சோனியின் ஐபோ!



ஜப்பானிய எலக்ட்ரானிக் ஜாம்பவான் சோனி, பெட் ரோபோவை ரீபூட் செய்து விற்கத் தொடங்கியுள்ளது. ஐபோ என்ற இந்த ரோபோ நாயுடன் இணைய இணைப்பு மற்றும் ஏஐ வசதியும் உண்டு.வெள்ளை நிறத்தில் 30 செ.மீ  நீளத்தில்  தன்  உணர்வுகளை  வெளிக்காட்டும்  திறன்  கொண்ட ரோபோ காவலன் ஐபோ, கறுப்பு நிற காதுகளோடு, உற்சாகத்துள்ளல்  போடும்  வாலையும் கொண்டுள்ளது.

சென்சார், மைக் ஆகியவை இணைக்கப்பட்டுள்ள ஐபோவை ஸ்மார்ட்போன் வழியாக தூரத்திலிருந்தும் இயக்க முடியும். ஐபோ முதல்முறையாக 1999 ஆம் ஆண்டு ரிலீசானபோது, இருபதே நிமிடத்தில் 3 ஆயிரம் ரோபோக்களை ($2,200) மக்கள் வாங்கிச்சென்றனர். தற்போது விற்பனைக்கு வந்துள்ள ஐபோ ரோபோவின் விலை 1,750 டாலர்கள்.