சூப்பர் எலாஸ்டிக்!



விண்வெளி போன்ற இடங் களில் பயன்படுத்தும் தகுதியிலான  நினைவகப் பொருளை யுகான் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சியோக் வூ லீ தலைமையிலான குழு கண்டு பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய  நினைவகப் பொருட்களில்  காந்தம் மற்றும்  வெப்பத்தினால்  தகவல்கள் அழிக்கப்படும் அபாயமும்  இருந்தது.

அமெரிக்காவிலுள்ள பால் கான்ஃபீல்டு கால்சியம் அயர்ன் ஆர்சனைடு (CaFe2As2)  பற்றி  செய்துள்ள ஆராய்ச்சியை லீ  எடுத்துக்கொண்டார்.  கால்சியம் அயன் ஆர்சனைடு கடுமையான அழுத்தத்தையும், வெப்பநிலையையும் தாங்கும் பொருள். இதனுடைய  இயல்பு  வடிவத்தை  விட்டு  நீங்கும்போது, அதன் நெகிழ்வுத்தன்மை  கூடுவதை  கண்டுபிடித்தார் லீ.

பிற  உலோகங்கள் வடிவச் சிதைவு  0.5% எனில் கார்பன் அயன் ஆர்சனைடில் 13% மட்டுமே. வலிமையானதும் 50 கெல்வின் - -370 வெப்பநிலையிலும் தாக்குப் பிடிக்கும் பொருள் இது. “நாங்கள் 400 பொருட்களை இதுவரை சோதித்துள்ளோம். இது சூப்பர் எலாஸ்டிக்  பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சி  உலகை  திறந்துள்ளது” என ஆவலாகப் பேசுகிறார் லீ.