பனீர் லாலிபாப்



என்னென்ன தேவை?

பனீர் துண்டுகள் - 10,
ஃப்ரெஷ் கிரீம் - 1/2 கப்,
பாதாம் விழுது, சோள மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
 தயிர் - 1/4 கப், வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

பனீரை பிஸ்கெட் கட்டரால் விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் தயிர், ஃப்ரெஷ் கிரீம், பாதாம் விழுது, மிளகுத்தூள்,  உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து அதில் பனீரை போட்டு கலந்து 10-15 நிமிடங்கள் மூடி வைக்கவும். அகலமான தட்டில் சோள மாவு,  வெள்ளை எள் இரண்டையும் கலந்து, அதில் ஊறிய பனீரை போட்டு பிரட்டி ஃபிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்து சூடான எண்ணெயில்  பொரித்தெடுத்து கீழே லாலிபாப் குச்சி சொருகி பரிமாறவும்.

குறிப்பு: பாதாம் விழுது செய்ய... 15 பாதாம் பருப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு 1-2 மணி நேரம் ஊறவைத்து  தோலுரித்து  மிக்சியில் நைசாக அரைக்கவும்.