அமெரிக்க படிப்பு... வாய்ப்புகள் ஏராளம்!



சென்ற இதழ் தொடர்ச்சி...

‘வெற்றி பெற்ற மனிதனாவதற்கு முயற்சி செய்யாதீர்கள். மதிப்பு மிக்க மனிதனாவதற்கு முயற்சி செய்யுங்கள்!’ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன வார்த்தைகள் இக்காலத்துக்கு மட்டுமல்ல... எக்காலத்துக்கும் பொருந்தும். அதற்காகத்தான் பலரும் மெனக்கிடுகிறார்கள். பணம் சம்பாதிப்பது, சிறந்த வேலையைப் பெறுவது, மேலே மேலே உயர்வது, எல்லாவற்றையும் தாண்டி சமூகத்தில் அந்தஸ்தோடு வாழ்வது இவையெல்லாமே பலரும் அமெரிக்காவில் படிக்க விரும்புவதற்கான ஆதார காரணங்கள். அதற்கான படிப்புகள் அங்கே ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன!

ஏரோநாட்டிக்ஸ், பொருளாதாரம், இதழியல், பொறியியல், வேதியியல், நர்ஸிங்... ஏன் இசையைக் கற்றுக் கொடுக்கக் கூட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இருக்கின்றன. ‘‘இந்தியாவுல இருந்து அமெரிக்காவுல போய் படிக்கிற மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கிறது சயின்ஸ், இன்ஜினியரிங், ஐ.டி. போன்ற துறைகளைத்தான்.

இப்போ எம்.பி.ஏ. படிக்கவும் அதிகமா போக ஆரம்பிச்சிருக்காங்க’’ என்கிறார் அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனத்தின் மண்டல அதிகாரி மாயா சுந்தர்ராஜன். இங்கே நாம் ‘பேச்சலர்ஸ் டிகிரி’ என்று சொல்லும் இளங்கலைப் படிப்பு, அமெரிக்காவில் ‘அண்டர் கிராஜுவேட்’ என்று அழைக்கப்படுகிறது. ‘‘வழக்கமா ‘மாஸ்டர்ஸ்’ எனப்படும் மேற்படிப்புக்கும், பி.ஹெச்டி. பண்ணவும்தான் நிறையபேர் அமெரிக்கா போவாங்க.

இப்போ அண்டர் கிராஜுவேட் கோர்ஸ் படிக்கவும் நிறைய பேர் ஆர்வமா வர்றாங்க. அமெரிக்காவுல இருக்குற ஒரு கல்லூரியிலயோ, பல்கலைக்கழகத்துலயோ படிக்கறதுக்கு வருஷத்துக்கு 20 லட்ச ரூபாயாவது செலவாகும். சில பல்கலைக்கழகங்கள்ல ஸ்காலர்ஷிப் தர்றாங்க.

அது மாணவர்களோட திறமை, அறிவு, அவங்க வாங்கியிருக்கும் மதிப்பெண் அடிப்படையில கிடைக்கும். ஆனா, அதுக்காக காத்திருக்காம ரெண்டு வருஷம் கம்யூனிட்டி காலேஜ்ல படிக்கலாம். அதுக்கடுத்த ரெண்டு வருஷம் அவங்களுக்குப் பிடிச்ச அண்டர் கிராஜுவேஷன் கோர்ஸுக்கு மாத்திக்கலாம். கம்யூனிட்டி காலேஜ்ல தொழில்நுட்பக் கல்வி படிக்கலாம்.

அக்ரிகல்ச்சர்லருந்து ஏரோநாட்டிக்ஸ் வரைக்கும் படிக்கலாம். கார்பென்டரி கூட கத்துக்கலாம். அங்கே படிக்கறதுக்கு வருஷத்துக்கு 7 லட்ச ரூபாய் செலவாகும். சாட் (ஷிகிஜி) எக்ஸாம் எழுத வேண்டிய அவசியமில்லை. TOEFL எழுதலாம்.

அது கட்டாயமில்லை. எழுதினா நல்லது. ஒரு மாணவர் ஆங்கிலத்துல ரொம்ப வீக்கா இருந்தா, அவங்களை அதுக்கேத்த மாதிரி ஆங்கிலம் கத்துக் கொடுக்குற வகுப்புல சேர்ப்பாங்க. அமெரிக்காவில் படிக்க நுழைவுத் தேர்வு எழுத பயப்படுறவங்க கம்யூனிட்டி காலேஜ்ல சேரலாம்’’ என்கிறார் மாயா. 

‘‘என் ஃப்ரெண்ட் 2 வருஷம் கம்யூனிட்டி   காலேஜ்ல   படிச்சிட்டு, அப்புறம் 2 வருஷம் கார்னல் யுனிவர்சிட்டியில படிச்சாங்க. ஒரு பல்கலைக்கழகத்துல சேர்ந்து படிக்க ஆகும் செலவுல பாதிதான் ஆனது’’ என்கிறார் அமெரிக்க துணைத் தூதரகத்தின் தகவல் அதிகாரி ஹீரா காம்போஜ். சரி... படித்துக் கொண்டே அமெரிக்காவில் வேலை பார்க்க முடியுமா?

