ஸ்டெம்செல் தெரபி சிகிச்சையில் மருத்துவர்கள் ஏமாற்றுகிறார்கள்!”



அண்மையில்  இந்திய மருத்துவ  ஆராய்ச்சி கழகம், ஸ்டெம்செல் தெரபிக்கான  விதிகளை திருத்தி  வெளியிட்டுள்ளது.  உடலின் எலும்பு  மஜ்ஜை, ரத்தம், தொப்புள்கொடி ஆகிய  இடங்களில்  கிடைக்கும் ஸ்டெம்செல், திசுக்கள், உறுப்புகள்  உருவாவதற்கான அடிப்படை.

லூக்கேமியா, லிப்போமா போன்ற புற்றுநோய்க்கு அளிக்கப்படும்  கீமோதெரபியில்  ரத்த செல்களும் அழிந்துவிடும். அப்போது ஸ்டெம்செல்களை பிறரிடம் தானம்பெற்றால் மட்டுமே உறுதியான செல்களை நாம் உருவாக்க முடியும். 2007 இல் வெளியிட்ட விதிகளை மாற்றி, 13 நிலைகளில் ஸ்டெம்செல்களை பயன்படுத்த  அரசு அனுமதி தந்துள்ளது.

புதிய விதிகளின் நோக்கம் என்ன?

ஆதாரமற்ற ஸ்டெம்செல் சிகிச்சைகளை வழங்கும் டாக்டர்களைத் தடுப்பதே விதிகளின்  நோக்கம். ஆட்டிசம் உள்ளிட்ட   பிறப்புக் குறைபாடுகளை குணப்படுத்தமுடியும் என்கிறார்கள். பிறப்புக்குறைபாடு என்றால் ஸ்டெம்செல்லும் பாதிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் பணத்தை ஏமாற்றி பிடுங்கும் இந்த ட்ரீட்மென்ட் வீண் முயற்சிதானே? மோசடி செயல்பாடுகளின் மேல் Drugs and Cosmetics Act, 1940, the Drugs & Magic Remedies (Objectionable Advertisements) Act, 1954 ஆகிய சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தொப்புள்கொடியில் ஸ்டெம்செல்களை  சேமிக்கும் செயல்பாடு நம்பிக்கைக்குரியதாக இல்லாதபோது, அதற்காக செலவு செய்யும் நோயாளியின் நிலை என்ன? அவர்களின் நலன் காக்கவே  விதிகள்  திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அரசின் கடுமை, ஸ்டெம்செல்களின் மீதான புதிய கண்டுபிடிப்புகளை தடுக்கவும் வாய்ப்புள்ளதே?

கண்டுபிடிப்புகளுக்கு  நாங்கள் எதிரியல்ல. ஐ சி எம் ஆர் ஆராய்ச்சியில் குறிப்பிட்ட கொள்கைகளை வலியுறுத்தி செயல்படுவதோடு,  உயிரியல்துறையும் ஆராய்ச்சி செயல் பாடுகளை  ஊக்குவிக்கிறது. ஸ்டெம்செல் சிகிச்சை என்ற பெயரில் பல லட்ச ரூபாய்களை மருத்துவர்கள் தீர்க்க முடியாத நோய்களை தீர்க்கிறேன் என்று சொல்லி வாங்குகிறார்கள். கடந்த ஆண்டு ஐசிஎம்ஆர் இவர்களை நிரூபிக்க அழைத்தபோது, மருத்துவர்களின் கூற்று ஆதாரமற்றது என்று நிரூபணமானது.

அரசு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டவிதிக்குட்பட்டும் இவர்கள் சோதனைகளைச் செய்வதில்லை. சிகிச்சை விதி களின் தேவையை இந்நிகழ்வுகளே உருவாக்கின. ஸ்டெம்செல் தெரபியின் பக்கவிளைவுகள் என்ன?

பக்கவிளைவுகள் குறித்து எங்களுக்கு தகவல்கள் தெரியவில்லை. மருத்துவ சோதனைகளின் மீது கிடுக்கிப்பிடி விதிகளை இயற்ற காரணமே   அதுதான்.  சோதனைகள் ஸ்டெம்செல்லின் செயல்பாட்டை மட்டுமல்ல, அதன் பக்கவிளைவுகளையும்  நமக்கு கூறிவிடும்.ஸ்டெம்செல் சோதனைகளுக்கான அனு மதியை வழங்குவது யார்?  மருத்துவமனை களில் என்னென்ன வசதிகள் இதற்கு தேவை?

CDSCO (Central Drug Standard Control Organisation)  அமைப்பில்  அனைத்து  ஸ்டெம்செல் ஆராய்ச்சி நிலையங்களும் கட்டாயம் பதிவு செய்திருக்கவேண்டும்.  இதில் ஸ்டெம்செல் வங்கிகளும் உள்ளடங்கும். மாதவிடாய் ரத்தம், பல் ஈறுகள், முதுகெலும்பு செல்கள் ஆகியவற்றை நிரூபணமற்ற சிகிச்சை மூலம் சேமிப்பது சட்டத்திற்கு புறம்பான செயல்.

நன்றி: Priyanka Vora, scroll.in