மார்க்கெட்டுக்கு புதுசு!
Sony WF-SP700N
சோனி ஏழு ஹெட்போன்களை புதிதாக ரிலீஸ் செய்துள்ளது. கூகுள் அசிஸ்டெண்டுடன் ஒத்திசைவு கொண்டவை. ஜிம்மில் வொர்க் அவுட் செய்துகொண்டே பாடலை ரசிக்கலாம். வியர்வை பட்டாலும் இந்த ஹெட்போன்கள் பாதிப்படையாது. Rs. 17,056
Magic Leap One
2011 ஆம் ஆண்டு தொடங்கிய மேஜிக் லீப் நிறுவனத்தின் பெருமைமிக்க தயாரிப்பு இந்த விஆர் செட். மெய்நிகர் உலகத்தை கண்களுக்குள் சென்சார்கள், கேமராக்கள் மூலம் கட்டமைக்கும் கண்ணாடி இது.
Zanco tiny t1 mobile phone
2ஜியில் இயங்கும் 46.7 மி.மீ சைஸ் கொண்ட 13 கிராம் போன் இது. போன் செய்யவும், செய்தி அனுப்பும் லிமிடெட் வசதிகள் மட்டுமே கொண்ட மினி போன் கையாள கச்சிதமானது. Rs. 3,501
Milo Smart Home Speaker
டச் பட்டன்கள் மற்றும் உங்கள் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இது. கூகுள் டிவைஸ்களோடு ஒத்திசைவு கொண்ட இதனை ப்ளூடூத், வைஃபை ஆகிய வசதிகளோடு இயக்கி மகிழலாம். Rs.13,379
|