என்றும்  சொன்னார். 1919ஆம்  ஆண்டு  இன்னொரு விசாரணையைத்  தொடங்கினார்கள்..

நிக்கோலஸ் கோகோலப் என்னும் இந்த விசாரணை அதிகாரி, மன்னரின் மொத்த குடும்பமும் ஒரே நாளில் மறைந்திருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்;  இதை முழுமையாக  வெளி உலகத்திற்குத் தெரியப்படுத்தியே  ஆகவேண்டும் என்று நினைத்தார். நிக்கோலஸ் நிதானமாகவும், முறைப்படியும் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி