மகிழ்ச்சி என்பது யாதெனில்!



நாய்க்குட்டிகள்...
 கௌரி கிருஷ்ணமூர்த்தி
வீட்டு ஆண்கள், குளித்தபின் பயன்படுத்திய அந்த ஈர டவலைக் கட்டில் மேல்
போடாமல் இருந்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி ஒரு பெண்ணுக்கு இருக்க முடியுமா என்ன???
- நிர்மலா பழனி

கூட்டுக்குடும்பத்தில் வெளியே சென்ற அனைவரும் பத்திரமாக
வீடடைவதே தினந்தோறும் பெரிய மகிழ்ச்சிதான்!
- சுகுணா சத்யமூர்த்தி

என்னைப் பெற்றவள் என் மடியில் தலை வைத்துப் படுப்பது...
- வித்யா முரளி

பள்ளியிலிருந்து வீடு நுழையும் என் பேத்தி, ‘பாட்டி இன்னிக்கு என்ன சமையல்? வாசனை ஊரையே தூக்குதே!’ எனக் கேட்டுக்கொண்டே வருவது மகிழ்ச்சி. அதனை நான் என் சமையலுக்கான அங்கீகாரமாக நினைப்பது போனஸ் மகிழ்ச்சி!
- தேவகி மோகன்

அவசரத்துல கிளறின உப்புமாவே என்றாலும், உறவுகளோடு சேர்ந்து அரட்டையடித்துக் கொண்டு
சாப்பிடுவது!
- ரேவதி ரவிக்குமார்

நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்தில் நிகழும் விசேஷத்தில் உறவினர்களைச் சந்திப்பது!
- பரிமளா அஷோக்

அலுவலகம் சென்ற கணவன் வழக்கமாக வர வேண்டிய நேரத்தில்
வராததால், கடுப்பாகி உட்கார்ந்திருக்கும் போது கேட்கும் காலிங் பெல் சத்தம்!
- ரம்யா ரவிசங்கர்

டீன் ஏஜ் மகன்களுக்குச் சமமாக அவர்களோடு கலாய்த்துப் பேசிக் கொண்டிருப்பது!
- நிர்மலா அன்பழகன்

தொகுத்து அளித்த
நித்யா கந்தசாமி
பொறியாளரும் கூட.