ரோல் லாலிபாப்



என்னென்ன தேவை?

பனீர் துருவல் - 1/2 கப்,
கோதுமை மாவு - 1 கப்,
உப்பு, எண்ணெய் - சிறிது,
வெதுவெதுப்பான பால் - சிறிது,
 நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
பீனட் பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்,
வாழைப்பழக்கூழ் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?


பாத்திரத்தில் கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரை, பனீர் துருவல், உப்பு போட்டு கலந்து காய்ச்சிய வெதுவெதுப்பான பால் ஊற்றி சப்பாத்தி  பதத்திற்கு பிசைந்து சப்பத்தியாக திரட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.  சப்பாத்தியை நீள நீளமாக பட்டையாக வெட்டிக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழக்கூழ் + பீனட் பட்டர் கலந்து,  அதை சப்பாத்தி துண்டில் தடவி சுருட்டி கீழே குச்சி சொருகி பரிமாறவும்.