தின் க்ரஸ்ட் பீட்சா



ராஜேஸ்வரி விஜயானந்த்
www.rakskitchen.net


பொதுவாக பீட்சா மாவை பிசைந்து வைத்து 2-3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். இந்த பீட்சாவையோ, அப்போதே பிசைந்து செய்து விடலாம். ரொம்ப ஈஸி!

என்னென்ன தேவை?

மைதா மாவு - 1 கப், ஆக்டிவ் டிரை ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன், தண்ணீர் - 1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன், உப்பு -  3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப, துருவிய மொசரெல்லா சீஸ் - 1/2 கப், பீட்சா சாஸ் / பாஸ்டா சாஸ் / தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 3/4 கப், இட்டாலியன் ஹெர்ப் சீசனிங் - 2 சிட்டிகை, சில்லி ஃப்ளேக்ஸ் - பரிமாற.

எப்படிச் செய்வது?

அவனை 230 டிகிரி செல்சியஸுக்கு ப்ரீ-ஹீட் செய்யவும். சீஸை எடுத்து வெளியில் வைக்கவும். ப்ரீ-ஹீட் ஆகும்போதே, நீங்கள் மாவை தயாரித்து விடலாம்.

1. வெதுவெதுப்பான நீரில், ஈஸ்ட் சேர்த்து, அது கரையும் வரை கலக்கவும். 2. தண்ணீர் சூடாக இருக்கக்கூடாது, ஈஸ்ட் ‘கட்டி’ பிடித்து விடும். வெதுவெதுப்பாக இருந்தால்தான் ஈஸ்ட் கரையும்.
3. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஈஸ்ட் கலவையை ஊற்றி, அதில் உப்பு சேர்த்து, மாவை கொட்டவும்.
4. அதை சப்பாத்தி மாவு பிசைவது போல நன்கு இளகிய மாவாக பிசைந்து கொள்ளவும்.
5. பிசுபிசுப்பாக இருப்பின் சிறிது மாவை தூவிப் பிசைந்து கொள்ளலாம். ஆனால், மாவு மிகவும் இளகியபடி மிருதுவாக இருக்க வேண்டும். 10 நிமிடம் பிசைந்து மூடி வைக்கவும்.
6-7. சப்பாத்தி இடும் கல்லில், பேக்கிங் ஷீட் / பட்டர் பேப்பரை சதுரமாக வெட்டி மேலே பரப்பவும். இதில் பிசைந்த மாவை வைத்து, மிகவும் மெல்லிய சப்பாத்தி போல திரட்டவும். கையாலோ, சப்பாத்தி இடும் குழவியாலோ
திரட்டலாம். பேப்பரில் இடுவதால், சுருங்காமல் மெல்லியதாக திரட்ட இயலும். குழவியில் ஒட்டினால், மேலே சிறிது மாவை தூவிக் கொள்ளலாம்.
8. சாஸை ஒரு சிறிய கரண்டியின் பின்புறம் கொண்டு சீராக தடவவும். தடவும்போது, ஓரத்தில் சிறிது இடம் விடவும்.
9. அதன் மேலே நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் குடை மிளகாய் தூவவும். அதன் மேலே துருவிய சீஸ் தூவவும்.
10. இதை, ஒரு பீட்சா பானில் இலகுவாக, பேப்பரை பிடித்து இழுத்து பானிற்கு மாற்றவும்.
11. 5 நிமிடம் அவனில் பேக் செய்யவும். பிறகு எடுத்து, பேப்பரில் இருந்து பீட்சாவை பானிற்கு மாற்றவும்.
12. பாதி வெந்திருப்பதால், எளிதில் மாற்றிவிடலாம்.
மறுபடியும் 5 - 8 நிமிடம் வரை அவனில் பேக் செய்யவும். சீஸ் இளஞ்சிவப்பாக மாறும் வரை பேக் செய்யவும்.
13.  ஷ்வீக்ஷீமீ க்ஷீணீநீளீல் ஆற வைக்கவும்.
14. பீட்சா கட்டர் வைத்து 6-8 துண்டுகள் இடவும். குறுக்கே வெட்டி சிறு சதுரங்களாகவும் பரிமாறலாம்.
15. மொறுமொறுப்பான தின் க்ரஸ்ட் பீட்சா தயார்!  இட்டாலியன் ஹெர்ப் சீசனிங், சில்லி ஃப்ளேக்ஸ் தூவி பரிமாறவும்.