கனவு நகரம் நியோம்!




எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் எல்லைப்புறத்தில்  அமையவிருக்கும்  தொழில்நகரமான நியோம், 26,500 ச.கி.மீ, பரப்பில் உயிரியல், நீர், உணவு, பொழுதுபோக்கு ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டது.
 
நியோம் முழுக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்க விருக்கிறது.

சவுதி அரசு, உள்ளூர், வெளிநாட்டு முதலீடுகள் என அரை ட்ரில்லியன்  டாலர்களுக்கு  மேல் செலவு செய்து நியோம் நகரை கட்ட பிளான் செய்துள்ளது.
 
சீமன்ஸ் ஏஜி, அல்கோவா இன்க் ஆகிய இரு நிறுவனங்களின் முன்னாள் இயக்கு நரான கிளாஸ்  க்ளெய்ன்பீல்டு இத்திட்டத்தின் இயக்குநர்.
 
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை இணைக்கும்  மையமாக  நியோம் சிட்டி 2025 ஆம் ஆண்டுக்குள் செயல்படும்.