வார்த்தை ஜாலம்பார்ட்டிகள் பல விதம்!

விருந்து, பார்ட்டி, விசேஷம், கொண்டாட்டம், கும்மாளம்... இவையெல்லாம் பொதுவான வார்த்தைகள்... குறிப்பிட்ட விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் கொண்டாட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் தனிப்பட்ட பெயர் உண்டு!

A   masquerade

ரோமியோ ஜூலியட் போல பழைய ஆங்கிலப் படம் பார்த்திருந்தா, இந்த வார்த்தை உங்களுக்கு நல்லா  தெரிந்திருக்கும். பழங்காலத்தில் பெரிய அரசர்கள், பிரபுக்கள் பொழுதுபோக்கும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும்போது, ஒரு குறிப்பிட்ட அறிவிப்பும் இருக்கும். ‘எங்க பார்ட்டிக்கு வர்றவங்க எல்லாம் விதம் விதமா முகமூடி அணிந்தோ, மாறுவேஷங்களிலோ வரணும்’. இன்றைக்கு நடக்கும் மாறுவேடப் போட்டி போலத்தான் Masquerade இருக்கும். சின்ன வித்தியாசம்... இது போட்டியாக இல்லாமல் பொழுதுபோக்கும் ஒரு காஸ்ட்லி பார்ட்டியாக இருக்கும். ஆடம்பரமா நடைபெறும் பார்ட்டி.

கல்யாணம், காதுகுத்து, சடங்கு, பெயரிடுதல்... இப்படி நடக்கும் பெரிய விருந்து விசேஷங்கள்தான் Fete.

ஆடல், பாடல் அமர்க்களக் கொண்டாட்டம்!

மேதைகள், அரசியல்வாதிகள், பாடலாசிரியர்கள் மற்றும் பல துறைகளில் சாதித்தவர்கள் ஒண்ணா கூடி அளவளாவி பல விஷயங்களை அலசி பொழுதை களிப்பதற்கு கண்டுபிடித்த பார்ட்டிதான் Salon.

இது வீட்டில் இல்லாமல் Picnic போல வெட்டவெளியில் கொண்டாடப்படும் பார்ட்டி. இந்த Barbeque வகையில் செய்யப்படும் உணவுகளை தயாரித்து அனைவரும் கூடி சாப்பிட்டு மகிழும் வகையில் இந்த பார்ட்டி இருக்கும்.

 அமெரிக்காவில் இது மிகப் பிரபலம். இந்த பார்ட்டி குறிப்பா ஹைஸ்கூல் (நம்மூரு பிளஸ் டூ போல) பட்டம் வாங்கும் நிறைவு விழாவுக்கு முன்னாடி நடக்கும். அதாங்க... நம்ம ஊரில் Farewell party நடக்குமே அதுபோல. இதோட முழுப்பெயர் Promenade. ஸ்டைலா சுருக்கி Promன்னு சொல்லுவாங்க.

சாயங்காலம் மட்டுமே நடத்தப்படும் இந்த பார்ட்டி, தனிப்பட்ட விசேஷங்களுக்காகவே நடக்கும். அதாவது, திருமண நாளோ, பிறந்த நாளோ கொண்டாடும் விதமா எல்லாரையும் கூப்பிட்டு நடத்தினா அது Soiree.

(வார்த்தை வசப்படும்!)