‘‘படிக்கும் போது வாரம் 20 மணி நேரம் வேலை பார்க்கலாம். அதுவும் படிக்கும் கல்வி நிறுவன வளாகத்துக்குள்ளேயே ஆராய்ச்சி உதவியாளர், நிர்வாகப் பிரிவில் உதவியாளர் மாதிரியான வேலைகளைச் செய்யலாம். வெளியே வேலை செய்ய முடியாது. அந்தந்த கல்வி நிறுவனத்தின் விதிகளின்படி வேலை பார்க்கலாம்’’ என்கிறார் ஹீரா. அமெரிக்காவில் போய் படிக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி?

‘‘பெண்களுக்கான தனி கல்லூரிகள் நிறைய இருக்கு. அங்கே சேர்ந்து படிக்கலாம். இப்போ பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கு. ரிசர்ச் ஸ்டூடண்டா இருக்கறாங்கன்னு வச்சுக்குவோம். அவங்க ராத்திரி ரிசர்ச் எல்லாம் முடிச்சிட்டு காலேஜ்ல இருந்து விடுதிக்குப் போகணும்னா அவங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சு தருவாங்க.

‘பிக் அப் அண்ட் டிராப்’னு ஒரு சிஸ்டம் இருக்கு. போன் பண்ணி டைம் சொல்லிட்டா போதும். குறிப்பிட்ட இடத்துல அவங்களை ஒரு வாகனத்துல ஏத்திகிட்டு, சேர வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் சேர்த்துடுவாங்க. பாதுகாவலர்கள் துணைக்கு வருவாங்க’’ என்கிறார் மாயா.

அமெரிக்காவில் படித்தால், அங்கேயே வேலை கிடைக்குமா?


‘‘அதை உத்தரவாதமா சொல்ல முடியாது. படிக்கிற ஸ்டூடண்டோட அறிவு, திறமையைப் பொறுத்து வேலை கிடைக்கலாம். அங்கேயே கேம்பஸ் இன்டர்வியூவெல்லாம் நடக்குது. அவங்க பெர்ஃபார்மன்ஸைப் பொறுத்து வேலை கிடைக்கும். கோர்ஸ் முடிஞ்சதும், ஆப்ஷனல் ப்ராக்டிகல் ட்ரெயினிங்னு (OPT) ஒண்ணு இருக்கு. சயின்ஸ், மேத்ஸ், இன்ஜினியரிங் படிச்சவங்க குறைஞ்சது 12 மாசத்துலேர்ந்து 17 மாசம் வரை அவங்க சார்ந்த துறையிலே ட்ரெயினிங் எடுக்கலாம்.

அதுல தேறினா வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு. இப்போ குளோபல் எஜுகேஷன் ரொம்ப முக்கியமானதா ஆகிட்டிருக்கு. வெளிநாட்ல படிச்சா ஆங்கில அறிவை, திறமையை வளர்த்துக்கலாம், நிறைய தொடர்புகள் கிடைக்கும், அது மூலமா வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. அதைப் பத்தி இப்போ ஏன் நினைக்கணும்? படிக்கணும்னு நினைக்கிறவங்க முதல்ல அதுல கவனம் செலுத்தினாலே போதும். எல்லாம் நல்லதா நடக்கும்’’ என்கிறார் ஹீரா.

அமெரிக்காவில் மருத்துவம் படிப்பது கொஞ்சம் கஷ்டம். இந்தியாவைப் போலவே குறைவான சீட்டுகள். அதுவும் 7 வருடங்கள் படிக்க   வேண்டும். பிளஸ் டூ முடித்துவிட்டு, மருத்துவப் படிப்பில் சேர முன் மருத்துவத் தேர்வு (Pre Medical Test) எல்லாம் எழுத வேண்டியிருக்கும். இங்கே ஒருவர் எம்.பி.பி.எஸ்.

படித்துவிட்டு அங்கே போய் மருத்துவம் படிக்க வேண்டும் என்றாலும் மேலும் 7 வருடம் படிக்க வேண்டியிருக்கும் என்பதால் அதிகமாக யாரும் மருத்துவத்தைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று சொல்கிறார் மாயா. அமெரிக்காவில் படிக்க ஸ்டூடண்ட்ஸ் விசா பெற எளிய வழிமுறைகள் என்னென்ன?

ஸ்டெப் 1

* ஒரு பயனாளி கணக்கைத் (User Account) தொடங்க வேண்டும்.
* டி.எஸ்.160 (ஞிஷி160  Nonimmigrant Visa application) படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஸ்டெப் 2

* விண்ணப்ப கட்டணத்தை எலெக்ட்ரானிக் ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர் (ணிதிஜி) அல்லது மொபைல் போன் அல்லது ரொக்கமாக ஆக்ஸிஸ்
வங்கியில் செலுத்த வேண்டும்.

