மனதின் ஆற்றல் என்ன செய்யும்?



எக்ஸ்மேன் படத்தில் ஜீன் கிரே, புஷ் படத்தில் நிக் கன்ட் என இரு கேரக்டர்களும் மனோஇயக்கவியல் சக்தியை பயன்படுத்தி கெத்து காட்டுவார்கள். 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியில்  மனதின்  ஆற்றலைப் பயன்படுத்தி பொருட்களைத் தூக்குவது, பறப்பது உள்ளிட்ட விஷயங்களை  செய்யமுடியும் என அறிவியல் முறையில்  நிரூபிக்கப்பட்டது.

1940 இல் ட்யூக் பல்கலைக் கழக பேராசிரியரான ஜே.பி. ரைன் என்று ஆராய்ச்சியாளர் இதுகுறித்து  ஆராய்ந்தார். தாயங்களை உருட்டுவது, பொருட்களை நகர்த்துவது  ஆகியவற்றை குறிப்பிட்டார். ஆனால் இந்த ஆராய்ச்சியில் பல்வேறு  தடுமாற்றங்கள் இருந்ததால் பிற ஆராய்ச்சியாளர்கள் இதனை புறக்கணித்துவிட்டனர்.

தன் மன இயக்க  ஆற்றலால் (ஸ்பூனை வளைப்பது, வாட்ச் கண்ணாடியை உடைப்பது) உலகெங்கும் சாதனைகளைச் செய்தவர், உரி கெல்லர்.  ரஸ்ஸல் டார்க் எழுதிய “The Reality of ESP” (2012, Quest Books) நூல் இது பற்றிய உண்மைகளை ஆதாரபூர்வமாக அலசுகிறது.