நீ பொறுப்பு! நான் பொறுப்பு!



It takes two to tango

நமக்கு நல்லாத் தெரிஞ்சது tango (குளிர்பானம்) மட்டும்தானே? இதென்ன புதுசான்னு யோசிக்கிறவங்களுக்கு, இதோ ஒருசுவாரஸ்ய விளக்கம்! Tango என்பது இருவர்   சேர்ந்து ஆடக்கூடிய ஒருவகைநடனம். Titanic படத்துல பார்த்தோமே... கப்பலில் நடக்கும் விருந்தில் ஜோடி ஜோடியாக நளின நடனம் ஆடுவதை... அதுபோல ஒரு நடனம்தான் இந்த Tango. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்... ஆடும் இருவரும் ஒரே நேரத்தில் உடலையும் கால்களையும் ஒருங்கிணைப்புடன் அசைக்க வேண்டும். இல்லாட்டி பல்லு போயிடும்! இதில் தவறு நிகழ இருவரின் அஜாக்கிர தையே காரணமாகும்.

இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த மரபுச் சொற்றொடர் (idiom). ‘ஒரு தப்பு நடக்கும் போது ஒருத்தர் மேல் மட்டும் பழிசொல்ல முடியாது... சம்பந்தப்பட்ட இருவருமே அதற்குப் பொறுப்பு’ என்பதுதான் அது. புரியுற மாதிரி ஒரே வாக்கியத்துல சொல்லணும்னா - கூட்டுக் களவாணித்தனம் பண்ணாம ஒரு விஷயம் தப்பாகாது! அதான் It takes two to tango. இனிமேல் எங்கே தப்பு நடந்தாலும் tangoவை மனசுல நெனச்சுகிட்டு சரியாதீர்ப்பு சொல் லணும்... சரியா நாட்டாமை?

வாம்மா மின்னல்!

New York Minute

இது ஏதோ புதுசா கண்டுபிடிச்சிருக்கிற கால அளவுன்னு நெனச்சுக்காதீங்க. இந்தச் சொற்றொடர் வெறும் ஒரு உவமை (an analogy) மட்டுமே. நிமிடத்துக்கும் மிகக்குறைவான மணித்துளியைக் குறிக்கும் சார்புச் சொல்லே(a related word) இந்த New York Minute.நிற்கக்கூட நேரமில்லாமல் பரபரப்புடன் இயங்கும்நியூ யார்க் நகரத்தில் கண்ணுமூடி திறக்கிறதுக்குள்ள எல்லாமே மாறிடுமாம்.

போக்குவரத்து சமிக்ஞை பச்சையாக ஒளிர்ந்த மறு நிமிடமே நியூ யார்க் வாசிகள் அலுவலகத்துக்கோ, தொழில் செய்யும் இடத்துக்கோ சிட்டாகப் பறப்பராம். இப்படிப் பம்பரமாக இயங்கும் இந்த நகரத்தில்தான் ‘rush hour’ என்னும் வார்த்தையும் உருவானது.நியூ யார்க் - ‘வாம்மா மின்னல்’ நெறைய இருக்கிற ஊரு போல... நம்ம சென்னை மாதிரி! அதனாலதான் இந்த ஊரை உவமையா வெச்சு இந்த சொற்றொடர் உருவானதாம்!

நிற்கக்கூட நேரமில்லாமல் பரபரப்புடன் இயங்கும் நியூ யார்க் மாநகரத்தில் கண்ணுமூடி திறக்கிறதுக்குள்ள எல்லாமே மாறிடுமாம்!