ஸ்டெப் 3


இதில், இரண்டு நேர்முகத் தேர்வுகள் நடை பெறும். அதற்குத் தயாராக வேண்டும்.

*ஒன்று, விசா அப்ளிகேஷன் சென்டரில் (க்ஷிகிசி) உங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை
சேகரித்து, சரி பார்ப்பார்கள்.
*இரண்டு, அமெரிக்க துணைத் தூதரகத்தில் விசா தொடர்பான நேர்காணல்.
இந்த மூன்று ஸ்டெப்களில் முறையாகத் தேறிவிட்டாலே போதும்... விசா கிடைத்துவிடும்.
மேலும் தகவல்களுக்கு www.ustraveldocs.com/in/ இணையதளத்தைப் பார்க்கவும்.
விசா தொடர்பாக செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிகள்...

* குறிப்பிட்ட அப்பாயின்ட்மென்ட் நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக துணைத் தூதரகத்துக்கோ அல்லது விசா அப்ளிகேஷன் சென்டருக்கோ செல்லக் கூடாது.

* படிப்பு தொடங்கும்   நாளுக்கு 120 நாட்களுக்கு முன்பாக விசாவுக்கு விண்ணப்பம் செய்யக் கூடாது. (மாணவர் சேரவிருக்கும் கல்வி நிறுவனத்தில் என்றைக்கு பாடங்கள் சொல்லித்தர ஆரம்பிப்பார்கள் என்பதை மி20 என்ற படிவத்தில் - அமெரிக்காவில் படிக்கவிருக்கும் மாணவரின் சேர்க்கைச் சான்றிதழ் - குறிப்பிட்டிருப்பார்கள். அதிலிருந்து 120 நாட்களுக்குள் விண்ணப்பம் செய்யலாம்).

* கல்விக் காலம் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது. நேர்முகத்தின் போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்...

விசா அப்ளிகேஷன் சென்டருக்கு போகும் போது...

* செல்லுபடியாகக் கூடிய (Valid) பாஸ்போர்ட்.
* டி.எஸ்.160 - ஒப்புதல் செய்யப்பட்ட பக்கம்.
* நேர்முகத்துக்கு அப்பாயின்ட்மென்ட் உறுதி செய்யப்பட்ட பக்கம்.
* கட்டண ரசீது.

(மேலும் தகவல்கள் பெற http://goo.gl/1WWKgu இணைய பக்கத்தைப் பார்க்கவும்).
விசா தொடர்பான நேர்முகத்துக்கு செல்லும் போது...

* அப்பாயின்ட்மென்ட் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தின் அச்சு நகல். 
* விசா அப்ளிகேஷன் சென்டரில் முத்திரை பதித்துத் தரப்பட்ட டி.எஸ்.160 படிவம்.
* பாஸ்போர்ட்.
* பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்ட மி20 படிவம்.

(கூடுதல் தகவல்களுக்கு http://goo.gl/Fj4ttj இணையதளத்தைப் பார்க்கவும்).
மாணவர் விசா தொடர்பான மேலும் சில முக்கியமான இணையதளங்கள்...

* கல்வி, கல்லூரி, பல்கலைக்கழகம், விசா தொடர்பான சந்தேகங்களுக்கு - chea.org
* வங்கி மற்றும் பணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு - http://goo.gl/qNzMj
* டி.எஸ்.160 தகவல்களுக்கு  http://goo.gl/RQiAJ
* அப்பாயின்ட்மென்ட்... காத்திருப்பு நேரம் தொடர்பாக - http://goo.gl/pS76B
* விசா... காத்திருப்பு நேரம் தொடர்பாக - http://goo.gl/JWEVwv
* புகைப்படம் மற்றும் கைரேகைகள் பதிவுக்கு    http://goo.gl/1WWKgu
* பாதுகாப்பு விதிமுறைகளுக்கு - http://goo.gl/piYcPP
* பொதுவான எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் - http://goo.gl/FUPN9

‘‘ஸ்டூடண்ட் விசா பெறுவது   என்பது கடைசிக் கட்டம். படிப்பு, சேர வேண்டிய கல்வி நிறுவனம், விண்ணப்பம் அனுப்புவது என செய்ய வேண்டிய மற்ற வேலைகளை
18 மாதங்கள் செய்ய வேண்டியிருக்கும். அதை சரியாகச் செய்தாலே விசாவைப் பெறும் நடைமுறை எளிதாகப் புரிந்துவிடும். மாணவர்களின் எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதற்குத்தான் எங்களுடைய அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனம் (ஹிஷிமிணிதி) இருக்கிறதே!’’ என்கிறார் ஹீரா காம்போஜ்.

அமெரிக்காவில்
படிக்கும் போதே வாரம்
20 மணி நேரம்
வேலை பார்க்கலாம்.
கல்வி நிறுவன
வளாகத்துக்குள்ளேயே
ஆராய்ச்சி உதவியாளர்,
நிர்வாகப் பிரிவில்
உதவியாளர் மாதிரியான
வேலைகளைச் செய்யலாம்.

- பாலு சத்யா