காந்த ஒளி சைக்கிள்!



சைபீரியாவைச் சேர்ந்த டாக்டர் செமியோன் ஃபிலிமோவ்,  சைக்கிள் ஸ்போக்குகளில் எல்இடி விளக்குகளை பேட்டரி இன்றி அமைத்துள்ளார். சைக்கிள் ரிம்களிலுள்ள நியோடைமிய காந்தம் இதற்கான மின்சாரத்தை அளிக்கிறது.

லைட்டுகளுக்கும் காந்தத்திற்கும் இதில் நேரடியான இணைப்புகள் கிடையாது. சைக்கிள் ஓடுவதன் வழியாக லைட்டுகள் மின்சாரத்தை பெற்று ஒளிர்கின்றன.

வாட்டர்ப்ரூஃப் கொண்ட  இந்த லைட்டுகள் - 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் வேலை செய்யும்.  இரண்டு  சக்கரங்களிலும்  இரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆறு நிறங்களில் இவை கிடைக்கின்றன. விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் காந்த ஒளி சைக்கிள் இது.