ஒலிம்பிக்ஸில் கோல்டு டிராகன்!



2018 ஆம் ஆண்டு தென்கொரியாவின் பியாங்சாங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி, விளையாட்டு வீரர் களின் திறமையை நிரூபிக்கும் களம்  என்பதோடு ரஷ்யா மற்றும் வடகொரியா நாட்டின் தகவல் திருட்டு தாக்குதல்களையும் சமாளிக்கும் ஸ்பாட்டாக மாறியுள்ளது.  “ஒலிம்பிக்ஸ், இன்று மிகப்பெரும் அரசியல் விளையாட்டாக மாறிவிட்டது. எனவே, இங்கு நிகழும் ஆவணங்கள் திருட்டு  என்பது  சாதாரணமான ஒன்று”  என்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் ரிட்.

ஆபரேஷன் கோல்டு டிராகன் என்ற பெயரில் நடந்துள்ள ஸ்பைவேர் தாக்குதலை மெக்அஃபி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன் பெயர்கள், GoldDragon, BravePrince,  GHOST419.  ஒலிம்பிக்  கணக்குக்கு வரும்  அனாமதேய  இமெயிலை கிளிக் செய்தும் கணினி உடனே தகவல் கொள்ளை யர்களின் ரிமோட் இயக்கத் திற்கு செல்லும்.

பின் தகவல்  திருட்டை  நீங்கள் நினைத்தாலும்   தடுக்க   முடியாது. மேலும்  1984  ஆம்  ஆண்டிலிருந்து ஊக்க உற்சாகத்துடன் செயல் படும் கிரெம்ளினை குவார்ட் டர்ஸாகக் கொண்டுள்ள ஃபேன் சிபியர் எனும் ரஷ்ய உளவு அமைப்பும் ஒலிம்பிக் உளவு வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.