AI கார்!



அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த எலக்ட்ரானிக் கண்காட்சியில் டொயோட்டோவின் புதிய ஏஐ கார் அறிமுகமாகி பார்வையாளர்களை அசத்தியது. “எங்களது புதிய காரில் பயன் படுத்தியுள்ள ஏஐ தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசீகரமாக இருக்கும்” என உற்சாகமாகிறார் டொயோட்டோவின் பொதுமேலாளரான மகோட்டோ ஒகாபே.

தானியங்கி மற்றும் ஏஐ கார்கள் உருவாக்கத்திற்கு டொயோட்டோ 1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இது 2020 ஆம் ஆண்டுக்குள் உருவாக்கும் கார்களுக்கான பட்ஜெட். ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ செல்லும் கான்செப்ட் ஐ மாடல் காரில், ட்ரைவரின் முக பாவனைகளை உணர்ந்து  அலர்ட் செய்யும் வசதி உண்டு. ஃபோர்டு, செவர்லெட் உள்ளிட்ட கார் நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உதவியுடன் ஏஐ கோதாவில் குதித்துள்ளன.