புத்தக அறிமுகம்!




Option B
by Sheryl Sandberg,
Adam Grant,
Adam M. Grant
240 pages WH ALLEN

நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர் நூல் இது. தன் கணவர் இறந்தபின் ஏற்பட்ட வெறுமையை எப்படி கடந்து வந்தேன் என விவரிக்கிறார் செரில் சாண்ட்பெர்க். ஃபேஸ்புக்கின் திட்ட அதிகாரியான ஷெரில், கணவர் இறந்த துக்கத்தை தன் நண்பர் ஆடம் கிராண்ட்  கூறிய வழிமுறைகளின் மூலம் துடைத்தெறிந்து வாழத்தொடங்கியது  எப்படி என ஆப்ஷன் பி நூலில்  விவரித்து, துயரப்பட்ட உள்ளங்களுக்கு தன்னம்பிக்கை பூஸ்ட் ஏற்றுகிறார்.  கடும் துயரங்களை சமாளித்து வாழ்வை வாழ நம்பிக்கை தரும் நூல் இது.
 
LET US EAT HEALTHY!
With Bernard and His Mom
by Connie Du
50pp,CreateSpace

குழந்தைகள் நூலான இதில் கானி டூ, தன் மகன் பெர்னார்ட்டுக்கு தரும் உணவுவகைகளைப் பற்றி விவரிக்கிறார். தன் குழந்தைக்கான ஆரோக்கிய உணவு வகைகளை எப்படி டூ வடி வமைத்தார் என்பதை அழகிய படங்களுடன் கூறியுள்ள நூல் இது. குழந்தைப் பருவத்தை அழகாக்கும் ஆரோக்கிய உணவுக்கான பயணமே இந்நூல்.