ஒயிட் மில்கி லாலிபாப்
என்னென்ன தேவை?
ஒயிட் சாக்லெட் பார் - 100 கிராம், வெண்ணெய் - சிறிது, சுண்டக்காய்ச்சிய பால் - 50 மி.லி., ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, விருப்ப வடிவ லாலிபாப் மோல்டு மற்றும் குச்சிகள்.
எப்படிச் செய்வது?
ஒயிட் சாக்லெட்டை டபுள் பாயிலிங் முறையில் வெண்ணெய், பால் சேர்த்து உருக்கி ஆறவிட்டு ஏலக்காய்த்தூள் கலந்து சாக்லெட் மோல்டில் ஊற்றி கீழ்புறம் குச்சி சொருகி ஃப்ரிட்ஜில் 15-20 நிமிடங்கள் வைத்து எடுத்து பரிமாறவும்.
|