பசுமை மியூசியம்!



சீனாவின் சுஹோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் விரைவில் பசுமை கொஞ்சி விளையாடப்போகிறது. ஷாங்காய் இயற்கை வரலாற்று அருங்காட்சி யகத்தை தொடர்ந்து இங்கேயும் அதே பசுமை முயற்சிகள் தொடரவிருக்கின்றன. அறுபதாயிரம் ச.அடியில் மலைத்தொடர் அருகே இந்த சுஹோ மியூசியம் அமையவிருக்கிறது.

இயற்கையான சூரிய ஒளியை பிரதிபலிக்கும் உலோக பளபளப்பில் மியூசியத்தின் உட்புறம் லாந்தர் விளக்கு போல மின்னும். பார்வையாளர்கள் நீர் நிறைந்த தடாகம் வழியாக மியூசியத்தின் உள்ளே வரமுடியும். கட்டுமானத்தின் மத்தியில் உலக உருண்டை வைக்கப்பட்டிருக்கும். கூரைகள் முழுக்க பசுமைத் தாவரங்கள் போர்த்தி யிருக்கும்படியான வடிவமைப்பில் மியூசியம் அமர்க்களமாக உருவாகவிருக்கிறது.