நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது!



காலையில் எழுந்ததும் வாசலில் சாணம் தெளித்து, பெருக்கி கோலம் போட்டதுண்டா? அந்த அனுபவம் எப்படி?அதிகாலைப் பொழுதில் மனதுக்கு மிக ரம்யமான பாடல்கள் தூரத்தில் எங்கோ ஒலிக்க, அம்மா பெரிய பெரிய வண்ணக்கோலங்கள் இட, நானும் என் பங்குக்கு குட்டியாக ஒரு கலர் ஸ்டார் போடுவது இன்னும் மனசில் பசுமையாக இருக்கு!
#அது ஓர் அழகிய கோலம்/காலம்

- ராணி சுஜா ரயில் பயணங்களும் நீங்களும்..?

வட இந்தியாவில் இருந்தப் போ, குழந்தைகளுடன் ரெண்டு மூணு நாள் பயணம் செய்து தமிழ்நாட்டில் தாய் வீட்டுக்கு வந்த ரயில் பயணங்கள் அனைத்தும் இனிமையானவையே. குழந்தைகள் கூட்டை விட்டுப் பறந்து சென்ற பின், தாய்-தந்தையும் உலகைத் துறந்த பின், ரயில் பயணங்கள் சுகாதாரமற்றவையாகவும் சுமையாகவும் மட்டுமே தெரிகின்றன.
#பயணம் அதே... காலம் மாறுகையில் என் கோணமும் மாறியது! - கண்ணாம்பாள் பழனியப்பன் ரொம்பவே போரடிக்கும் எதிராளியின் பேச்சை மாற்ற எளிய வழிகள்?
தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டு தவிப்பதைப் போல விடாமல் இருமுவது...

கடைசி வார்த்தையில் கொஞ்சம் நிற்கும் பொழுது அந்த வார்த்தையைக் கொண்டு பாடுவது...
எதுவும் சரிவரவில்லை என்றால் கபாலாபாதி ஆசனம் போட்டுவிட்டு அவர்களிடம் ‘யோகா நேரம்’ என்று சொல்லிடணும்!
#ஆப்புக்கே ஆப்பு அடிக்கும் அல்லிராணிகள் நாங்க!
- லாவண்யா ஆத்ரேயா
உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட், பாலிவுட்,
கோலிவுட் நட்சத்திரங்கள் யார்? ஏன்?

ஹாலிவுட்ல ஏஞ்சலினா ஜோலி - நடிப்புக்காகவும்
சமூகநலன் குறித்த அக்கறைக்காகவும்.
பாலிவுட்ல ஷாருக் கான் - நட்பாவும் தெரிவார்.... காமெடியிலயும் கலக்குவார்.
கோலிவுட்ல - நம்ம சூப்பர் ஸ்டார்தான். அவரோட எளிமையையும் ஸ்டைலையும் அடிச்சிக்க ஆளேது!
# இதெப்டி இருக்கு?
- சுபஸ்ரீ வெங்கட்ராமன்

வளர்ந்து வரும் ‘வாட்ஸ்அப்’ஐ வியந்தது உண்டா?
ஒரு நாள் அம்மாவிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, அவள் என்னோடு சரியாகப் பேசவில்லை. காரணம் கேட்டபோது, ‘உன் அப்பா என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கார்’ என்றாள். ‘ஆனா, சத்தத்தையே காணுமேம்மா’ன்னு சொன்னதுக்கு, ‘வாட்ஸ் அப்பில் சண்டை நடக்குதுடீ’
என்றாள்.
#அப்படியே ஷாக்காகிட்டேன் வாட்ஸ் அப்பின் வளர்ச்சி கண்டு!
- ராதா சுதா

ஒரு காரியத்துல இறங்கறதுக்கு முன்னாடி ரொம்ப யோசிக்கிற ரகமா? தடாலடியா இறங்கிடுற டைப்பா?
போதுமான அளவுக்கு யோசிப்பேன். ஏன்னா, நான் எடுக்குற முடிவுல ஏதோ ஒரு வகையில எல்லாரும் சம்பந்தப்பட்டிருப்பாங்க...
எடுக்கும் முடிவு எனக்கு மட்டுமில்லாம
எல்லாருக்கும் பயனளிக்கணும்.
#நாலையும் யோசிச்சு செஞ்சா வீட்டுக்கும் நல்லது... நாட்டுக்கும் நல்லது!
- நித்யா சங்கர்

வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும். வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்க தேர்வு எது? ஏன்?
நாளை என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது. அதனால வாழ்க்கை குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை.
#அதை அதை அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு பயணிக்கப் பழகிக்கிட்டா
எல்லாம் நலமே!
- அனு விஜய்

செல்போன் காலர் ஹிஸ்டரியை உடனே அழித்துவிடும் நபரா? அது பாட்டுக்குக் கிடக்கட்டும் என விட்டுவிடும் நபரா?
ஒடனேல்லாம் அழிக்கிறதில்லை. அப்படியே வச்சிருப்பேன். சில நேரம் ஒரு அவசரத்துக்கு காலர் ஹிஸ்டரியிலிருந்து சில எண்களை எடுத்துக்கிறது உண்டு. ஆனாலும், அழிக்கிறது சுற்றுச் சூழலுக்கு நல்லது. அப்புறம் கார்பன் இம்ப்ரின்ட் பத்தியெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்.
#அழிவு நல்லது... ஆக்கபூர்வமான
விஷயங்களை அது செய்யுமாயின்!
-  மங்கா கிரிதர்

அடிக்கடி அரட்டை அடிக்கும் அந்த தொலைபேசி தோழி யார்? இருவருக்கிடையேயும் அடிக்கடி ஓடும் டாப்பிக் எது?
‘தொலைபேசி தோழி’ன்னு சொல்றதவிட ‘தொல்லைபேசி தோழி’ன்னு சொன்னா இன்னும் பாந்தமா இருக்கும். அதுவும் அந்த தொல்லைபேசி தோழி உங்க அம்மாவா இருந்துட்டா இன்னும் கூட பாந்தமா இருக்கும்.

நாங்க என்ன புலி endangered species ஆனதப் பத்தியா பேசப் போறோம்? புளிக்குழம்புல கட்டாயம் புளி
போட்டேதான் ஆகணுமா மாதிரி யுனிவர்சல்
மேட்டர்ஸ்தான் பேசுவோம்!
#என் அம்மாதான் என் நீங்க... ஐ மீன் என் தோழின்னு சொல்ல வந்தேங்க!
- மைதிலி கண்ணன்

காபி வித் புக்
காபி வித் ஃபேஸ்புக்
காபி வித் தொலைக்காட்சி
ஏகாந்த காபி
இதில் எது உங்க தேர்வு? ஏன்?
ஏகாந்த காபிதான். ஏன்னா, அதுல மட்டும்தான் பங்குபோட ஆளில்லை!
#சொல்லப் போனா காபி என் Liquid wisdomமுங்க  !
- உமா ராம்

தொகுத்து அளித்த
அன்னபூரணி நாராயணன்
‘ஸ்நேஹாஸ்’ கைவினை நகை
நிறுவனம் நடத்துகிறார்.
படம்: வெல்ப்ரெட் கண்ணன்
(facebook.com/wpkphotography)